24-04-2019, 12:22 PM
காலை நேரச் சூரியன் இன்னும் கோபமடையவில்லை. காயத்ரியின் வீட்டை ஒட்டி இருக்கும் சொர்ணம் அக்கா வீட்டுக்குப் போனாள். கூடத்தில் ஒரு உருவம் போர்வைக்குள் சுருண்டிருந்தது. சமையலையிலிருந்து பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு சமையலறைக்குச் சென்றாள்.
பச்சை நைட்டியை முழுங்கால்வரை தூக்கி இடுப்பில் சொருகியிருந்த சொர்ணம்.. அடுப்பு பக்கம் இருந்து திரும்பி இவளைப் பார்த்தாள்.
"வா புள்ள.. இப்பதான் வர்ரியா?" எனக் கேட்டு விட்டு மீண்டும் அடுப்பு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
எதுவும் பேசாமல் அவள் பக்கத்தில் போய் நின்றாள் காயத்ரி. அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. சொர்ணம் மறுபடியும் திரும்பி காயத்ரியைப் பார்த்து திகைத்தாள்.
"ஏய்.. என்னாச்சு புள்ள? "
வாயை திறந்து சொல்ல முடியாமல் கேவவினாள் காயத்ரி.
அவள் தோளைத் தொட்டாள் சொர்ணம்.
"உங்கப்பன் அடிச்சிட்டானா?"
மறுப்பாக தலையை ஆட்டினாள்.
"அப்றம் ஏன்டி அழுகற? நைட் சிப்டுதான போயிட்டு வர..?"
கண்ணீருடனே ஆமோதிப்பாக தலையாட்டினாள்.
"என்னாச்சு காயு.. இப்படி நீ ஒண்ணுமே சொல்லாம அழுதிட்டிருந்தா நான் என்னன்னு நெனைக்கறது? வாயை தெறந்து சொல்லிட்டு அழு.."
விம்மலை அடக்கினாள். கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள். சொர்ணத்தை பார்க்க முடியாமல் பல்லைக் கடித்தபடி சொன்னாள்.
"அப்பா செத்துக் கெடக்கு.."