Incest PDF STORIES - 18+ நாவல்கள், கதைகள் PDF+STORIES
காற்றில் கரைந்த உண்மைகள்.. தொடர்ச்சி...


அதே நாளில் அதே நேரத்தில் வயது ஐம்பதை கடந்த ராதாவும்அதே பாடலை கேட்டு பழைய நினைவுகளில் மூழ்கி கண் கலங்கினாள் .”அம்மா” என்றகுரல் கேட்டு கண் விழித்த அவளின் எதிரில் அவள் மகன் தனஞ்செயன்நின்றுகொண்டிருந்தான்..”அம்மா! உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம்பேசவேண்டும்” என்று ஆரம்பித்தவன் தாயின் கண் கலக்கமுற்றிருப்பதை பார்த்து “என்னம்மா? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டான் .. “ஒன்றும் இல்லையப்பா கொஞ்சம் தலைவலி அம்ருதாஞ்சனம் இருந்தா கொண்டுவா தூங்கினா சரியாயிடும்….சரி என்ன சொல்ல வந்தே சொல்லு” என்றாள். தனஞ்சயன் “அம்மா நீங்க மொதல்ல கொஞ்சம் ஒய்வு எடுத்துகோங்க காலைல பேசிக்கலாம்” என்றுசொல்லி..அவளிடம் அம்ருதாஞ்சனத்தை தந்துவிட்டு சென்று விட்டான். கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டே அவளும் படுக்கையறை சென்றாள். பழைய சிந்தனைகளில்மனம் மீண்டும் கலக்கமுற்றது..”எத்தகைய இனிய நாட்கள் அவை? .கோபியுடன் கழித்த அந்த இனிய நாட்களை.எளிதில் மறக்க முடியுமா?….அந்தஸ்து என்ற போர்வையில் தந்தையின் முரட்டுக்கரங்கள் அவர்கள் காதலுக்கு காலனாக வந்து விழுந்தது. தந்தையின் கால்களில் விழுந்து கெஞ்சினாள். கதறினாள். கனல் தெறிக்கும் வார்த்தைகளும் ..பளார் பளார் என்ற அறைகளும் தான் பதிலாக கிடைத்தன. தன்னை முழுமையாக கோபியிடம் ஒப்படைத்துவிட்டதை சொல்லியும் பலனில்லை. மூன்று முறை தற்கொலைக்கு முயன்று தோற்றாள்..மருத்துவரிடம் வலுக்கட்டாயமாக அழைத்துசென்று உடலை சுத்தம் செய்து ஆறு மாதங்களில் ரகுநாத்திற்கு கட்டாயதிருமணம் செய்து வைத்தனர். உணர்வுகள் முற்றிலும் செத்துவிட அவளும்ஆட்டத்தை நிறுத்தினாள். கடமைக்காக கணவருடன் வாழ்ந்து தனஞ்சயனைபெற்றாள். கோபியை போலவே தனஞ்சயனுக்கும் இனிய குரல் வளம் இருப்பதை கண்டு லேசாக அதிசயித்து பிள்ளைக்கு முறையாக சங்கீதம் பயிற்றுவித்திருந்தாள்…அவன் பாட பாட அதன் இசையில் ஆறுதல் பெற்றாள்.இருப்பினும் மீண்டும் சலங்கையை தொட அவள் மனம் மறுத்தது. ரகுநாத் காலமான பின் தொழிலின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று மேலும் சற்று ஆறுதல் அடைந்தாள். மறுநாள் சிற்றுண்டி உண்ணும் வேளையில் தனஞ்சயனை பார்த்து ராதா “தனஞ்சயா நேத்து என்னவோ சொல்லனும்னு சொன்னியே. என்ன அது?” என்று கேட்டதும் தனஞ்சயன் “ஆமாம்மா…நான் ஒண்ணு சொல்லுவேன் தயவுசெய்து தப்பா நினைக்காதீங்க.” என்று சொன்னவுடன் “என்ன இருந்தாலும் சொல்லு..