Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
#33
கேள்விக்கு விடை கிடைத்து விட்டது’ - சிந்து பெருமிதம்

மொத்தத்தில் சிந்து கைப்பற்றிய 14-வது சர்வதேச பட்டம் இதுவாகும். பின்னர் அவர் கூறுகையில், ‘அழகான வெற்றியுடன் இந்த ஆண்டை நிறைவு செய்திருப்பது உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன். மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இந்த ஆண்டின் எனது முதல் பட்டம் இது. அதுவும் தொடர்ச்சியான இறுதிப்போட்டி தோல்விகளுக்கு பிறகு கிடைத்திருப்பதால் இந்த வெற்றி மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

இறுதிப்போட்டிகளில் ஏன் எப்போதும் தோற்று கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்கள். இனி அந்த கேள்வியை என்னை நோக்கி தொடுக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் இப்போது நான் தங்கப்பதக்கம் வென்று விட்டேன் என்று பெருமையோடு சொல்ல முடியும். ஒரு வகையில் மக்கள் அந்த மாதிரி என்னிடம் கேட்டது நல்லதாகவே பட்டது. அதனால் தான் நானும் எனக்குள் இறுதிப்போட்டியில் தோற்பது ஏன் என்று கேட்க வேண்டி இருந்தது. இவற்றுக்கு ஒரு வழியாக இப்போது விடை கிடைத்து விட்டது.

லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றேன். அதைத் தொடர்ந்து அரைஇறுதி, இறுதிப்போட்டியிலும் வெற்றி கண்டேன். அந்த வகையில் இந்த தொடர் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் நேர் செட்டில் வெற்றி பெற்றாலும் ஒவ்வொரு புள்ளியையும் எடுக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது. அடுத்து இந்தியாவில் நடக்கும் பிரிமீயர் பேட்மிண்டன் லீக்கில் விளையாட உள்ளேன்’ என்றார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 17-12-2018, 10:25 AM



Users browsing this thread: 35 Guest(s)