நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
றுநாள் காலை.

மகேந்திரன் அறையை விட்டு வெளியில் வந்தான்.
கீழே வந்தவன் யுகேந்திரன் வருகைக்காக காத்திருந்தான்.
ஏனோ அவன் வரவில்லை. தானே தம்பியின் அறைக்குச் சென்றான். அவன் சோர்வாக கட்டிலில் படுத்திருந்தான்.
 “என்னண்ணா?”
அண்ணனைக் கண்டதும் சோர்வாகக் கேட்டான்.
“பெரிய இடத்து சிபாரிசைப் பிடிச்சிருக்கே.”
அவனுக்கு என்ன சொல்கிறான் என்று புரியவில்லை.

“என்னண்ணா சொல்றே?”

“உன் படிப்பிற்காக கிருஷ்ணவேணி என்னிடம் பேசினாள். அதைத்தான் சொல்றேன். இந்த படிப்பை நல்லபடியா முடி. அதன் பிறகு பார்க்கலாம்.”

அதன் பிறகுதான் தம்பியைப் பார்த்தான்.

“என்னடா இன்னும் படுத்துக்கிட்டு இருக்கே?”

“என்னவோ தெரியலைண்ணா. முடியலை.”

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே கிருஷ்ணவேணி அறைக்குள் நுழைந்தாள்.

“இந்தாங்க சார்.”

மகேந்திரனிடம் கொண்டு வந்த தேநீரை நீட்டினாள்.

அவனும் வாங்கிப்பருக ஆரம்பித்தான்.

“டேய் சோம்பேறி. இன்னும் எழுந்திரிக்க மனசு வரலையா? எழுந்திரு. இன்னிக்கு முக்கியமான செமினார் இருக்கு. சீக்கிரம் போகனும்னு சொன்னேன்ல. ஊம். கிளம்பு.”

அவனும் முயற்சி செய்தான். எழும்போதே தடுமாறினான்.

“என்னடா தடுமாறே?”

பதறிய மகேந்திரன் அவனைத் தாங்கினான்.

அவன் சும்மா சொல்லவில்லை. ஏதோ உடல்நிலை சரியில்லை என்று புரிந்தது.

அவனைக் குளியல் அறைக்கு அழைத்துச் சென்றான்.

திரும்பவும் படுக்கையில் கொண்டு வந்து மெதுவாக அமர வைத்தான்.

தலையணையில் சாய்வாக அமர்ந்த யுகேந்திரனிடம் தேநீரை நீட்டினாள்.

“வேண்டாம் கிருஷ்.”

அவன் மறுத்தான்.

“காலையில் வெறும் வயிற்றோடா இருப்பே. இந்தா குடி.”

அதட்டலாய் கூறியவாறே நீட்டினாள்.

அவன் வாங்கிப் பருகுவதற்காக வாயருகே கொண்டு சென்றான். குமட்டியது. வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வர வாந்தி எடுத்தான். அவனது தலையைப் பற்றினாள்.

“கொடு நான் பிடிச்சுக்கறேன்.”

மகேந்திரன் சொல்ல அவனிடம் யுகேந்திரனை விட்டுவிட்டு குளியல் அறைக்குச் சென்று கப்பை எடுத்து வந்தாள். அவன் வாயருகே நீட்டினாள்.

“வேண்டாம் கிருஷ்.”

அவன் தடுத்தான்.

“என்ன வேண்டாம். உன்னால் எழுந்திரிக்க முடியலைன்னுதான் கொண்டு வந்தேன். சும்மா சங்கோஜப்படாம இரு.”

மென்மையான குரலில் சொன்னாள்.

குடலே பிடுங்கிக்கொண்டு வருவது போல் அவன் தொடர்ந்து வாந்தியெடுத்தான்.

அவள் எந்தவித அருவருப்பும் இல்லாமல் அவனைத் தாங்கி நின்றது கண்டு மகேந்திரனே ஒரு நிமிடம் அசந்து போனான்.

அவன் வயிற்றில் உள்ளது எல்லாம் வெளிவந்த பிறகு அவன் சோர்ந்துபோய் கட்டிலில் சரிந்தான்.

அவனது வாயைத் துடைத்துவிட்டவள் கீழே தரையையும் துடைக்க ஆரம்பித்தாள்.



“நீ இதெல்லாம் செய்ய வேண்டாம்.”
மகேந்திரன் தடுத்துப் பார்த்தான்.
ஒரே வாடையா இருக்கு சார். அப்புறம் இந்த வாடையினால் மீண்டும் அவனுக்கு வாந்தி வரும்.”

அவனிடம் மறுப்பாய் பேசியவள் தானே தொடர்ந்து சுத்தம் செய்தாள்.
டெட்டாலைக் கொண்டு அறையை சுத்தம் செய்தவள் மகேந்திரனைப் பார்த்தாள்.
“என்ன?”

“சார். அவனுக்கு கொஞ்சம் டிரஸ்ஸை மாத்தி விடறீங்களா?”