பீடிகை எல்லாம் பலமா இருக்கே என்ன அது.” என்று கேட்டாள்” “அம்மா நான் ஒரு பொண்ணை லவ் பண்றேம்மா. அவளை தான் கட்டிக்கணும்னு ஆசை படறேம்மா” என்று கெஞ்சளுடனும் கொஞ்சலுடனும் சொன்னான். ராதா லேசான அதிர்ச்சியுடன் “யாருடா அந்த பொண்ணு? என்ன படிச்சிருக்கா அவங்க வீட்ல இதுக்குஒத்துப்பாங்களா?” என்று தொடர்ந்து கேள்விகள் கேட்டாள். தனஞ்சயன் “அம்மா அவபேரு வத்சலா. அப்பா பேரு கோபிநாத் அவங்களும் வசதியானவங்கதான்..அவளுக்குநாட்டியம் கூட நல்லா வரும் ..உங்களுக்கு நாட்டியம் ரொம்ப பிடிக்கும்இல்லையாம்மா?” என்று படபடவென்று சொல்லி முடித்தான். இதை கேட்டதும் ராதாவின் மனதில் ஆயிரம் மின்னல்கள் மின்னின..தலையை பிடித்துக்கொண்டு கண்களை மூடிய தாயை பார்த்து பதறிய தனஞ்சயன் “என்னம்மா மறுபடி உடம்பு சரியில்லையா?” என்று அக்கறையுடன் விசாரிக்க அவள் சமாளித்தவளாய் “இல்லப்பா வேற என்ன விவரம்? அதை சொல்லு” என்றாள். தனஞ்சயன் ஆவலுடன் வத்சலாவின் இரண்டு புகைப்படங்களை காண்பித்தான். அவற்றில் ஒன்று தன்னுடைய தந்தை முன் வத்சலா நடனமாடுவதை போல் ஒரு போட்டோ இருக்க அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் ராதா. “இந்த . போட்டோ பின்னாடி அவங்க வீட்டு விலாசம் போன் நம்பர் எல்லாம் இருக்கு.”..என்று சொன்ன மகனை கனிவுடன் பார்த்தவளாய்..”சரிப்பா நீ விரும்பர பொண்ணு நம்ப குடும்பத்துக்குஏத்தவளா இருந்தா நான் மறுக்கவா போறேன் ..நீ போய் உன் வேலைகளை பாரு” என்றுசொல்லிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தாள்…”தன் பழைய காதலன் கோபிநாத்தின் மகளையா என் மகன் விரும்புகிறான்? கடவுளே இது என்ன விதியின் விளையாட்டு.? இவர்கள் காதலை ஏற்பதா? நிராகரிப்பதா? நிராகரித்தால் தான் பெற்ற துன்பத்தைதானே தனஞ்சயனும் ..வத்சலாவும் காலம் காலமாக அனுபவிப்பார்கள்….தனஞ்சயன் ரகுநாத்திற்கு பிறந்தவன் தான். இருந்தாலும்இந்த புதிய உறவினால் பழைய உறவின் பதிவுகள் எப்படி பரிணமிகுமோ தெரியவில்லையே..கடவுளே! இது என்ன சோதனை? என்று எண்ணி எண்ணி குழம்பினாள். ஒரு முடிவுக்கு வந்தவளாய் சாயுங்காலம் ..மகன் சொன்ன தொலை பேசிக்கு போன் செய்தாள். மறுமுனையில் “எஸ்..கோபிநாத் ஹியர்.”. என்ற கம்பீரமான ஆண் குரலைகேட்ட ராதாவின் மனம் படபடத்தது… ஆம் அதே இனிய குரல்..வயதானாலும்குரல் மாறவில்லை..எதிர்முனையில் பேசுவது என்னை மயக்கிய அதே கோபிநாத்தின் குரல் தான்… ராதா…………(மனம் துடிக்க உணர்ச்சிகள் கொப்பளிக்க).. . நான் ராதா பேசறேன் நல்லா இருக்கீங்களா கோபி ..? (இதை கேட்டதும் கோபிநாத்தின் மனத்திலும் ஆயிரம் மின்னல்கள்..உணர்ச்சிக்கொந்தளிப்புகள்…குரல் லேசா நடுங்க) கோபிநாத்….