18-12-2018, 09:44 AM
இந்தியா தோல்வி
இந்த நிலையில், இன்று 5-வது நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் ஹனுமா விஹாரி, ஸ்டார்க் பந்தில் 28 ரன்களில் வெளியேறினார். ரிஷாப் பண்ட் 30 ரன்களில் லயன் சுழலில் சிக்கினார். இதன்பிறகு, வந்த வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 56 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது.