Adultery என்று தீருமோ இந்த மயக்கம்...
#36
மீட்டிங் துவங்க அரைமணி முன்பே வைஷாலி , வெங்கட்டின் அலுவலகத்திற்கு வந்துவிட்டாள். மூன்று மாடி கட்டிடம் அது. காரை பார்க் செய்தவள், அலுவலகத்திற்குள் செல்வதற்கு முன், காரிலேயே தனது கைப்பை எடுத்து ஒப்பனையை கொஞ்சம் திருத்திக் கொண்டாள்.பின் லிப் ஸ்டிக் எடுத்து கொஞ்சமே கொஞ்சம் வைத்தது தெரியாத அளவிற்கு வைத்துக் கொண்டு, பைல் மற்றும் லேப்டாப் பேக் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

ரிஷப்ஷனுக்கு சென்று விசாரிக்க . அவர்கள் அவளை மூன்றாவது மாடியில் இருந்தும் பர்வீனின் அறைக்கு அனுப்பினார்கள். பர்வீனும் அவளை வரவேற்று தனியாக ஒரு அறையில் அமர வைத்து, மற்ற இரு நிறுவனங்களின் ப்ரசெண்டேஷன் முடிந்தவுடன் அவள் ப்ரசெண்ட் செய்யலாம் என சொல்லி சென்றாள்.

அடுத்த ஒரு மணி நேரம் நேரத்தை கடத்துவது மிகக் கடினமாக இருந்தது. இனியும் கூப்பிடவில்லை எனில் கிளம்பலாம் என அவள் நினைக்கும் நேரத்தில் அவளை அழைத்தார்கள். மீட்டிங் அறையில் எப்படியும் ஒரு ஐந்து ஆறு பேராவது இருப்பார்கள் என நினைத்தவளுக்கு முதல் அதிர்ச்சி. அங்கிருந்தது இரண்டே நபர்கள்தான். ஒன்று வெங்கட் மற்றொன்று பர்வீன்

முதலில் சுருக்கமாய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவளது லேப்டாப்பை ப்ரொஜெக்டரில் கனெக்ட் செய்து விளக்கத் துவங்கினாள். எதனால் தங்களது மென்பொருள் சிறந்தது என கூறியவள், மாக் அப் எனப்படும் டம்மி ஸ்க்ரீன்களை கொண்டு வெங்கட்டிற்கு விளக்கினாள்/

ஒவ்வொரு முறை வெங்கட்டை பார்க்கும் பொழுதும் அவனது கூறிய துளைக்கும் பார்வை அவளை ஏனோ சங்கடத்தில் ஆழ்த்தியது. அந்தப் பார்வையில் எனோ எந்த ஒரு உயிர்ப்பும் இல்லாமல் இருந்தது அவள் மனதை உறுத்தியது. ஒரு ஆணின் பார்வை ஒன்றாய் பாசமாய் , காதலாய் இருக்கணும் இல்லையெனில் வெறுப்பாய் இருக்கணும். இப்படி ஏதுமில்லாமல் ஒரு வெற்றுப் பார்வை ஏன் என அவளுக்கு புரியவில்லை. இருந்தும் அதை பற்றி அவள் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. அல்லது அலட்டிக்கொள்ளவில்லை என நினைத்துக் கொண்டாள்.

அவள் நினைத்ததைவிடவே மீட்டிங் நன்றாக சென்றது. அதன் பின் அரை மணி கழித்து மீண்டும் அவளை அழைத்தனர். இம்முறை வெங்கட்டின் அறைக்கு.

"வெல்கம் மிஸ். வைஷாலி !! "
" தாங்க்ஸ் வெங்கட் !!

"இந்த ப்ராஜெக்ட் உங்களுக்கு அலாட் பண்ணி இருக்கோம். மற்ற கம்பெனியை விட உங்களது விலை அதிகம்தான். ஆனா நீங்க மட்டும்தான் புதிதாய் செய்வதை பற்றி சொல்லி இருந்தீங்க. அவங்க ஏற்கனவே இருந்ததை மாற்றி தருவதை பற்றித்தான் பேசினாங்க . அதுதான் உங்களுக்கு அலாட் பண்ண மெயின் ரீஷன் "

"அதே மாதிரி நாங்க மற்ற கம்பெனி மாதிரி முடிஞ்சவுடன் பணம்லாம் சொல்ல மாட்டோம். ஸ்டார்ட் பண்றப்பவே ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்குவோம். சோ அது உங்களுக்கு வசதியா இருக்கும்.

எல்லாத்துக்கும் மேலே ஒரு கண்டிஷன் இருக்கு"

" சொல்லுங்க வெங்கட் "

" இந்த ப்ராஜெக்ட் நீங்கதான் எங்க கம்பெனி கூட கோ ஆர்டினேட் பண்ணனும். வேற யார் பண்றதா இருந்தாலும், ப்ராஜெக்ட் கேன்சல். இதுக்கு ஓகேன்னா இப்பவே அக்ரிமெண்ட் சைன் பண்ணலாம் "

சில நிமிடங்கள் யோசிச்ச வைஷாலி அதற்க்கு சம்மதித்தாள்
[+] 4 users Like charuchennai's post
Like Reply


Messages In This Thread
RE: என்று தீருமோ இந்த மயக்கம்... - by charuchennai - 11-11-2021, 04:38 PM



Users browsing this thread: 1 Guest(s)