Fantasy உறங்காத விழிகள்
#22
விஷ்ணுவின் பார்வையில் கதை தொடரும் .....

அவன் கையை நீட்டி கொண்டே இருக்க  கை கொடுக்கலாமா ?வேண்டாமா?  என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன் .
ஒருவேளை இவன் அவனாக இருப்பானோ? என்றும் சந்தேகம் எழுந்தது மனதில்.
அவன் புன்னகையுடன் கை நீட்டிக் கொண்டே இருந்தான்.
வேறு வழியில்லாமல் அவனுடன் கைகுலுக்க  வேண்டியிருந்தது .

"என்ன சார் என்ன பத்தி தப்பா நினைச்சுட்டீங்க லா? இவ்வளவு இருக்கைகள் இருக்கும்போது ஏன் உங்ககிட்ட வந்தேன் என்று ....

"அதுவந்து அப்படி இல்ல ...

"மூணு மணி நேரப் பயணத்தில் சரியா தூங்க முடியாது ....எனக்கு பேசிக்கிட்டே வர பிடிக்கும் ...இங்க இருக்கிறவங்க   ரொம்ப வயசா இருக்காங்க ...தான் பேசிட்டு இருக்கலாம்னு ... பிடிக்கலைன்னா சொல்லுங்க நான் வேற சீட்டுக்கு போயிடுறேன் ...

"நோ ப்ராப்ளம் ப்ரோ ..."நானும் புன்னகைத்தேன்.

அதன்பிறகு இருவரும் சென்னை செல்லும் வரை பேசிக்கொண்டே சென்றோம்.
வழிநெடுக மழை கனமழை ....குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாக தான் சென்னை வந்து சேர்ந்தோம்.

பாலாவுக்கு இருபத்தி ஒரு வயது என்னில் பாதி. பயண முடிவில் இருவருமே நண்பர்களாகி விட்டோம்.
கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.
பாலா மழையைப் பார்த்து ரொம்பவே  தயங்கிக் கொண்டு இருந்தான் .

"என்ன பிரச்சனை பாலா?
"அது வந்து சார் ...இந்த மழையில் என் ஏரியாவுல ரொம்ப தண்ணீர் தேங்கி நிற்கும் ஆட்டோ டாக்சி எதுவும் வராது ...அதுதான் என்ன பண்றதுன்னு   யோசிக்கிறேன்....

நான் எதுவுமே யோசிக்காமல் உடனே சொன்னேன் ...

"என் பிளாட்டுக்கு வா.. பாலா பக்கம்தான் "

அவன் முதலில்  தயங்கி பிறகு சம்மதித்தான் .

ஏற்பட.இருக்கும்  எதிர்விளைவுகளை பற்றி யோசிக்காமல் ஆட்டோ பிடித்து என் வீட்டுக்கு சென்றோம்
[+] 4 users Like Fantasyboy's post
Like Reply


Messages In This Thread
RE: உறங்காத விழிகள் - by Fantasyboy - 20-11-2021, 11:12 AM



Users browsing this thread: 5 Guest(s)