18-12-2018, 05:08 PM
யப்பா... என்னா ஆட்டம் டா போட்டீங்க... இப்ப அடிச்சோம்ல ஆப்பு.....: டிம் பெயின் நக்கல்
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, 283 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 5 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி அடுத்ததடுத்து விக்கெட்டை பறிகொடுத்து, 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என ஆஸ்திரேலிய அணி சமன் செய்தது. தவிர, அடிலெய்டு டெஸ்ட் தோல்விக்கு மரண பதிலடி கொடுத்தது.
என்னா... ஆட்டம்.....?
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்தது தனக்கு மிகப்பெரிய ஆறுதல் அளிப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.