Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
#49
அணித்தேர்வில் தொடர்ந்து தப்பும் தவறுமாக செயல்பட்டு வரும் ரவிசாஸ்திரி, விராட் கோலிக்கு சுனில் கவாஸ்கர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கத் தொடரிலிருந்து அணித்தேர்வில் ஏகப்பட்ட தவறுகளைச் செய்து விட்டு அதனை நியாயப்படுத்தி வேறு பேசி வருகிறார் விராட் கோலி. ரவிசாஸ்திரி கடந்த கால அணிகளை மட்டம் தட்டி தன் தவறுகளை மறைக்கப்பார்க்கிறார். பெர்த் டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை 139 ரன்களுக்கு எடுத்துள்ளார் ஹனுமா விஹாரி அவரை விடவும் சிறப்பாக அவருக்கு சாதகமாக இல்லாத பிட்சில் வீசினார்.

நேதன் லயன் அதிவேக பிட்சில் 8 விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இதனையடுத்து ஸ்பின்னரை சேர்க்காதத், கே.எல்.ராகுலை அணியில் வைத்திருப்பது என்று சுனில் கவாஸ்கர் ரவிசாஸ்திரி, விராட் கோலி மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் ஆஜ்தக் தொலைக்காட்சிக்கு சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

நான் இதை சில காலமாகப் பார்த்து வருகிறோம். அதாவது தென் ஆப்பிரிக்காத் தொடரிலிருந்து அணித்தேர்வு தவறுகளைப் பார்த்து வருகிறோம். இது அணியை பாதிக்கிறது, அணி தோல்வி அடைகிறது, வெற்றி பெற வேண்டிய போட்டியெல்லாம் அசட்டுத்தனமான அணித்தேர்வினால் தோல்வி அடைகிறோம்.

அணிச்சேர்க்கையில் உள்ள ஓட்டை அடைக்கப்பட வேண்டும். ஓட்டையை அடைத்தால்தான் அடுத்த 2 போட்டிகளை வெல்ல முடியும். ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாத இந்த பலவீனமான ஆஸ்திரேலிய அணியை வெல்ல முடியாவிட்டால் இந்த கேப்டன், இந்தப் பயிற்சியாளர்கள் கூட்டம் ஆகியோரினால் என்ன பயன் என்பதை நாம் தொடர் முடிந்தவுடன் கணித்தாக வேண்டும்.

தொடருக்கு ஏன் 19 வீரர்களை அனுப்ப வேண்டும், ஏன் இன்னும் 3 வீரர்களைச் சேர்த்து அனுப்பி 2 அணியாக அனுப்ப வேண்டியதுதானே? பணக்கார வாரியம் பிசிசிஐ அதற்காக 40 வீரர்களை வேண்டுமானாலும் அனுப்பலாமா?

விளையாடுபவர்களைத் தவிர மற்றவர்கள் ஏன் இங்கு வந்து ரஞ்சி டிராபியில் ஆடக்கூடாது? இதனால் உள்நாட்டு கிரிக்கெட் பயனடையும். மேலும் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளிக்காத வீரர்க்ளுக்கு வாய்ப்பளிக்கலாமே.

கே.எல்.ராகுல் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவே வாய்ப்பில்லை. அவர் கர்நாடகாவுக்கு ரஞ்சியில் ஆட வேண்டிய வீரர். அவர் பார்மில் இல்லை என்பதல்ல விஷயம், அவர் அங்கு இல்லவேயில்லை. நான் கூறுவது தவறு என்று அவர் நிரூபித்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் விளாசியுள்ளார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 19-12-2018, 10:13 AM



Users browsing this thread: 102 Guest(s)