18-12-2018, 09:44 AM
பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலிய அணி 326 ரன்னும், இந்திய அணி 283 ரன்னும் எடுத்தன.
43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 93.2 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 6 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. புஜாரா (4 ரன்கள்), விராட் கோலி( 17 ரன்கள்) என முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து இருந்தது.