Romance நீயே என் இதயமடி
#1
Heart 
நீயே என் இதயமடி 

காலை நேரம் இருள் முழுவதுமாய் விலகவில்லை, கீழ் வானம் இளம் ஆரஞ்சு நிறத்தில், மேகங்கள் அடர்ந்து காண சூரியனோ உறங்கும் மனிதர்களை எழுப்ப உதித்து கொண்டிருந்தான்.....

பறவைகளின் கீச் கீச் சப்தமும் அந்த 
காலையிலும் சாலையில் செல்லும் ஒன்றிரண்டு வாகனங்களின் இரைச்சல் 
உடன் ஆரம்பமாகிறது அந்த நாளின் பொழுது..

கோவில் நகரம் , தூங்கா நகரம், திருவிழா நகரம் என பல பெயர்களை கொண்ட பாசத்திற்கும்  வீீரத்ததிற்கும் பெயர்போன பெருநகரமான மதுரை மாவட்டத்தின்   மத்தியில் ஒரு குறிப்பிட்ட தெருவில் அழகாய்  காட்சியளிக்கிறது அந்த வீீடு .....

பார்ப்பதற்கு ரம்மியமாய் காட்சியளிக்கும்  அந்த வீட்டின் வாசலில் போடப்பட்டுள்ள மாவுக்கோலமும் அதன் நடுவில் வைத்துள்ள
பூசணிப்பூவும் அவர்களின் மனதின் ஈரத்தையும், பண்பாட்டையும் நமக்கு சொல்லுகிறது....

இரண்டு தளங்களை கொண்ட அந்த வீட்டின் கீழ் தளத்தில் ஒரு தனியறை,  சமையலறை மற்றும் கூடத்தை கொண்டது மேல் தளத்தில்
ஒரே ஒரு தனியறை மட்டும் உள்ளது....

அந்த வீட்டின் கூடத்தில் போடப்பட்டுள்ள சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்கும் 50  வயதை நெருங்கும் அவர்தான் சக்தி வேல் இந்த வீட்டின் குடும்ப
தலைவர், இவர் ஒரு பிரைவேட் பேங்கில் வேலை செய்கிறார். என்னதான். படித்து மதிக்கதக்க வேலையில்  இருந்தாலும் நாகரீகமாய் மாறிவரும் இந்த காலத்திலும் தனது  பண்பாட்டை மறக்காதவர் தனது சொந்தங்களை மதிப்பவர் 

பேப்பரின் அடுத்த பக்கத்தை புரட்டுகையில் சமையரையில் இருந்து 
ஒரு சத்தம்....... 

என்னங்க இங்க வாங்க .....கேஸ் சிலிண்டர் தீர்ந்திருச்சு... வந்து வேற 
சிலிண்டர மாத்தி விடுங்க....என்ற சத்தத்தின் சொந்தக்காரி 45 வயதை எட்டிய மீீனாட்சி தேவி. இவர்தான் இந்த குடும்பத்தின் தலைவி..பெயர்க்கு ஏற்றார் 
போல தெய்வ இலட்சணமாக உள்ளவர்... உறவுகள் அனைவரும் தேவி என அழைப்பார்கள். கணவர் மற்றும் பிள்ளைகளை சுற்றியேதான் இவரது வாழ்க்கை..  தனது 
குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் அக்மார்க் குடும்ப பெண்..... 

சக்தி வேல் சிலிண்டரை மாற்றிவிட்டு மீண்டும் கூடத்திற்கு வந்து பேப்பரில் மூழ்கினார்... 

தேவி காபியை போட்டு சமையலறையை விட்டு வெளியே வந்து தனது கணவருக்கு கொடுத்துவிட்டு தனது பிள்ளைகளை எழுப்ப சென்றாள்.... 

டேய் கார்த்திக் டேய் எந்திரிடா.....என தன் அம்மாவின் குரல் கேட்டு விழித்தான் ..... 
விழித்து தன் அம்மாவை பார்த்துவிட்டு 

ம்ம்ம். .... இன்னும் ஒரு 5 நிமிஷம்மா... 

டேய் எந்திரிடா... உனக்கு இதே வேலையா போச்சு என்று சொல்லி விட்டு தேவி சென்றுவிட்டாள்..... 

