Adultery மலரும் மனசே.. !!
#10
காயத்ரி சமையலறையை விட்டு வெளியே போகவே இல்லை.  அங்கேயே நின்று விட்டாள். சில நொடிகளில் சொர்ணத்தின் ஒப்பாரி பலமாக கேட்டது. மடமடவென தெருவே கூடிவிட.. சமையலறையில் தனியே நின்று கலங்கிக் கொண்டிருந்த காயத்ரியை சொர்ணம் மீண்டும் வந்து  அழுதபடியே இழுத்துப் போனாள். 

காயத்ரியின் வீட்டின் முன்பும்.. வீட்டுக்கு உள்ளேயும் தெரு மொத்தமும் கூடியிருந்தது. சொர்ணம் மீண்டும் தன் ஓலமான அழுகையைத் தொடர.. காயத்ரியும் தன்னிலை மீறி அழுதாள்.. !!

ராமசாமி என்கிற காயத்ரியின்  அப்பா இறந்து போனது அந்த தெரு முழுக்க பரவி காலை நேரத்தில் ஒரு பெரும் கூட்டத்தையே சேர்த்தது. ஆனால்  ஒரு மணி நேர இடைவெளிக்குப் பிறகு கூட்டம் கூடியதைப் போலவே குறையவும் தொடங்கியது. 

அதன்பின் காரியங்கள் விரைவாக நடக்கத் தொடங்கின. காயத்ரியின் உறுவுகளில் அவ்வளவு நெருக்கமானவர்கள் அல்லது  ஆதரவானவர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக எவரும் இல்லை. இருக்கும் ஒரு சில தூரத்து உறவுகளுக்கு மட்டும் தகவல் சொல்லப் பட்டது. அவள்  அப்பா குடித்துத்தான் செத்துப் போனார் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதால் அவரின் ஈமக் காரியங்கள் துவங்கின.. !!

காயத்ரியின்  அம்மா இறந்து போன நாளில்  இருந்து அப்பா இப்படித்தான் ஏராளமான குடி. காயத்ரி பள்ளிப் படிப்பை பத்தாவதுடனே முடித்துக் கொண்டு வேலைக்குச் செல்ல தொடங்கியிருந்தாள். அவள் மாதம் முழுவதும் சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதியை அவர் பிடுங்கி குடித்து விடுவார்.. !!

மகள் என்று கூட பார்க்காமல் கெட்ட கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசுவார். அவர் கேட்டு பணம் கொடுக்காவிட்டால் கை நீட்டவும் செய்வார். அவள் பட்டினியாக கிடந்தாலும் அவர் அதை கண்டு கொள்ள மாட்டார். ஆனால் அவர்  எப்போதுமே பட்டினியாக இருக்க மாட்டார். தன் வீட்டில் உணவு இல்லாவிட்டாலும் சொர்ணத்தின் வீட்டில்  இருந்து  அவருக்கு  உணவு வந்து விடும். 

தன் அப்பாவை சொர்ணம்  அண்ணா அண்ணா என்றுதான் அழைப்பாள். காயத்ரி நைட் சிப்ட் முடிந்து வரும் பெரும்பாலான நாட்களில் காலையில்  அப்பாவின் பாயில் வாடிய பூக்கள் சிதறிக் கிடக்கும். வீட்டுக்குள்  ஒரு மாதிரியான கவிச்சை நாத்தமடிக்கும். அது எல்லாம் சொர்ணத்தால்தான் என்பது காயத்ரிக்கு தெரியும். ஆனால்  ஒரு நாளும் அப்படி  ஒரு சம்பவத்தை அவள் நேரில் பார்த்ததில்லை.. !!

அவளைப் பொறுத்தவரை  அப்பா மோசமானவர்தான் என்றாலும்  அப்பா என்கிற ஒரு உறவு இருப்பதே ஆறுதலாக இருந்தது.  ஆனால்  இப்போது அந்த  ஒரு உறவும் தன்னை விட்டு போய் விட்ட நிலையில் தான் ஒரு அனாதை என்கிற உணர்வுக்கு ஆளானாள்.. !!

கெட்டவராக இருந்தாலும் இறக்கும் முன் அப்பா செய்த ஒரே ஒரு நல்ல காரியம்.. காயத்ரிக்கு வரன் பார்த்து  கல்யாணத்துக்கு  ஏற்பாடு செய்திருந்ததுதான்.. !! 

தகவல்  அறிந்து.. அவளது வருங்கால கணவனின் குடும்பமும் அப்பாவின் இறப்புக்கு வந்தது.. அவளுக்கு  ஒரு வகையில்  ஆறுதலாக இருந்தது.. !!
Like Reply


Messages In This Thread
RE: மலரும் மனசே.. !! - by Niruthee - 25-04-2019, 01:58 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 26-04-2019, 08:33 PM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 27-04-2019, 10:04 PM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 28-04-2019, 05:46 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 01-05-2019, 10:11 PM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 02-05-2019, 09:40 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 09-05-2019, 08:10 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 14-05-2019, 01:03 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 20-05-2019, 07:54 PM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 23-05-2019, 07:45 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 25-05-2019, 06:16 AM



Users browsing this thread: 7 Guest(s)