தன் தம்பிக்காக அவள் தன்னிடம் கெஞ்ச வேண்டுமா? யோசித்துக்கொண்டே அவள் சொன்னதை செய்ய ஆரம்பித்தான்.

அவள் அறையை விட்டு வெளியேறினாள்.

சிறிது நேரத்தில் வனிதாமணி பதட்டத்துடன் வந்தார்.

“என்னாச்சுப்பா?”

பெரிய மகனிடம் விசாரித்தார்.

அவனும் நடந்ததை சொன்னான்.

அவர் யுகேந்திரனை கவலையுடன் பார்த்தார்.

அவனுக்கு முடியாமல் எந்த மாதிரி பாடுபடுவான் என்று கண்கூடாக பார்த்தவர்தானே? அத்துடன் படுத்தியும் வைப்பான்.

சாப்பிட முடியாமல் அவன் அவதிப்படும்போது மற்றவர்கள் எப்படி நிம்மதியாக சாப்பிட முடியும்?
கிருஷ்ணவேணி சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள். அவள் சொல்லித்தான் வனிதாமணி அங்கே வந்ததே.
கிருஷ்ணவேணி கையில் ஒரு கண்ணாடி தம்ளர் வைத்திருந்தாள்.

“இந்தா யுகா. இதைக் குடி.”

“என்னம்மா?” வனிதாமணி கேட்டார்.

“சாத்துக்குடி ஜூஸ் அத்தே. இப்போதைக்கு அவன் வயிறு காலியா இருக்கு. சாப்பிடவும் முடியாது. வயிறு ரொம்ப வெந்து போய் இருக்குன்னு நினைக்கிறேன். அதுதான் தெம்பாயிருக்குமேன்னு ஜூஸ் எடுத்துட்டு வந்தேன்.”

ஆனால் யுகேந்திரன் அதையும் வேண்டாம் என்று மறுத்தான்.

“இப்படித்தான்மா. அவன் முடியவில்லை என்று படுத்துவிட்டால் போட்டு படுத்தி எடுத்துவிடுவான்.”

கவலையுடன் சொன்னார்.

“நான் பார்த்துக்கிறேன் அத்தே.”

அவரிடம் நம்பிக்கையுடன் சொன்னவள் பிடிவாதமாய் கையில் வைத்திருந்த ஜூஸை அவன் வாயருகே கொண்டு சென்றாள்.

அவள் விடமாட்டாள் என்று தெரியும்.

“திரும்பவும் வாந்தி வரும் கிருஷ். எனக்கு வேண்டாம்.”

“வெறும் வயித்தோட இருந்தா அதுதான் ரொம்ப படுத்தும். நீ வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை. கொஞ்சமாவது வயித்துக்குள் போகும்ல. அடம்பிடிக்காம குடி.”

அவனைக் கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்தாள்.

“அத்தே. நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க.”

அவர் கவலையுடன் பார்த்துக்கொண்டே சென்றார்.

இதை எல்லாம் மகேந்திரன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பிறகு தானும் அறையை விட்டு வெளியேறினான்.

சிறிது நேரத்தில் மருத்துவர் வந்தார். மகேந்திரன்தான் அவரை அழைத்திருந்தான்.

அவனை பரிசோதனை செய்துவிட்டு வேக்காளம்தான் என்றுவிட்டு அதற்கான மருந்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்துவிட்டு சென்றார்.

மகேந்திரன் வாங்குவதற்காக சென்றான்.

“கிருஷ். நீ கிளம்பு. இன்னிக்கு செமினாருக்காக நீ எத்தனை கஷ்டப்பட்டு தயார் செய்திருக்கே.”

ஆனால் அவள் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.

“கிருஷ். உன்கிட்டதான் சொல்றேன்.”

“எனக்கு காதில் விழுந்தது. உன்னை இந்த நிலைமையில் விட்டுவிட்டு போனால் என்னால் எப்படி செமினார்ல கலந்துக்க முடியும். நான் போகலை.”

அதன் பிறகு அவன் எத்தனை சொல்லியும் அவள் கேட்கவில்லை.

“எனக்கு உடல்நிலை சரியாக எத்தனை நாட்கள் ஆகுமோ? அதுவரைக்கும் நீயும் என்னோடவே இருப்பியா?”



“ஆமாம். இந்த செமஸ்டர்ல நாமதான் லீவே போடலையே. அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த மாதிரி சமயத்தில் நீ எந்த மாதிரி படுத்துவேன்னு அத்தை சொல்லியிருக்காங்க. அவங்களால் உன்னை சமாளிக்க முடியாது. அவங்களை நீ ஏமாத்திடுவே. அதனால் நான் கூடவே இருக்கப்போறேன். நீ ஒழுங்கா நான் வேளாவேளைக்குக் கொடுக்கிறதை நீ சாப்பிடனும். என்ன சரியா?”
“சரி.”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 30-04-2019, 12:24 PM



Users browsing this thread: 23 Guest(s)