Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
#38
ஆந்திராவில் மீன் மழை...வானிலிருந்து விழுந்த மீன்களைக் கண்டு பொதுமக்கள் வியப்பு.
December 18,
[Image: andhra-fish-rain.png]

ஆந்திர மாநிலத்தில் பெய்ட்டி புயல் தாக்கிய நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மீன் மழை பெய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, மாவட்டங்களில் பெய்ட்டி புயலால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் கிராமத்தில் நேற்று மாலை மீன் மழை பெய்துள்ளது. 

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது அங்குள்ள நகராட்சி பள்ளி அருகே சுற்றுப்பகுதிகளில் மீன் மழை பெய்து இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் எடுத்த வீடியோ, சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 18-12-2018, 09:56 AM



Users browsing this thread: 100 Guest(s)