26-10-2021, 09:34 PM
(26-10-2021, 07:21 PM)Dubai Seenu Wrote: நண்பர்களே,நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துகள் ?
நேரம் சுத்தமாக இல்லை.
குடும்ப பொறுப்புகள் அதிகமாகிவிட்டன.
இதனால் தனிமையை தேடி கதை எழுதுவது மிகவும் கடினமாகிவிட்டது. கதைக்காக என் கடமைகளை தட்டிக்கழிப்பது நல்லதுமில்லை.
இதனால் இப்போதைக்கு எந்த பதிவுகளும் என்னால் கொடுக்க இயலாது. மிகவும் வருத்தமுடனேயே இதை தெரிவிக்கிறேன்.
உங்களுடைய அன்புக்கும் ஊக்கமான வார்த்தைகளுக்கும் பாராட்டுகளுக்கும் தலைவணங்குகிறேன்.
கதையை என்னைவிட அதிகம் நேசித்த வாசகர்களை, அன்பு உள்ளங்களை, இங்கே நான் கண்டேன். என்றும் இதை நினைத்து நான் மகிழ்வேன்.
இப்போது நான் பதிவு போட வேண்டுமென்றால் அது Climax பதிவுதான். அது இரண்டு பக்கம் அளவுக்கு வரும்.
ஆனாலும் அவசரப்படவேண்டாமே என்று நினைக்கிறேன். அதை டிசம்பரில் பதிவிடுவேன். இந்தக் கதையை 2021 தாண்டி கொண்டு செல்லும் எண்ணம் இல்லை. அதனால் நேரம் இருப்பினும் இல்லாவிட்டாலும் டிசம்பரில் END.
அதனால் டிசம்பர் வரை இக்கதையை மறந்துவிடுங்கள் நண்பர்களே. டிசம்பர் 10-ல் வந்து பாருங்கள்.
நீங்கள் கதையை எதிர்பார்த்து ஏமாறக்கூடாது என்பதற்காகவே இதை சொல்கிறேன்.
இறைவன் அருளால் நான் நலமாக, மகிழ்ச்சியாக, உள்ளேன். நீங்களும் நலமுடனும் மகிழ்வுடனும் வளமுடனும் வாழ வேண்டிக்கொள்கிறேன்.
நேரமில்லாத ஒரே காரணத்தால் உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியாதாதற்காக உண்மையில் வருந்துகிறேன்.
நிறைய பேருக்கு தனித்தனியாக நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கண்டிப்பாக அதை செய்வேன்.
அன்புடன்,
உங்களில் ஒருவன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக உங்கள் கதையை படித்து இன்புற்றவர்களில் நானும் ஒருவன்.
மிக்க மகிழ்ச்சி..