Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
அவனின் ஆழமான பார்வையில் சற்று தடுமாறித்தான் போனால்அவன் தன் அருகாமையை எவ்வளவு விரும்பி ரசிக்கிறான் என்பது கேட்டு ஆச்சரியத்தில் வியந்தாள்.


நெஜமாவா கார்த்தி... அவனை மெதுவாக அணைத்து நெகிழ்ச்சியாய் கேட்டால்.
ஆமா கீர்த்து... இதான் பஸ்ட் டைம்.. ஒரு பொண்ணோட இவ்ளோ க்ளோஸா.. இவ்ளோ ப்ரெண்ட்லியா... இருந்ததே இல்ல..

ஹ்ம்ம்... அவன் கன்னத்தோடு கன்னம் உரச மெலிதாய் அவன் காது மடல் அருகே இதழ் பதித்தாள்.

தேட்டர்ல நீ என் தோள்ல சாஞ்சு படுத்து தூங்கினியே... அந்த மொமன்ட் என் லைஃப்லயே பெஸ்ட் மொமன்ட் கீர்த்தனா ... மொத தடவையா ஒரு பொண்ணு கூட படம் பாக்கும் போது அவ என் தோள்ல சாஞ்சு படுத்து தன் ப்ரச்சன எல்லாம் மறந்து ஏதோ இவன் இருக்கான் எல்லாத்தையும் பாத்துக்கன்ற மாதிரி.. அப்படியே உன்னை வாரி எனக்குள்ள  அணச்சுக்கலாமான்னு தோனிச்சு..

அவன் சொல்ல சொல்ல அவன் கண்களை ஆசையாக பார்த்தவள் மெல்ல அவன் தோளில் சாய்ந்து கொண்டால்.
சரி போலாமா கீர்த்து...

எனக்கு தூக்கம் வருது... இப்படியே கொஞ்ச நேரம் தூங்கிட்டு போலாமா...

மணி பத்தாக போகுது... இதுக்கு மேல இங்க இருந்தா ரிஸ்க்கு..

என்ன ரிஸ்க்கு?
இது ஹைவேஸ் கீர்த்துஎடம் வேற ரொம்ப லோன்லியா இருக்குயார்னா வந்தா எதாவது ப்ரச்சன ஆயிடும்..


ப்ரச்சன ஆனா தான் நீங்க இருக்கீங்களே பாத்துக்க... கொஞ்சலாய் சொல்லி விட்டு அவன் தோளில் முகம் புதைத்து தூங்கி விட்டால்.


அவளை அப்படியே தனக்குள் வாரி அணைத்து கொண்டான், அவளை அப்படியே அணைத்து கண் மூடி தூங்க அவனுக்கு ஆசையாக இருந்தது. ஆனா அந்த ஹைவேல, ரோட்டு ஓரத்துல இப்படி இருக்கறது எவ்வளவு ரிஸ்க்குன்னு ஒரு பயம், ரோட்டின் இருபுறமும் கண்ணுக்கு எட்டின தூரம் வரை ஒரு சின்ன வெளிச்சம் கூட இல்லை. அவ்வப்போது தங்களை கடக்கும் வாகனங்களின் வெளிச்சம் மட்டுமே.

மனம்  முழுவதும் ஒரு வித பயத்துடனும், கீர்த்தனா தன்னை அணைத்து தன் மேல் படுத்திருந்த சந்தோஷத்துடனும், சீட்டில் சாய்ந்து கண் மூடி கிடந்தான்.

மூன்று மணி நேரம் கழித்து கீர்த்தனா மெல்ல அசைய... முழுச்சிட்டியா கீர்த்து?

ஹ்ம்ம்... மணி என்ன..
ஒன்ற ஆகுது... எந்திரி வண்டி எடு...


இப்பவா? காலைல கிளம்பலாம்.. சொல்லி விட்டு அவன் நெஞ்சில் தலை சாய்க்க போனால்.

விளையாடாத கீர்த்து... இந்த எடம் சுத்தமா சரியில்லை... எப்ப வேணாலும் கருப்பு ஜீன் ப்ளு ஷர்ட் போட்டுகிட்டு நாலஞ்சு பேர் கும்பளா உண்ண மேட்டர் வரலாம்...

நாலஞ்சு பேர்லாம் இல்ல கனவுல ஒருத்தன் தான் வந்தான்... அது நீங்க தான்... உங்கள்ட்ட எனக்கு பயம் இல்லை...

ப்ச் விளையாடாத கீர்த்தி... கெளம்பு போலாம்... 

அவனைப் பார்த்து சினுங்கி கொண்டே காரை விட்டு இறங்க போனால்.

எறங்காத கீர்த்து... வெளிய யார்னா இருக்க போறாங்க. . இப்படியே முன்னாடி போய் வண்டிய எடு...

ப்ச்... பயப்படாதீங்க... இங்க யாரும் இல்ல...எனக்கு யூரின் போனும்... நாப்கின் மாத்தனும்... நான் அப்படி ஓரமா போய்ட்டு வந்துடறேன், சொல்லி விட்டு ஹேன்ட் பேகும் வாட்டர் பாட்டிலும் எடுத்து கொண்டு கீழே இறங்கிய கீர்த்தனாவை அதிர்ச்சியுடன் பார்த்தான் கார்த்தி

தன் வேலையை முடித்து முகம் கழுவி ப்ரெஷ் ஆகி திரும்பி வந்து வண்டியை எடுத்தால்.

லூசாடி நீ.. அர்த்த ராத்திரில முன்ன பின்ன தெரியாத எடத்துல.. நாப்கின் மாத்தறேன்னு போற... யார்னா வந்தா என்ன பன்னுவ... 

