18-11-2021, 04:24 AM
எங்கள் ஊர் கிழக்கு மேற்க்காக நான் தெருக்கள்,ஐம்பது குடும்பங்கள்.ஊருக்கு மேற்ககால வயல்கள்.வடக்கு பக்கம் தோட்டம் துரவு மேட்டாங் காடு.தெற்கு பக்கம் கொள்ளிடக் கரையை ஓட்டி கிழக்கு நோக்கி ரோடு. அது ஊரை தாண்டி வடக்கா திரும்பி இரண்டு கிலோமீட்டர் போணால் ஜெயம் கெண்டம் செல்லும் மெயின் ரோட்டில் சேரும்.அங்குதான் எங்கள் ஊருக்கு பஸ் வரும்.அந்த இடத்தில் சிணிமா கொட்டகை உள்ளது.ஊருக்கு வடக்கு பக்கம் காலனி தெரு மற்றும் கிழக்கு பக்கம் கீழ சாத்தாம்பாடி.சுமார் இருபது குடும்பங்கள் உள்ள வேற ஜாதி ஊர்.ஆனால் நாங்கள் மாமன் மச்சான் என்று அழைத்து ஒற்றுமையாக வாழ்வோம்.இதில் எனது வீடு வடக்கு தெரு.தெற்க்கு பக்கம் கொள்ளிடக் கரைக்கும் ரோட்டுக்கும் இடையில் ஊராட்சிய ஒன்றிய துவக்க பள்ளி மற்றும் சிறிய அம்மன் கோயில்.இதுதான் எங்கள் ஊர் அமைப்பு.