Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள்! - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு
இந்தியாவில், 17-வது மக்களவைத் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரை இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மூன்றாம்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. 
[Image: election_07062.jpg] அஸ்ஸாம் 4, பீஹார் 5, சத்தீஸ்கர் 7, கர்நாடகா 14, கேரளா 20, மகாராஷ்டிரா 14, ஒடிசா 6, உத்தரப்பிரதேசம் 10,  கோவா 2, குஜராத் 26, காஷ்மீர் 1, மேற்குவங்கம் 5, தாத்ரா நாகர் ஹவேலி 1,  டாமன்-டையு 1 ஆகிய தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 


[Image: electin_3_07178.jpg]
இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியா முழுவதும் 188 மில்லியன் மக்கள் வாக்களிக்க உள்ளதால், ஏழு கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில் இன்று நடைபெறுவதே மிகப்பெரும் வாக்குப்பதிவு எனக் கூறப்படுகிறது.  பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 13 மாநிலங்களில் மொத்தம் 2,10,770 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 1,640 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இன்று இந்திய பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா , கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்ற தலைவர்கள் வாக்களிக்க உள்ளனர். 
[Image: electin_2_07307.jpg]
இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை ஐந்து மணிவரை நடைபெற உள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்துவருகின்றன. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலின் வாக்குப்பதிவு, ஒட்டுமொத்தமாக மே 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது. 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 23-04-2019, 11:05 AM



Users browsing this thread: 99 Guest(s)