24-04-2019, 05:36 PM
காயத்ரி சொன்னதைக் கேட்டு ஆடிப் போனாள் சொர்ணம். இவ்வளவு நிதானமாக அந்த வார்த்தையை அவள் எதிர் பார்க்கவில்லை என்பதை அவளது அதிர்ந்த முகமே சொன்னது.
"ஆஆ.. என்னடி சொல்ற?" பதறி காயத்ரியின் இரு தோள்களையும் பிடித்து உலுக்கினாள்.
கண்ணீர் வழிய.. விக்கலோடு சொன்னாள் காயத்ரி.
"நா.. நா.. நைட் சிப்ட் முடிச்சிட்டு இப்பதான்கா வந்தேன்.. பாத்தா வீடு பூரா வாந்தி... கண்ணு தொறந்து... ராத்திரியே செத்துருக்கு..." மேலே பேச முடியாமல் கேவினாள்.
"ஐயோ தெய்வமே.." அவளை விட்டு முன்னால் ஓடினாள் சொர்ணம் .போர்வைக்குள் சுருண்டிருந்த தன் கணவனை எட்டி உதைத்தாள்.
"அட பீடை புடிச்ச மனசா.. எந்தரி மேல.. பக்கத்தூட்ல ஒரு மனுசன் செத்து பொணமா கெடக்கான்.. உனக்கு தூக்கம் கேக்குதா.."
அவளின் அலறல் பொலம்பலைக் கேட்டபடி கண் விழித்த அவள் கணவன் பதறினான்.
"என்னடி சொல்ற சனியனே..?"
"ராமசாமி அண்ணன் செத்து பொணமா கெடக்கறானாம். போய் என்னன்னு பாரு.. நைட்டே செத்துருக்கனும்னு காயத்ரி வந்து சொல்றா.. அந்த புள்ள என்ன பண்றதுனு தெரியாம பித்து புடிச்சு போய் நிக்குது.. ஓடு ஓடு.."
அவிழ்ந்த வேட்டியை சுருட்டிப் பிடித்தபடி பக்கத்து வீட்டுக்கு ஓடினான் சொர்ணத்தின் கணவன். அவன் பின்னால் சொர்ணமும் புலம்பியபடியே ஓடினாள்.. !!