Romance காதலே... காதலே.... தனிப்பெரும் துணையே!
#1
"டேய் தம்பிகளா" வாசு அண்ணன் குரல் கேட்டது.


கோதாவரி நதி கரை ஜன வெள்ளத்தில் இருந்தது. கோதாவரியை பார்த்த பிறகு தமிழ் நாட்டில் ஓடும் ஆறுகள் எல்லாம் எனக்கு காவாய்களாக தோன்றின. ஆறுன்னா அது கோதாவரிதான்!

"அண்ணே" என்று ரவி கட்டிக்கொண்டான். எனக்கோ இருப்பே கொள்ளவில்லை.

"என்னடா உன் தோஸ்த்து காதல் ஜுரத்துல தவிக்கிறானா?" என்றார் வாசு அண்ணன் ரவியிடம்.

"எங்கண்ணே தூங்க விடுறான். வயிறு பசிக்குது.... அவளை பார்க்காம சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்"

"தம்பி நிகில், அவ அப்படி என்ன பேரழகியா.... ஆந்திரா முழுக்க செம பிகருங்க தான்"

எனக்கு கடுப்பு வந்தது. "அண்ணே!".... ஏதாவது சொல்லிவிடப்போகிறேன் என்று அடக்கிக்கொண்டேன்.

"அண்ணே மெய்யாலுமே அவ செம பிகருண்ணே.... நேத்து திருவிழாவுல காட்டினானே.... சான்ஸே இல்ல... அவ மட்டும் இல்ல..." இழுத்தான் ரவி

"அவ பிரண்டுமா" ரவி அண்ணன் பல நேரங்களில் நடிகர் சிங்கம்புலி போல பேசுவார்.

"டேய் உதைப்பேன்டா" ரவியை பார்த்து கடுப்பானேன்

"இருடா.... (ரவியை பார்த்து) நீ சொல்லுடா தம்பி"

"அந்த பொண்ணோட அம்மாவும்..... அய்யோ.... தூக்கத்துல அவங்க தான்"

"மச்சி வேண்டாம்" எனக்கு கொலை வெறி. என் ஆளின் அம்மா. எனக்கு மாமியார் ஆகப்போகிறவர். அவரை போய்....

"தம்பிகளா.... நியூட்டன் 4ம் விதி என்ன சொல்லுது தெரியுமா?"

"என்னது நியூட்டன் 4வது விதி வேற எழுதி இருக்காரா? 3 வரைக்கும் தானே படிச்சிருக்கேன்" ரவி பல நேரங்களில் இப்படி அசடாக பேசுவான்.

"எழுதி இருக்காரு தம்பி. எழுதி எங்க பூட்டனுக்கு பாட்டன் அட்ரஸுக்கு கூரியர் அனுப்பிட்டு செத்துட்டாரு.... அதை விடு.... அந்த விதி என்ன சொல்லுதுன்னா... ஒரு செம பிகர் தான் இன்னொரு செம பிகருக்கு அம்மாவா இருக்க முடியும்" இருவரும் சிரித்தாலும் எனக்கு கடுப்புத்தான் வந்தது.

"அண்ணன் போதும்ணே.... பெரியவங்கள போயி வயசு வித்தியாசம் இல்லாம...." என்றேன்.

"என்னடா ரொம்ப சீரியஸ் ஆகிட்டே" வாசு அண்ணன் குரல் மாறியது.

"6 மாசம் ணே. அவளும் என்ன பார்க்க தொடங்கிட்டா.... என்ன நினைக்கிறான்னு தெரியலை. ஆனா.... போனவாரம் அவ பஸ் ஏறுற எங்க பம்பிங் ஸ்டேஷன் ஸ்டாப்பில நான் வழக்கமா நிக்கிற மரத்தடியில் நிக்காம, பொட்டிக்கடைக்கி பின்னாடி மறைஞ்சி நின்னேன். என்னை தேடினா.... அப்புறம் அவ பாக்குறா மாதிரி வந்தப்புறம் தான் ... என்னை ஒரு முறை முறைச்சா பாருங்க..."

"என்னடா சுப்ரமணியபுரம் சீனை ஆந்திரா ராஜமுந்திரி டவுனுல வெச்சி ரிமேக் பண்ணுறான்"

"அண்ணே அவன் டிப்பார்ட்மெண்ட் வேற. so... நான் அந்த பொண்ணை நேத்து தான் பார்த்தேன். இவனை பார்த்ததும் அவ கண்ணுல முதல்ல ஆச்சர்யம்... அப்புறம் ஒரு மாதிரி... எப்படி சொல்றது... சம்திங் அண்ணே... அது காதலா, ஸ்நேகமா ஏதோ ஒண்ணு" ரவி கூட உணர்ச்சிவசப்பட்டான்.

"என்னன்னு இன்னைக்கு பைசல் பண்ணிடுவோம் விடு. ஒரு சர்பத்தை குடிச்சிக்கிட்டே காத்திருப்போமே " அண்ணன் பேச்சை கேட்டு சர்பத்திற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அவளுக்காக காத்திருந்தோம்.

அவள் வருவதற்குள், அல்லது சர்பத் ரெடியாவதற்குள் எங்களைப்பற்றி....

