Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
அனுசரிக்க சொன்ன இயக்குனர் ; அம்பலப்படுத்திய நடிகை

[Image: NTLRG_20190423190822778681.jpg]

மலையாள திரையுலகில் கடந்த 20 வருடங்களாக குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் சஜிதா மாடத்தில். குறிப்பாக கடந்த 2013ல் வெளியான ஷட்டர் என்கிற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்து நன்கு பிரபலமானவர். அதுமட்டுமல்ல மலையாள திரையுலகை சேர்ந்த பெண்கள் நல அமைப்பில் ஒரு உறுப்பினராக இருக்கும் இவர், நாற்பது வயதை தாண்டியவர் எப்போதுமே பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்து, மலையாள சினிமா பிரபலங்களை கூட தைரியமாக விமர்சித்து வருகிறார்..

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கார்த்திக் என்கிற உதவி இயக்குனர் ஒருவர் தான் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சஜிதாவை தொலைபேசி மூலமாக அணுகியுள்ளார்.. அதற்கு சரிதாவும் படம் குறித்த விபரங்களை எனக்கு ஈமெயில் அனுப்புங்கள் பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அந்த உதவி இயக்குனர் சற்றே வழிந்தபடி நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டியிருக்கும்.. உங்களால் முடியுமா என்று கேட்டாராம் உடனே கோபமாக அவரை திட்டிய சஜிதா, உடனே தனது முகநூல் பக்கத்தில் அந்த நபரின் தொலைபேசி எண்ணை கொடுத்து இந்த நபரை அனுசரித்து நடிக்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார்.

இந்நேரம் அந்த நபரின் மொபைல் போனிற்கு எத்தனை கண்டன அழைப்புகள் பறந்தனவோ..
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 24-04-2019, 10:09 AM



Users browsing this thread: 10 Guest(s)