யாரு ராதாவா? (மிகுந்த உணர்ச்சிப்பெருக்குடன்),,ராதா ராதா . எப்படிம்மா இருக்கே. எவ்வளவு நாளாச்சு உன்ன பார்த்து பேசி.. என் ஞாபகம் இப்போதான் உனக்கு வந்ததா…(அவர் குரல் தொண்டையை அடைத்தது) ராதா (விசும்பலும் அழுகையுமாக தன தந்தையின் கொடுமைகளை எல்லாம் விவரித்தாள்…பின்னர்} என்ன மன்னிச்சுடுங்க கோபி இந்த உயிர் இன்னும் ஏன் போகல்லேன்னு நான் எண்ணி எண்ணி துடிக்காக நாள் இல்லை. அன்னிக்கு என் வீட்டிற்கு வந்ததும் நீங்கள் விளையாட்டாக பாடிய பாட்டு எவ்வளவு உண்மையாயிடுச்சு பாத்தீங்களா?. (நெஞ்சு வெடிக்க மீண்டும் விசும்பினாள்) கோபிநாத்……(குரல் தழுதழுக்க)..ஆம் ராதா என் நாக்குல அன்னிக்கு சனி உக்கார்ந்துவிட்டது …இப்போ வருந்தி என்ன செய்ய..இப்போ இவ்வளவுநாள் கழிச்சு உன்கூட பேசறது எவ்வளவு ஆறுதலா இருக்கு தெரியுமா?..நேத்து கூட உன்ன பத்திதான் நெனச்சுட்டே தூங்கினேன். ராதா… நானும் நேத்து ராத்திரி உங்கள நெனச்சேன். இன்னிக்கு தான் உங்க நம்பர் எனக்கு கிடச்சுது.. கோபிநாத் யார் கொடுத்தாங்க ?… ராதா (லேசான குறும்புடன்)உங்க மகளை கேளுங்க சொல்லுவா. கோபிநாத். வத்சலாவா? அவள உனக்கு தெரியுமா? ராதா………….போட்டோல தான் பாத்திருக்கேன். எனக்கும் இன்னிக்கு காலைலதான் தெரியும்..உங்க பொண்ணும் என் மகன் தனஞ்சயனும் ஒருவரை ஒருவர் காதலிக்கறாங்க. கோபிநாத் (பெரும் மனக்குழப்பத்துடன்)..இது என்ன ராதா புதுக்கதை..அட கடவுளே!.. ராதா!… விதி நம் வாழ்க்கையில் எப்படி எல்லாம் விளையாடுகிறது பார்த்தாயா..இந்த புதிய உறவு…… (என்று ஏதோ சொல்ல வந்தவனை ராதா இடை மறித்து) ராதா “நான் எல்லாவற்றையும் யோசித்துவிட்டேன்…தனஞ்சயன் எனக்கும் காலம் சென்ற என் கணவர் ரகுநாத்திற்கும் பிறந்தவன். வாழ்க்கையில் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தில் நம் இருவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. இளமை வேகத்திலும் மணந்து கொள்ளப்போகிறோம் என்ற எதிபார்பிலும் நம்பிக்கையிலும் தான் அன்று நாம் அப்படி நடந்துகொண்டோம். இப்போ நம் பிள்ளைகளின் எதிர்கால மகிழ்ச்சி நீங்கள் சொல்லும் பதிலில் தான் இருக்கிறது. நம் இருவருக்கும் வயதாகி விட்டது. நாம் பொறுப்புடன் முடிவெடுத்து நடந்து கொள்ளவேண்டிய நேரம் இது. கண்டிப்பாக நீங்கள் என் அப்பாவை போல் செயல் படமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.என் பிள்ளைக்கு உங்கள் பெண்ணை கொடுக்க சம்மதமா.? சொல்லுங்கள், கோபி” (இதை சொல்லும்பொழுது ராதாவின் குரல் தழுதழுக்க மனமுடைந்து அழுதுவிட்டாள்) கோபிநாத் (உணர்ச்சிகள் கொந்தளிக்க) ஓ ராதா..உன் மனம் கலங்க நான் ஒருகாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன் ..(மிகுந்த யோசனையுடன்}..