அதெல்லாம் எத்தனை பேர் வந்தாலும் சமாளிச்சிக்கலாம் ... அலட்சியமாய் சொன்னால்

எப்படி சமாளிப்ப? கராத்தே தெரியுமா

ம்ஹூம்... ஓடத் தெரியும்... ஸ்கூல்ல 500 மீட்டர் ரன்னிங்ல, கூட ஓடறவங்க பாதி தூரம் ஓடறதுக்குள்ள நான் ரீச் ஆய்டுவேன்.. 

ப்ச்... அது அப்ப... இப்ப அப்படி ஓட முடியாது.. 

யார் சொன்னா... போன மாசம் சென்னைல நடந்த மராத்தான்ல கூட ஓடினேன்... 

மராத்தான்லயா

ம்ம்... அந்த ட்ரெய்ண்ட் அத்லெட்ஸ் கூட ஓடி ப்ராக்டீஸே பன்னாத நான் 50 எடத்துக்குள்ள வந்தேன்... 

வாவ்... செம... கீர்த்து... பேசாம அந்த லைன்ல போய்.. ஒலிம்பிக்ல கீது கலந்துக்கலாம்ல... 

ப்ச்... அதுக்கெல்லாம் கோச்சிங்.. ட்ரெய்னிங்ன்னு நெறய செலவாகும்... அப்பாவால முடியாது.. 

ஹோ... இவளுக்குள்ள இப்படி ஒரு டேலன்ட்டா...இதுவரை ஏதோ விளையாட்டு பொண்ணுன்னு நெனச்சா இவ்ளோ ஒரு மெச்சுரிட்டியா என்று அவளை ப்ரமிப்பாய் பார்த்தான்

ப்ச்... பேசாம பான்டில ரூம் போட்ருக்கலாம்ல... இந்த நைட்ல எதிர்ல வண்டி வர... ஓட்டவே கஷ்டமா இருக்கும்...

பொறுமையா போ... பகல்ல ஓட்டின மாதிரி பறக்காத...

நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் 60 தான்ட மாட்டேன்... என்னையே பாத்துட்டு வாங்க... தூங்கிட்டன்னா எழுப்பி விடுங்க...

எது தூங்கிடுவியா.... அதிர்ச்சியாய் கேட்டான்.


பின்ன.. எனக்கு இப்படி எல்லாம் ராத்திரில எந்திரிச்சு பழக்கமே இல்ல... கடைசியா அம்மாட்ட பால் குடிச்ச வயசுல தான் இப்படி பாதி ராத்திரில எந்திரிச்சது... அதுவும் பாலுக்கு அழுதுகிட்டே.... சொல்லி விட்டு அவன் கண்ணில் தெரிந்த பீதியை பார்த்து மனதிற்குள் சிரித்து கொண்டால்.

எதையாவது சொல்லி என்ன பயமுறுத்தாத கீர்த்து...

அவ்ளோ பயமா இருந்தா நீங்க ஓட்டுங்க...

ஐயோ.. நான் குடிச்சிருக்கேன் கீர்த்து...

எது... நாலு மணி நேரம் முன்னாடி அடிச்ச அந்த அர பீரா ...

 ப்ச்... இல்ல... இப்ப நீ எந்திரிக்கறதுக்கு பத்து நிமிசம் முன்னாடி தான் ரெண்டாவது பீர குடிச்சேன்

ஹ்ம்ம்... 

சற்று தூரம் போனதும் ஹைவேயில் இருந்த ஒரு கடையில் நிறுத்தினால்

எனக்கு டீ சொல்லுங்க... கடையின் வெளியில் இருந்த சேரில் அமர்ந்தாள்

அவன் டீயும் பிஸ்கட்டும் வாங்கி வந்தான்

ஜாலியா இருந்துச்சுல்ல... முகம் நிறைய மகிழ்ச்சியுடன் சொன்னால்

எது

இன்னிக்கு படம் பாத்தது... திடீர்னு ப்ளான் பன்னி லாங் ட்ரைவ் வந்தது.. கார்ல ஒக்காந்து ரொம்ப நேரம் பேசினது... இப்படி அர்த்த ராத்திரில டீ சாப்பிடறது... எல்லாமே... 

ஹ்ம்ம்... 

அப்பா அடிக்கடி நைட் ட்ரிப் போய்ட்டு வந்து கத கதயா சொல்லுவாரு... அப்பல்லாம் எனக்கும் அப்படி நைட் ட்ரைவ் போகனும்னு ஆசையா இருக்கும்... இப்பதான் பஸ்ட் டைம் சென்னைய விட்டு வெளிய வரேன்.. செம ஹேப்பியா இருக்கு... குழந்தையாய் குதூகலத்துடன் சொன்னால்

அவளிடம் இருந்த சந்தோஷத்தையும், அவள் முகத்தில் அந்த மகிழ்ச்சி தந்த சிரிப்பையும் ரசித்து கொண்டே டீ யை குடித்தான்

டீ குடித்ததில் தூக்கம் கலைந்தவள் வண்டியை நூறில் விரட்டி நாலு மணிக்கு வீடு வந்து சேர்ந்தால்

போத தெளிஞ்சிடுச்சா... ஓட்டிட்டு வீட்டுக்கு போய்டுவீங்களா... குறும்பு சிரிப்புடன் கேட்டால்

அவளின் கினடலை ரசித்து கொண்டே தலையாட்டினான்

அப்பறம் இனிமே தனியால்லாம் படத்துக்கு போகாதீங்க... இந்த கேர்ள் ப்ரெணடயும் கூட்டிட்டு போங்க... சொல்லி விட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் வீடு நோக்கி நடந்தால் கீர்த்தனா. 

*********************************************
[+] 2 users Like revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 19-11-2021, 07:49 AM



Users browsing this thread: 36 Guest(s)