24-04-2019, 11:42 AM
(This post was last modified: 25-04-2019, 01:59 AM by Niruthee. Edited 1 time in total. Edited 1 time in total.)
அப்பா செத்துக் கிடந்தார். நிஜமாகவே அப்பா செத்துதான் கிடந்தார்.. !!
பத்துக்கு பத்து.. பத்துக்கு ஆறு என இரண்டு அறைகளைக் கொண்ட சாதாரண ஓட்டு வீடுதான் அது. அதுவும் வாடகை வீடு.. !!
அந்த வீட்டில்தான்.. முன்னறையில் பாயின் இந்த கோடிக்கும் அந்த கோடிக்குமாக கால்கள் இரண்டும் விரிந்து கிடக்க.. இடது கை நெஞ்சில் இருக்க .. வலது கை லேசாக மடங்கிய காலை தொட்டுக் கொண்டிருக்க.. அப்பா செத்துக் கிடந்தார்.. !!
அவர் வாய் 'ஆ' வெனப் பிளந்து கறை படிந்த பற்களை விகாரமாகக் காட்டிக் கொண்டிருந்தது. கண்கள் விரிந்து நிலை குத்தியிருந்தன. வாயில் ஈக்கள் மொய்த்தன. வீடு பூராவும் வாந்தி எடுத்ததின் அடையாளமாக அவர் சாப்பிட்டதெல்லாம் சாராய நாற்றத்துடன் பரவிக் கிடந்தது. அங்கேயும் ஈக்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருந்தன.. !!
கதவைத் திறந்து உள்ளே சென்றவள்.. வீட்டுக்குள் அப்பா இறந்து கிடக்கும் காட்சியைப் பார்த்து அதிர்ந்து போய்.. 'ஹெக்' கென நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். அலறுவதற்காக வாயைத் திறந்தவள்.. அப்படியே புறங்கையை வாயில் திணித்து கவ்விக் கொண்டாள். கண்களிலிருந்து கடகடவென கண்ணீர் வழிந்தது. மூக்கு விகசித்து விடைத்தது. கண்கள் பயத்தில் விரிந்து உறைந்தது. சில நொடிகள் மூச்சு வரத் தவித்து பின் திணறி.. 'ஹெக்'கென விம்மல் வெடித்தது. அப்படியே மடங்கி தரையில் சரிந்து தலையில் கை வைத்துக் கொண்டு கேவி அழுதாள் காயத்ரி.. !!