நானும் ரவியும் பெட்ரோகெமிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டு கேம்பஸ் மூலம் ரிலையன்ஸின் கிருஷ்ணா-கோதாவரி பேசின் பிராஜெக்டில் வேலை பார்க்கும் Graduate Engineering Trainees. இருவருக்கும் வயது 22. ராஜமுந்திரியில் முதல் போஸ்டிங். வந்து 6 மாதங்கள் ஆகிறது. (வேலைக்கு சேர்ந்த 2ம் வாரம் அவளை முதன்முறையாக பார்த்தேன்)

இங்கு வந்த பின்புதான் வாசு அண்ணன் அறிமுகம். மதுரைகாரர். பாசக்காரர். இங்கே எங்கள் நிறுவனத்தின் காண்டிராக்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வயது 35+ இருக்கும்.

கதை நடக்கும் காலம் 2013-14.

வெள்ளை பென்ஸ் வருவது தெரிந்தது. என்னை விட ரவி தான் அதிகம் பரபரப்பானான்.

"மச்சி அவ பென்ஸ் டா"

"ஏன்டா பென்ஸ்ல வர்ற புள்ளையையா லவ் பண்ணுரே?" அண்ணன் கேட்டார்.

மற்ற வாகனங்கள் எதுவும் இந்தப்பகுதியில் அனுமதி இல்லாதபோது இந்த பென்ஸ் மட்டும் நேற்றும் விழா இடத்திற்கு வந்தது. இன்றும் வருகிறது.

வண்டி நின்றது.

பின் கதவு திறந்தது.

மெரூன் புடவையில் வெளிவந்த பெண்ணைப் பார்த்து....

"இந்தப்புள்ளையா.... செமையா இருக்குடா" அண்ணன் வாயைப்பிளந்தார். ரவி நமுட்டு சிவப்பு சிரித்தான்.

 "அண்ணே.... அவங்க என் மாமியார்ணே"

"ஏதே.... (என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு) ம்கூம்.... "

மற்றொரு பின் கதவு திறந்தது. வெள்ளை சுடித்தார். சிவப்பில் மஞ்சள் பூ போட்ட கமீஸ். அதே கலர் & டிசைனில் ஷால். அவள். என்னவள். (ஹி ஹி... பேரு தெரியாதுங்க!)

"தரமான பீசுடா"

"என்னண்ணே பீசு கீசுன்னுட்டு..."

"சரி.... தம்பி பொண்டாட்டி ஆகிடிச்சி. நல்லா இருங்க"

"இவளும் இவ அம்மாவும் அளவான உயரமாத்தான் இருக்காங்க. இவ அப்பன் தான்... இதோ இறங்குறான் பாருங்க..." என்றேன். அவள் 5 அடி 3-4 அங்குலம் உயரம் இருப்பாள். மாமியாரும் அவள் உயரம் தான். அப்பன் தான் 6 அடி இருப்பான். மலை மாதிரி. ராட்சசன்.

"அடேய்.... அடப்பாவிகளா.... இந்த ஆளா" கிட்டத்தட்ட அலறினார் அண்ணன்.

"என்ணே தெரிஞ்சவரா?"

எங்கள் இருவரையும் முரட்டுத்தனமாக பின்னால் இருந்த வளையல் கடைக்கு பின்பாக தள்ளிக்கொண்டு சென்று.... ஹஸ்கி குரலில் "சமரசிம்மா ரெட்டி காரு டா" என்றார்.

"அட.... ரெட்டி காரு வந்தது பென்ஸ் காரு" - ரவி நேரங்காலம் தெரியாமல்.

"என்னண்ணே விவேக் காமெடி கேரக்டர் பேரா இருக்கு" எனக்கும் அண்ணனின் சீரியஸ்னெஸ் புரியவில்லை.

"அடப்பாவிகளா அவரு பெரிய எம்.பி.டா"

"எம்.பி.ல என்ன பெருசு சிறுசு. எல்லாரும் பார்லிமெண்ட்ல ஒரே மாதிரி சீட்ல தான் உட்காரப்போறானுங்க" - ரவி

"அப்போ என் மாமனார் எம்.பி.யா" - எனக்கு சந்தோசம் கொள்ளவில்லை.

"எம்.பி. சம்சாரத்தை நேத்து சைட் அடிச்சிட்டேன்" ரவி என்னை வெறுப்பேத்த சொன்னான்.

"அது சம்சாரம் இல்லடா... எம்.பி. வைப்பாட்டி. அவர் சம்சாரத்துக்கு 2 பசங்க தான். கடோற்கஜனுங்க மாதிரி இருப்பானுங்க."

"அடேய்... நீ காதலிக்கிறது வைப்பாட்டி பொண்ணா?" சத்தமாக ரவி சொன்னது நல்ல வேலையாக அக்கம்பக்கத்தில் கேட்கவில்லை.

[Image: 241746120_242565336_1251056082027225_786...6377_n.jpg] [Image: 241746121_242669283_571003843944765_5448...55_n-1.jpg] [Image: 241746122_243666966_111319067981172_2213...n-webp.jpg] [Image: 241746125_244020423_277016787608791_2907...n-webp.jpg]
தொடரும்.....

(மாடல்: தெலுங்கு நடிகை விஷ்வஸ்ரீ)
[+] 4 users Like meenafan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
காதலே... காதலே.... தனிப்பெரும் துணையே! - by meenafan - 12-10-2021, 03:38 AM



Users browsing this thread: 1 Guest(s)