03-11-2021, 09:23 PM
ஐடிஐ முடித்து விட்டு கல்லூரி வேலை விஷயமாக ராஜா சாரின் எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்றிருந்தேன் செல்லும் வழியில் என்னை யாரோ ஒருவர் சார் சார் என்று கூப்பிடும் சத்தம் கேட்டு பைக் ஐ நிறுத்தினேன். குரல் வந்த திசையை பார்த்த பொழுது அங்கே தண்டபாணி நின்று கொண்டிருந்தான். நான் அவனை அடையாளம் கண்டு கொண்டாலும் மறந்துவிட்டது போல் அவரைப் பார்த்தேன் தண்டபாணி எனது அருகே வந்து என்ன சார் என்னை ஞாபகம் இல்லையா மறந்து போச்சா என்று கேட்டான். நான் வேண்டுமென்றே சரியாக ஞாபகம் இல்லையே நீங்க என்றவுடன் சார் அருவியிலே நாம குளிதோமே ஞாபகம் இருக்கா என்று என்று கேட்டார். நான் அப்போ தான் ஞாபகம் வந்தது போல ஆமா தண்டபாணி எப்படி இருக்கீங்க என்று கேட்டேன். அதற்கு நல்லா இருக்கேன் சார் உங்கள தான் பார்க்கணும் னு நினைச்சேன் ரொம்ப நாளா,இப்பதான் உங்களை கண்டுபிடிக்க முடிந்தது என்றார்.பின்பு சரியாக பேச முடியாமல் எனது போன் நம்பரை மட்டும் வாங்கி விட்டு கிளம்பி சென்றார். எனக்கு பழைய ஞாபகங்கள் லேசாக வந்தது ஆனாலும் கடையில் முக்கியமான வேலை இருந்ததால் வேலைக்கு போய்விட்டேன்.