Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
#32
இரு முன்னணி நட்சத்திரங்கள் மல்லுகட்டியதால் களத்தில் அனல் பறந்தது. முதல் செட்டில் சிந்து 7-3, 14-6 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு சரிவில் இருந்து மீண்ட ஒகுஹரா 17-17 என்று சமநிலைக்கு கொண்டு வந்தாலும், சூப்பரான சில ஷாட்டுகள் அடித்து முதல் செட்டை சிந்து வசப்படுத்தினார்.

2-வது செட்டிலும் சிந்து முதல் 3 புள்ளி முன்னிலையுடன் அமர்க்களமாக ஆரம்பித்தார். இருவரும் நீயா-நானா? என்று மட்டையை சுழட்டினர். ஒரு கேமில் இடைவிடாது மொத்தம் 48 ஷாட்டுகளை விளாசி, ரசிகர்களை பரவசப்படுத்தினர். ஆனால் பந்தை வலை மீது அடிப்பது, வெளியே அடிப்பது என்று ஒகுஹரா சற்று அதிகமாக தவறுகள் இழைத்ததால், சிந்துவுக்கு அது சாதகமாக மாறியது. இறுதியில் லாவகமான ஒரு ஷாட் மூலம் ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார்.

62 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-19, 21-17 என்ற நேர் செட்டில் ஒகுஹராவை சாய்த்து சாம்பியன் பட்டத்திற்குரிய தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தார். கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். முந்தைய காலங்களில், சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் என்ற பெயரில் நடந்த இந்த போட்டி தற்போது உலக டூர் இறுதி சுற்று என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் 2016-ம் ஆண்டு அரைஇறுதியிலும், 2017-ம் ஆண்டு இறுதிஆட்டத்திலும் மண்ணை கவ்விய சிந்து இந்த முறை தடையை வெற்றிகரமாக கடந்திருக்கிறார். மற்ற இந்தியர்களை எடுத்துக் கொண்டால் சாய்னா நேவால் 2011-ம் ஆண்டும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா- திஜூ ஜோடி 2009-ம் ஆண்டும் இறுதி ஆட்டங்களில் தோற்று இருந்தனர்.

2018-ம் ஆண்டில் சிந்து ருசித்த முதல் பட்டம் இதுவாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சிந்து ஹாங்காங் ஓபன், உலக டூர் இறுதி சுற்று, இந்திய ஓபன், காமன்வெல்த் விளையாட்டு, தாய்லாந்து ஓபன், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டி ஆகியவற்றில் வரிசையாக இறுதிப்போட்டிகளில் தோல்வி அடைந்து, ஒவ்வொரு முறையும் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாகி இருந்தது. இறுதி போட்டி என்றாலே சிந்து மனரீதியாக தடுமாறுவதுடன் பதற்றத்தில் கோட்டை விட்டு விடுகிறார் என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த பட்டம் அவருக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

வாகை சூடிய ஐதராபாத்தை சேர்ந்த 23 வயதான சிந்துவுக்கு 12 ஆயிரம் தரவரிசை புள்ளிகளுடன் ரூ.86 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த ஒகுஹரா ரூ.43 லட்சத்தை பரிசாக பெற்றா
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 17-12-2018, 10:24 AM



Users browsing this thread: 66 Guest(s)