30-04-2019, 12:09 PM
அவெஞ்சர்ஸ்க்கு தானோஸாக மாறிய காஞ்சனா 3; வசூல் எத்தனை கோடி தெரியுமா?
உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 5000 கோடி வசூலை முதல் வாரத்தில் நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் முதல்வாரத்தில் 180 கோடி வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஈட்டியுள்ளது.
ஆனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அவெஞ்சர்ஸ்க்கு காஞ்சனா 3 படம் வில்லன் தானோஸாக மாறியுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 கடந்த 19ம் தேதி வெளியானது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு பாடல்களில் மட்டும் ஆடுவடுவதற்காக ஓவியா, வேதிகா மற்றும் நிக்கி டம்போலி நடித்திருந்தனர். மேலும், கோவை சரளா, தேவதர்ஷினி, சூரி, ஸ்ரீமன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
கடந்த 10 நாட்களில் இந்த படத்தின் மொத்த வசூல் 130 கோடியை தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
காஞ்சனா 2 படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை புரிந்த நிலையில், விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்ட காஞ்சனா 3 படம் காஞ்சனா 2 வசூலை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
பேட்ட, விஸ்வாசம் படங்கள் இந்த ஆண்டு 100 கோடி வசூலை தாண்டியுள்ள நிலையில், காஞ்சனா 3 அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.