முள் குத்திய ரோஜா(completed)
#11
‘அட.. ச்ச.. ! நான் விரும்பியதை எப்படியோ தெரிந்து கொண்டு அவளும் என்னை விரும்பியிருக்கிறாள்.. !! இந்த விசயம் தெரியாமல் நான் பல நாள் தூங்காமல் தவித்தேனே.. ? ஒருவேளை அவளிடம் நான் வந்து காதலைச் சொல்வேன் என்று எதிர் பார்த்துக் காத்திருந்தாளோ…?? சொல்லியிருந்தாள்.. அவள் எனக்கு கிடைத்திருப்பாளோ.. ? இப்போதும் எவ்வளவு அழகாக இருக்கிறாள்.. ?? தன் காதலை தங்கையிடம் சொன்னவள்.. என்னிடம் சொல்லியிருக்க கூடாதா.. ? ஜாடை மாடையாகவாவது.. ??’

எனது எண்ணச் சிந்தனைகளில் உழன்றபடி நான் எனது வீட்டை அடைந்தேன். வழக்கம் போல என் மனைவியின் புலம்பல்கள் நச்சரிப்புகள்.. அலட்சிய பேச்சுக்களில்.. எல்லாம் பாதிக்கப் பட்ட என் மனசு.. சித்ராவை நினைத்து.. தனது சுகத்தை தேடிக் கொண்டது.. !!

இரவு வாட்ஸ் அப் ஓபன் பண்ணியபோது நிலாவினி நெம்பரில் இருந்து அழகான ஒரு குழந்தை படத்துடன் குட்நைட் மெசேஜ் வந்திருந்தது. அதைப் பார்த்த உடனே நான் அவளுக்கு ஒரு குட்நைட் அனுப்பி வைத்தேன்.. !! அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கே குட்மார்னிங் அனுப்பியிருந்தாள். நான் ஆறரை மணிக்கு எழுந்து அவளுக்கு குட்மார்னிங் அனுப்பினேன். இது எல்லாம் நான் என் மனைவிக்கு தெரிந்து அனுப்ப முடியாது. தெரியாமல்தான் அனுப்பி வைத்தேன்.. !!

அவளது வாட்ஸ் அப் டிஸ்பிளேவில்.. ஒரு குழந்தை படத்தை வைத்திருந்தாள். சின்ன குழந்தை அழகாய் இருந்தது. அதை யாரெனக் கேட்டேன். அவள் எட்டரை மணிக்கு அதற்கு பதில் சொல்லியிருந்தாள்.!

‘சித்ரா பொண்ணு..! ரெண்டு வயசு அப்போ.. !’

நான் டீ டைமில் அதைப் பார்த்து விட்டு அவளுக்கு ரிப்ளே செய்தேன்.
‘ரொம்ப அழகா இருக்கு ‘

மதியம் லஞ்ச் பிரேக்கில் அவள் எனக்கு பதில் அனுப்பியிருந்தாள்.
‘தேங்க்ஸ்..!’டிபி மாத்தியிருந்தாள். இப்போது பையன். ‘அவ பையன் ‘ என்று அவளே சொல்லியிருந்தாள்.

‘ ரெண்டு குழந்தைகளும் லட்டு மாதிரி இருக்கு.’ நான் அனுப்ப.. உடனே ரிப்ளே வந்தது.

‘ தேங்க்ஸ்.. ! உங்க குழந்தைங்கள நான் பாக்கலாமா..? வித்.. அவங்ம்மாவோட.. ?’ ஸ்மைலி. !

நான் எனது குடும்ப போட்டோவை அனுப்பினேன்.

‘ரொம்ப அழகா இருக்கு. ஐ லவ் யூ ஆல்..!’ என்று அனுப்பினாள்.

‘ தேங்க்ஸ்.. !’

‘ வாட் யூ டூ ?’ சுருக்கமாக கேட்டாள்.

‘ லஞ்ச்.! நீ ?’

‘ ம்ம். சாப்பிட்டாச்சு. ! நைட் மெசேஜ் பண்றேன். பை !’ என்று அவசரமாக முடித்திருந்தாள்.

‘ ஓகே பை ‘ சொல்லி விட்டு நானும் எனது அலுவலை கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் மனசெல்லாம் சுகமான நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தது …… !!!!!
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா(adultery ) - by johnypowas - 18-12-2018, 10:09 AM



Users browsing this thread: 2 Guest(s)