24-04-2019, 11:56 AM
(This post was last modified: 24-04-2019, 11:57 AM by Niruthee. Edited 1 time in total. Edited 1 time in total.)
அப்பா செத்துப் போவார் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக செத்துப் போவார் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவளுக்கிருந்த ஒரே உறவு இந்த அப்பாதான். குடிகாரர்தான் என்றாலும் அந்த உறவும் இனி இல்லை என்றானது. இனி தான் ஆனாதை என்ற உணர்வு அவள் நெஞ்சைத் தாக்க.. அவளது விம்மல் மேலும் மேலும் வெடித்து அவளை கதறி அழச் செய்தது.. !! ஆனால் அவள் அழுகைக் குரல் அந்த வீட்டை விட்டு வெளியே போகவே இல்லை..!!
அழுது தீர்த்து மெல்லத் தேறினாள். கண்களில் இருந்து வழியும் கண்ணீரை புறங்கையால் துடைத்தபடி.. கால்கள் நடுங்க அப்பாவை நெருங்கினாள். அப்பாவின் உடலில் டவுசர் மட்டுமே இருந்தது. அது கூட கசங்கிய நிலையில் அவரின் இடுப்புடன் கோபித்துக் கொண்டதைபோல அவர் இடுப்பை விட்டு கொஞ்சம் விலகியிருந்தது.
அவர் வலியால் வீடு பூராவும் உருண்டு புரண்டிக்க வேண்டும். பாய் கூட கோணல் மாணலாக சுருண்டிருந்தது. அவரைச் சுற்றிலும்.. ஏகத்துக்கும் வாந்தி. அவர் பக்கத்தில் போகவே பயமாக இருந்தது. அவரின் கண்களைப் பார்த்தால் துள்ளி தெரித்து ஓடி விட வேண்டும் போலிருந்தது. ஆனாலும் தயங்கி .. பயத்துடனே நெருங்கி அவரின் நிலை குத்தியிருந்த திறந்த விழிகளை மூடி விட்டாள். அதற்கு மேல் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நடுங்கும் கால்களுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.. !!