ஆமாங்க இந்த கார்த்திக்-தான் நம்ம ஹீரோ.... 

டெய்லியும் அம்மா உசுப்பியவுடன்-தான் கண் விழிப்பான்..... 

5 நிமிடம் கழித்து எழுந்து மணியை பார்த்தான் அது 6:30 என காட்டியது.அதை பார்த்துவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்து விட்டான்.. கார்த்திக் பிரெஷ் ஆகி வருவதற்குள் இவனை பற்றி பார்ப்போம்... 

25 வயதை எட்டும் கார்த்திக்  கருமை கலந்த மாநிறமும் 5 1/2 அடிக்கு சற்றே  கூடுதலான உயரம் கொண்டவண் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு இப்ப ஒரு ஆட்டோமொபைல் கம்பெனியில் டிசைன் 
இன்ஜினிரா இருக்கான்ன ரெண்டு வருசமா 
இந்த கம்பெனியில வேலை பார்க்கிறான்... 
இந்த வேலையோட இவர் பாத்த பாக்க போற காதல் வேலைதான் இந்த கதைங்கோ.... 

கார்த்திக் பிரெஷ் ஆகி கூடத்திற்கு வந்தான் ...அங்கு வந்து தனது அப்பாவிற்கு 
குட்மார்னிங் சொல்லிக்கொண்டே அவர் 
பக்கத்தில் அமர்ந்தான்.... 

அவரும் குட்மார்னிங் பா என்று சொல்லி விட்டு காபியை குடித்துக் கொண்டே அந்த 
பேப்பரை படித்து முடித்தார்.... 


அம்மா... காபி என்று சொல்லிக்கொண்டே தனது மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.... 

அப்போது.. குட்மார்னிங்டா கார்த்திக் என்று சொல்லிக்கொண்டே அவனிடம் காபி கப்பை நீட்டினாள் அவனது அக்கா திவ்யா.... 

திவ்யாவிற்கு வயது 28 திருமணமாகி கணவண் சிவா வெளிநாட்டில் பணிபுரிவதால் இவள் தன் பெற்றோர் 
வீட்டில் உள்ளாள்...இவளுக்கு நான்கு வயதில் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.தற்போது அந்த வீட்டின் இளவரசி  தேவதை   என எல்லாமே நான்கு  வயதே ஆகின்ற கவிநயா...

ம்ம் .. குட்மார்னிங்-கா கவிய எங்க என்று கேட்டுக்கொண்டே காபியை வாங்கினான்.. 

அதுவரை தனது பாட்டியுடன் சமையல் அறையில் இருந்த கவி கார்த்திக்  வந்தவுடன்
மாமா என மழழை குரலில் கூவி கொண்டு கார்த்திக்-ன் மேல் தொற்றி கொண்டாள் 
அவளை வாரி அணைத்து கொஞ்சி விட்டு
வேலைக்கு செல்ல தயாராக ஆரம்பித்தான்


கார்த்திக் தனது வேலைகளை முடித்து விட்டு தனது வேலைக்குச் செல்ல 
தயாராகி வந்தான்.... 

அம்மா நான் Office போயிட்டு வந்திடுறேன். 
என்று கார்த்திக் சொல்ல .. 
ம்ம் பாத்து போயிட்டு வாடா ... என்று சமையலறையில் இருந்து வெளியே வந்து வழியனுப்பினாள் கார்த்திக் ன் அம்மா தேவி.... 
தனது அம்மாவிடம் சொல்லிக்கொண்டு தனது FZ பைக்கை கிளப்பி இரண்டு தெரு தள்ளி உள்ள பாலாவின் வீட்டின் முன் வந்து நின்றான்..... 
( பாலாவும் கார்த்திக்கும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். பள்ளி, கல்லூரி, தற்போது வேலை செய்யயும் கம்பெனி வரை ஒன்றாகவே இருக்கிறார்கள்.......) 

டேய் பாலா....என்று கார்த்திக் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே.... 
பாலா எதிரே வந்தான்... 

டேய் வந்துட்டேண்டா கத்தாத...என்று சொல்லிக்கொண்டே ...பைக்கில் ஏறியமர்ந்தான்....பாலா..

-தொடரும்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
நீயே என் இதயமடி - by Arunkumar - 30-04-2019, 02:15 PM



Users browsing this thread: 1 Guest(s)