என் மகளும் உன்னைப்போல ஒரு பெண் தானே! கடந்த காலத்தில் நாம் தற்காலிகமாக பெற்ற சுகத்தை வருங்காலத்தில் மறந்து அதை நிரந்தரமாக நம் பிள்ளைகள் இருவருக்கும் தருவோம். நாம் நிரந்தரமாக பெற்றுள்ள துன்பத்தை அவர்கள் கவனத்திற்கு கூட கொண்டு செல்லவேண்டாம்.அவை நம்முடனேயே மறைந்து போகட்டும் .(ஹ்ம்ம் என்று சொல்லலி சிரித்தார்}. ராதா என்ன சிரிக்கிறீங்க….. கோபிநாத் இளமையே வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிய தமிழ் மூதாட்டி ஔவையார் செய்யுள் ஒன்று நினைவுக்கு வந்தது சிரித்தேன்… ராதா அன்னிக்கு என் கூட தனிய இருக்கும்போதே புராணத்து உதாரணம் எல்லாம் சொன்னீங்க..இப்போ கேக்கணுமா? சொல்லுங்க அது என்ன செய்யுள்? கோபிநாத் ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். ராதா அடேயப்பா எவ்வளவு உண்மை…நாம நெனச்சது நடக்கறது இல்லை…நினச்சு பாக்காதது நடக்கறது…இதுதானே இந்த கவிதையின் சாரம் கோபிநாத் ஆமா…ஆமா…நம்ம வாழ்க்கைல புயலாக வீசிய விதி என்னும் பேய்க்காற்று நம் மக்களின் வாழ்க்கையில் தென்றலாக வீசுகிறது. இயற்கையின் போக்கே அலாதியானது தான்..அதன் வழியில் செல்வது தான் அனைவருக்கும் நல்லது. (கண்களை துடைத்துக்கொண்டு) நானும் மனப்பூர்வமா என் மகளை உன் மகனுக்கு தருகிறேன். சரிங்களா சம்பந்தியம்மா. ராதா (நெகிழ்ச்சியுடன் )..மிக்க நன்றி கோபி..ஒரு நல்ல நாள் பார்த்து நீங்கள் உங்கள் மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வாங்க இருவருக்கும் நிச்சயம் பண்ணிவிடலாம்.கோபிநாத் நாளை மறுநாள் புதன் கிழமை நல்ல நாள்தான் நாங்கள் வருகிறோம்…நல்லதை சீக்கிரம் முடித்துவிடவேண்டும் என்று சொல்வார்கள் ராதா.. கண்டிப்பா வாங்க நானும் என் மகனும் காத்துக்கொண்டு இருப்போம்…(மறுமுனையில் தொலைபேசி வைக்கப்பட்டது) வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய வத்சலாவை கோபிநாத் தீர்கமாக பார்த்தார். அவர் பார்வையின் பொருள் புரியாத வத்சலா..”அப்பா” என்று அழைக்க “வத்சலா …நீ இன்னும் குழந்தைன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்..நீ பெரிய மனுஷின்னு நிருபிச்சுட்டே..”..சற்று நிறுத்திவிட்டு மகளை பார்த்து “இப்போ தான் தனஞ்சயனோட அம்மா பேசினாங்க ” என்று சொல்லிவிட்டு மீண்டும் மகளை பார்த்தார்…பின் தன் காலை கட்டிக்கொண்டு “அப்பா” என்று அழைத்து பேச முயன்றவளை தடுத்து.அன்பு கலந்த ஆதரவுடன் .” மனம் போல வாழ்வாய் அருமை மகளே! சரி பேச நேரமில்லை எல்லாம் எனக்கு தெரியும் வா ஷாப்பிங் போய்ட்டு வரலாம் ..நாளை மறுநாள் உனக்கும் தனஜயனுக்கும் நிச்சய தாம்பூலம் சீக்கிரம் கிளம்பு” என்று சொல்லி உள்ளே சென்றுவிட்டார்.