Fantasy காலம் என் கையில்
பூஜா: என்னங்க இப்படி எல்லாம் பேசுறீங்க, நீங்க இப்படி பீல் பண்ண எனக்கும் ஒரு மாரி கஷ்டமா இருக்கு. நீங்க சொல்லுங்க மாரி, நானும் உங்கள பார்க்க தான் இத்தனை வருஷம் காத்துகிட்டு இருந்தேன், எனக்கு ஒரு அத்தை குடும்பம் இருக்குனு தெரியும் அவங்க எங்க இருக்காங்க எப்படி இருக்காங்கனு எனக்கு தெரியாதுங்க, நீங்களே சொல்லுங்க நான் ஒரு பொண்ணு, நான் எப்படி என்னோட அப்பா பேச்சை மீறி உங்க குடும்பத்தை கண்டுபிடிக்க முடியும், ஏற்கனவே அத்தை ஒரு பொண்ணா அப்பா பேச்சை மீறி நம்ம மாமாவை கரம் பிடிச்ச நாலதானே நம்ம குடும்பம் பிரிஞ்சுது, நானும் அத்தை குடும்பம் எங்கன்னு தேடி அப்பாவை கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான் இருந்தேங்க. ஆனா அப்ப அப்ப என்னோட அண்ணா கிட்ட உங்க குடும்பம் எங்க இருக்குனு கேட்டு அவனை தேடி பாக்கசொல்லி இருந்தேன். இப்ப கூட அண்ணா தான் அண்ணி கிட்ட நீங்க இங்க இருக்குற விஷயம் சொன்னது அப்பறம் தான் நானும் என்னோட தம்பியும் இங்க கெளம்பி வந்தோங்க. நீங்க சொல்லுற மாரி நம்ம இனிமே எப்பவும் பிரியமாட்டோம் கவலைப்படாதீங்க, எப்பவும் நான் உங்ககூட தான் இருப்பேன். 25 வருஷம் மின்னாடி அத்தை கல்யாணம் செஞ்ச நால பிரிஞ்ச நம்ம குடும்பம், நம்ம கல்யாணம் நால கண்டிப்பா ஒன்னு சேரும், நீங்க எதுக்கும் இனிமே இப்படி எல்லாம் பீல் பண்ணி பேச கூடாது சரியா (பேசிக்கொண்டு மெல்ல கதிரை இழுத்து அவளின் அருகில் அமர செய்து அவனின் தோளில் தனது தலையை செய்துகொண்டாள்)


கதிர்: ஹ்ம்ம் தேங்க்ஸ் பா, நீ இப்படி பேசுனது எனக்கு மனசுக்கு ஒரு மாரி சந்தோசமா இருக்கு தெரியுமா, நீ ஆசை பட்ட மாதிரி நம்ம கல்யாணம் மூலமா நம்ம குடும்பம் கண்டிப்பா ஒன்னு சேரும் (சொல்லி மெல்ல பூஜாவின் தலையை மெல்ல வருடிய படி இருந்தான்)

பூஜா: என்னங்க, எனக்கு வயிறுவலினு சொன்னதும் நீங்க வெந்தையம் போட்டு தண்ணி எல்லாம் எடுத்தது வந்திங்களே, இது எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும், எனக்கு இப்ப வலி லேசா குறைஞ்ச மாதிரி இருக்கு

கதிர்: அதுவா, எல்லாம் என்னோட அம்மா சொல்லிகுடுத்து தான் பா, நம்ம கயல் ரொம்ப வெகுளி சாது பா, அவளுக்கு வலிகூட தாங்கமுடியாது, இதுல கூச்ச சுபாவம் வேற, அவளுக்கு இந்த வலி வந்த ஒரு குழந்தை மாரி சுருண்டு படுத்துருவா, அந்த நேரம் நான் தான் அவளுக்கு எல்லாம் உதவியும் செய்வேன், அப்ப இருந்தே இந்த பொண்ணுங்க பிரச்னை எல்லாம் என்ன என்னனு எனக்கு தெரியும் பா, நான் அவங்களுக்கு எப்படி இத பார்த்தானோ அதே மாரி தான் என்னோட பூஜாக்கும் செஞ்சேன் (அன்பா பேசிய படி மெல்ல தலை முடியை சரி செய்தேன்)

பூஜா: சூப்பர் பா, உங்கள நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு, நீங்க என்னோட துணையா இருக்க நான் குடுத்து வச்சு இருக்கணும் பா.

கதிரும் பூஜாவும் அவர்களின் அன்பை பரிமாறிக்கொண்டனர், இருவரும் அவரின் மனதில் உள்ளதை இன்னொருவருக்கு வெளிப்படுத்தினார்கள்
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 3 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 26-10-2021, 10:15 PM



Users browsing this thread: 21 Guest(s)