18-12-2018, 04:53 PM
(This post was last modified: 18-12-2018, 04:56 PM by johnypowas.)
சீதக்காதி - சினிமா விமர்சனம்
![[Image: _104855046_182e3955-10a0-4e15-a60f-a69cbf7ca68b.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/FA37/production/_104855046_182e3955-10a0-4e15-a60f-a69cbf7ca68b.jpg)
திரைப்படம்
சீதக்காதி
நடிகர்கள்
விஜய் சேதுபதி, மௌலி, அர்ச்சனா, மகேந்திரன், கருணாகரன், ரம்யா நம்பீசன், காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர்
இசை
கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு
டி.கே. சரஸ்காந்த்
இயக்கம்
பாலாஜி தரணிதரன்
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலாஜி தரணிதரனின் அடுத்த படம். விஜய் சேதுபதிக்கு இது 25வது படம். இத்தோடு, விஜய் சேதுபதியின் வயதான தோற்றமும் சேர்ந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது 'சீதக்காதி'.
படத்தில் வரும் எந்தப் பாத்திரத்திற்கும் சீதக்காதி என பெயர் கிடையாது. 'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்ற பழமொழிதான் படத்தின் அடிப்படையான 'ஒன்லைன்' என்பதால் இந்தப் பெயர்.
தமிழில் நாடகக் கலை உச்சத்தில் இருந்தபோது புகழ்பெற்று விளங்கிய அய்யா ஆதிமூலம் (விஜய் சேதுபதி), தன் கண் முன்பே அந்தக் கலைக்கு மதிப்பில்லாமல் போவதைப் பார்க்கிறார். குடும்பத்தில் பணத் தேவை தொடர்பான நெருக்கடிகளும் அதிகரிக்கின்றன. ஒரு நாள் நடித்துக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடுகிறார். ஆனால், அவரது கலை இறப்பதில்லை. அது எப்படி நடக்கிறது, அதனால் நடக்கும் விசித்திரங்கள் என்ன என்பதையே எதிர்பாராத விதத்தில் சொல்கிறது.
இம்மாதிரியான ஒரு கதையை யோசிக்கும் துணிச்சலுக்காகவே இயக்குனரை ஒரு முறை பாராட்டிவிடலாம். படம் துவங்கியதும் கிட்டத்தட்ட அரை மணி நேரம்வரை விஜய் சேதுபதியின் நடிப்பில் நீள நீளமான நாடகக் காட்சிகள் வருவதும், மிக மோசமான, எதிர்பார்க்கத்தக்க பின்னணி இசையுடன் சோகமான சம்பவங்கள் நடப்பதும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றன. ஆனால், ஆதிமூலம் பாத்திரம் இறந்தவுடன் முற்றிலும் மாறான திசையில் படம் செல்கிறது.