மிகவும் கட்டுப்பாட்டுடன் தன்னை வளர்த்த அப்பா என்ன சொல்வாரோ என்று பயந்த வட்சலாவிருக்கு அப்பாவின் சம்மதம் மகிழ்ச்சியை தந்தது..அப்பாவுடன் கடைக்கு செல்ல தயாரானாள்.. ஷாப்பின் முடித்துவிட்டு புதன் கிழமை சொன்னது போல் கோபிநாத்தும் வத்சலாவும் ராதாவின் வீட்டிற்கு சென்றனர்..கோபி அழைப்பு மணியை அழுத்தியவுடன் ராதா தான் கதவை திறந்து இருவரையும் வரவேற்றாள்.. முப்பது வருடங்களுக்கு முன் இதே போல் வரவேற்ற ராதாவின் முகத்திற்கும் இப்போ பார்கிறமுகத்திற்கும் எவ்வளவு வேற்பாடுகள்.முதுமையின் சாயல் முகத்தில் தெரிய புன்னைகையுடன் கோபியையும் அவர் மகளையும் வரவேற்ற ராதா மகனை அழைத்து “தனஜயா யார் வந்திருக்காங்கன்னு பார்” என்று சொன்னாள்..கோபியும் ராதாவும் மிகுந்த கஷ்டப்பட்டு உணர்வுகளை அடக்கிக்கொண்டனர். “வாங்க அங்கிள்” என்று கோபியை வரவேற்ற தனஞ்சயன் கண்கள் மெளனமாக வத்சலாவை வரவேற்று மீண்டன.கோபிநாத் மகளை பார்த்து “பெரியவங்களுக்கு நமஸ்காரம் பண்ணும்மா”..என்று சொல்ல தன்னை வணங்கிய வட்சலாவை அணைத்து தாயன்புடன் உச்சி முகர்ந்தாள் ராதா.. முற்றிலும் அந்நியர்கள் போன்ற பாவனையில் கோபியும் ராதாவும் ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக்கொண்டனர். என்றோ நடந்திருந்தாலும் பசுமையாக நெஞ்சில் நிலைத்திருக்கும் நினைவுகளை ஒதுக்கிவிட்டு மக்களின் நலம் கருதி கோபியும் ராதாவும் அந்நியர்கள் போல் காலத்தின் நிர்பந்தத்தால் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் மனத்தளவில் படாத பாடு பட்டனர். இருவர் மனத்திலும் இடி மின்னல் பூகம்பம் எல்லாம் தோன்றின. கொஞ்ச நேரம் அங்கு அமைதி நிலவியது .. ஒருவாறு சமாளித்த பின் கோபி மாப்பிள்ளைக்கு தான் வாங்கி வந்த பொருள்களை எல்லாம் ராதாவிடம் கொடுத்தார். அவற்றுடன் அடுத்து கோபி தந்த அதை பார்த்தவுடன் ராதாவால் அவளுடைய உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டாள் என்பதை அவள் முகம் காட்டியது.. அது என்ன?… தன் அன்பின் அடையாளமாக ராதா கோபிக்கு அன்று பரிசாக தந்த தங்க சங்கிலி தான் அது. அதைப்பார்த்த ராதா மனம் படபடக்க லேசான அதிர்ச்சியுடன் கட்டை விரலால் டாலரை தடவ.. கோபிநாத் கண்களாலேயே அதை திறந்து பார்கசொன்னார். உள்ளே வத்சலாவும் தனஞ்சயனும் புன்னைகையுடன் காட்சியளித்தனர்… ராதா கண்கள் பனித்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஒரு பெருமுச்சு விட்டாள் ..அந்த பெருமூச்சின் பொருள் ராதாவிற்கும் கோபிநாத்திற்கும் மட்டுமே தெரிந்துள்ள ரகசியம். அன்று காதல் பரிசாக கோபிக்கு ராதா கொடுத்த அந்த தங்கச்சங்கிலி, இன்று மருமகளின் தாய் வீட்டு சீதனமாக புதிய வடிவில் பரிணமித்து அவளிடமே வந்துள்ளது. கோபியின் கண்கள் ராதாவை பார்த்து “ராதா என் உயிர்ச்சக்த்தியின் மனித பிம்பமாக என் பெண்ணை உன் மகனுக்கு தருகிறேன் .