19-10-2021, 01:11 PM
அஷ்வினி: கூல் கார்த்திக், என்னோட பெயர் அஷ்வினி, நான் ராகவி ஓட தங்கச்சி, உடனே ராகவி யாருனு கேக்காதீங்க உங்களுக்கு அவங்கள தெரியும் (குறும்பாக பதில் அளித்தாள்)
கார்த்திக்கு உடனே அனைத்தும் புரிந்தது பவித்ரா அண்ணியின் நெருங்கிய தோழியின் தங்கை இவள், 3 நாள் முன்பு கார்த்திக்கிடம் அண்ணி சொன்ன பெண்ணும் இவள்தான் என்று நினைவுக்கு வர
கார்த்திக்: ஹே, நீங்க அஷ்வினி தானே
அஷ்வினி: ஹ்ம்ம் பரவாயில்லையே கண்டுபிடிச்சுட்டீங்க, நானே தான், எப்படி இருக்கீங்க, சார் நான் சொன்ன மாறி ரொம்ப பிஸி தான் போல, நான் உங்களுக்கு 3 நாலா கால் பண்ண ட்ரிப்ண்ணுறேன் தெரியுமா, என்ன உங்க நம்பர் தான் ரீச் ஆகவே இல்ல
கார்த்திக்: நான் நல்லா இருக்கேன் மா, நீங்க எப்படி இருக்கீங்க, ஐயோ சும்மா எல்லாம் கிண்டல் பண்ணாதீங்க பிஸி, சார் எல்லாம் சொல்லி, நானே வெட்டியா சுத்திட்டு இருக்கேன், நான் ஆசைப்பட்ட மாறி இன்னும் எனக்கு வேலையும் கிடைக்கல, உங்களுக்கே தெரியும் என்னோட நிலைமை எங்கவீட்டுல என்னனு. என்னோட நம்பர் உங்களுக்கு கிடைக்கத்துக்கு காரணம் நான் என்னோட சொந்த ஊர்ல இருக்கேன், இங்க கொஞ்சம் சிக்னல் ப்ரோப்லேம் இருக்கு அதுனால தான் என்னோட நம்பர் உங்களுக்கு ரீச் ஆகி இருக்காது
அஷ்வினி: ஹ்ம்ம் அப்படியா, இல்லை இல்லை நான் உங்கள கிண்டல் பண்ண எல்லாம் உங்கள சார்னு சொல்லல, மொத தடவ பேசுறோம் வாடா போடான்னு எப்படி பேசுறது, வார்த்தை நாகரிகம் இருக்கணும் ல அதுனால தான், எனக்கு எப்பவும் பசங்கள டா போட்டு பேச தான் பிடிக்கும், அதே மாறி எங்ககுடும்பம் ஓட நெருக்கமா உள்ளவங்கள சிலநேரம் பெரு சொல்லி கூப்பிடுவேன்.. ம்ம்ம் உங்க நம்பர் உங்க அண்ணி தான் எங்க அக்கா கிட்ட குடுத்தாங்க, நீங்க பிசினஸ் பண்ண போறிங்களாமே, அதன் உங்க கூட பேசி பார்ட்னர் ஆகிடலாம்னு பார்த்தேன் (குறும்பா சிரிச்சுட்டு) ஐ மீன் பிசினஸ் பார்ட்னர் ஆகிடலாம் பார்த்தேன்.
கார்த்திக்: (ஆத்தி இந்த பொண்ணு ரொம்ப வாய் பேசுவா போலயே எடுத்த உடனே டா போடுவேன் சொல்லுற, பார்ட்னர்னு சொல்லி சிரிக்கிறா) ம்ம் அப்படியா என்னோட அண்ணி தான் எனக்கு முழு சப்போர்ட் வீட்ல அவங்கதான் என்னைய ஒர்க் கிடைக்கலான பிசினஸ் ஸ்டார்ட் பண்ண சொன்னாங்க, ஆனா எனக்கு இன்னும் அதுக்கு தகுதி இருக்கானு எனக்கே தெரியல மா, ஒன்னுமே பிசினஸ் பத்தி தெரியாம எப்படி நான் ரொம்ப பெரிய ரிஸ்க் எடுக்குறது, இதுல நீங்க வேற என்னைய பார்ட்னர்னு சொல்லுறீங்க, இது எல்லாம் சரியா வருமா
அஷ்வினி: இங்க பாருங்க கார்த்திக், யாருக்கும் எடுத்தவுடனே எல்லாம் தெரியாது, எல்லாரும் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறது தான், அதுக்கு நம்ம விலை குடுக்கணும், பிசினஸ்ல அதுக்கு விலை தான் நஷ்டம், எடுத்த உடனே எந்த பிசினஸ் லாபம் மட்டும் கொடுக்காது, நம்ம அதே தெறிச்சு தானே பண்ணப்போறோம், யோசிச்ச படி இருந்தா நம்ம முத ஸ்டேப் கூட எடுத்துவைக்க மாட்டோம். சோ, அது எல்லாம் நீங்க யோசிக்க வேண்டாம், சரி நீங்க என்ன பிசினஸ் பண்ண போறதா ஐடியா பண்ணி வச்சுஇருக்கீங்க.
கார்த்திக்: இன்னும் ஏதும் நான் யோசிக்கல பா, நீங்க ஏதாச்சும் யோசிச்சு இருக்கீங்களா என்ன?
அஷ்வினி: எனக்கு சில யோசனை இருக்கு கார்த்திக், ஒரு பெரிய ஜவுளி சாம்பராஜ்யம் உருவாக்கணம் ஆசை, நம்ம அத ட்ரை பண்ணலாம், நம்ம பரம்பரியம் நமக்கு அப்பறமும் நிலைச்சு நிக்குற மாறி ஏதாச்சும் பண்ணனும் தான் என்னோட ஆசை
கார்த்திக்: ஹ்ம்ம் நல்ல ஆசை பா, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html