17-12-2018, 10:22 AM
உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம்:‘கேள்விக்கு விடை கிடைத்து விட்டது’ - சிந்து பெருமிதம்
டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற உலக டூர் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியனும், 5-ம் நிலை வீராங்கனையுமான நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொண்டார்.