அன்று நீ தந்த காதல் பரிசு இனியும் என்னிடம் இருப்பது அர்த்தமற்றது முறையற்றதும் கூட. எனவே தயவு செய்து அதை உன்னிடமே வைத்துக்கொள். என் மகளை தாய்க்கு தாயாக இருந்து கவனித்துக்கொள்ளம்மா”என்று சொல்லாமல் சொல்லின. அதில் உள்ள வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாற்போல் ராதா தன் மகனின் கையை பிடித்துத்தர அதில் மகள் வத்சலாவின் கரத்தை கோபி ஒப்படைத்தார். காதல் களங்கமற்றது. இருப்பினும் முறை தவறும்பொழுது களங்கம் தோன்றுகிறது. ராதா கோபி இருவரிடையே அன்று மலர்ந்த காதல் களங்கமற்றது தான்..ஆனால் இன்று முறையற்றது. அன்றைய காதலின் சாட்சி இந்த தங்க சங்கிலி. எனவே சங்கலியை திரும்ப தந்து தன் மனத்தூய்மையை வெளிப்படுத்திய கோபியை மனதால் பாராட்டி ராதா பெருமிதமும் கொண்டாள். இருப்பினும் பரிசாக தந்ததை மீண்டும் பெற்றுக்கொள்வது மேன்மக்களுக்கு அழகல்லவே. எனவே ராதா அந்த சங்கிலியை தனஞ்சயனிடம் தந்து..அதை வத்சலாவின் கழுத்தில் அணிவிக்கச் சொன்னாள்…தனஞ்சயனும் மகிழ்வுடன் அவ்வாறே அணிவித்தான். பின்னர் தனஞ்சயனும் வத்சலாவும் கோபிநாத்தையும் ராதாவையும் தனித்தனியே அவர்கள் காலில் விழுந்து வணங்கினர். புதிய உறவின் புதிய சகாப்தம் மலர்ந்தது. ராதா வத்சலாவை அணைத்தும் கோபி தனஞ்சயனை கைகுலுக்கியும் அவர்களின் இனிய இல்லற வாழ்விற்கு வாழ்த்துக்கள் சொல்லினர். பெரியவர்கள் தங்கள் காதலை ஒப்புக்கொள்வார்களோ மாட்டார்களோ என்று பயந்த இளையவர்கள் இருவரும் மிக எளிதாக நடந்து விட்ட சம்பவங்களை பார்த்து மனத்தளவில் அதிசயித்தனர். ஆண் வாடையே கூடாது என்று சொல்லி சொல்லி வளர்த்த தன் தந்தை எப்படி இவ்வளவு எளிதில் சம்மதித்தார் என்று வத்சலாவும் தான் ஒரு பெண்ணாக இருப்பினும் பெண்வாடையே கூடாது என்று சொல்லி சொல்லி வளர்த்த தாய் எப்படி உடனடியாக வத்சலாவை ஏற்றுக்கொண்டாள் என்று தனஞ்சயனும் எண்ணி எண்ணி தங்கள் மனத்தினுள் புரியாமல் விழித்தனர். அது அவர்களுக்கு புரியாமலே போகட்டும் என்பது தானே பெரியவர்களின் முடிவு. எப்படியாயினும் இளையவர்களை பொருத்தவரை பாட்டும் பரதமும் புத்துயிர் பெற்றன .. பெரியவர்களை பொருத்தவரை இன்று மலர்ந்துள்ள புதிய உறவில் அன்றைய உறவின் காவிய பதிவுகள் காற்றில் கரைந்த உண்மைகளாயின.


முற்றும்
[Image: Vanilla-0-3s-261px.gif]
Like


Messages In This Thread
RE: PDF STORIES - 18+ நாவல்கள், கதைகள் - by jairockerszx - 02-11-2021, 07:34 PM



Users browsing this thread: 33 Guest(s)