22-04-2019, 05:56 PM
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 14 - ராசு
“அறிவிருக்கா உனக்கு?”
மகேந்திரன் கேட்ட தொனியில் கிருஷ்ணவேணிக்குள் நடுக்கம் பரவியது.
அவளுக்குத் தான் அப்படி என்ன தவறாகப் பேசி விட்டோம் என்றே புரியவில்லை.
தான் தேவையில்லாமல் அவனிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்டது மட்டும் அவளுக்குப் புரிந்தது. திகைத்து விழித்தாள்.
“என்ன திரு திருன்னு முழிக்கிறே?”
அதற்கும் அதட்டலாய் கேட்டான்.
அவள் பதில் சொல்ல முடியாமல் பேசாமல் நின்றாள்.
சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள எடுத்துக் கொண்டான்.
பெருமூச்சை விட்டு தன்னை நிதானப்படுத்திக்கொண்டவன் அவளை நோக்கினான்.
மீண்டும் திட்டப் போகிறானோ? என்ற பயத்தில் அவனைப் பார்த்தாள்.
தன்னைக் காப்பாற்ற யுகேந்திரன் கூட வரமாட்டானே. அவள் மகேந்திரனிடம் பேசப் போவது அவனுக்குத் தெரியாதே.
அவன் என்ன மாதிரி மன நிலையில் இருக்கிறான் என்று தெரியாமல் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் வந்துவிட்டது புரிந்தது.
“இதப் பாரு. இந்த வீட்டுக்கு நாங்க ரெண்டு பேரும் வாரிசு. உனக்குத் தெரியும்தானே?”
அவள் ஆமென்று தலையாட்டினாள்
“அவனுக்கு இந்த சொத்தில் சம பங்கு உண்டு. அத்தோட அவன் எங்க எல்லோருக்கும் செல்லம் என்பதால் அவனுக்கு நிறையவே கொடுப்போம். அப்ப அவனுக்குன்னு வர்ற பங்குக்கான சொத்தை அவனால் எப்படி நிர்வகிக்க முடியும்? அதற்கான அறிவு அவனுக்கு வேண்டாமா? அவன் சொத்தைப் பெருக்க வேண்டாம். ஆனால் கிடைக்கிறதை கோட்டை விடாமல் இருக்க வேண்டுமல்லவா? பாட்டு கூத்து என்று அலைந்தால் அவனால் எப்படி சொத்தை நிர்வாகம் செய்ய முடியும்?”
அவளுக்கு அந்தக் கோணம் புதிது. அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதை அப்படியே யுகேந்திரனிடம் சொன்னால் அவனும் புரிந்துகொள்வான்தானே?
அதையே அவள் மகேந்திரனிடம் சொன்னாள்.
அவன் அவளை முறைத்தான். மீண்டும் திட்டப் போகிறானோ? என்று பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
“இதை எப்படி நான் யுகாவிடம் சொல்ல முடியும்? அவனிடம் சொன்னால் என்ன செய்வான்? எனக்கு சொத்து வேண்டாம். எல்லாத்தையும் நீங்களே பார்த்துக்கங்க. ஏன் சொத்தைப் பிரிக்கனும்? என்று கேட்பான்.”
அவன் சொன்ன போது யுகேந்திரன் அப்படி சொல்லக்கூடியவன்தான் என்று புரிந்தது. அவளுக்குமே ஏன் சொத்தைப் பிரிக்கனும் என்று தோன்றியது.
அவளது பார்வையைக் கொண்டே அவள் மனதைப் புரிந்துகொண்டவன் சிறிது நேரம் கண்களை மூடி தனக்குள் பேசுவது புரிந்தது.
“எங்களுக்கு மட்டும் சொத்தைப் பிரித்துக்கொடுத்து அவனை தனிமைப்படுத்தனும் என்று ஆசையா என்ன? நாளைக்கே அவனுக்கு திருமணம் ஆகும். அப்போது அவனுக்கு தனியே சொத்து வேணும் என்று அந்தப் பெண் எண்ணினால்? அப்போதுதானே அவனுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.”
ஒருவேளை மகேந்திரனுக்கும் திருமணம் ஆனால் அப்படி நடக்க வாய்ப்பு உண்டு. அதுவும் அந்த சாருலதாவை மகேந்திரன் விரும்புகிறான் என்றால் அப்படி நடக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
யுகேந்திரன் திருமணத்தைப் பற்றி அவன் பேசியதும் அவள் அமைதியானது கண்டு மகேந்திரன் மனம் வருந்தினான்.
அவள் திருமணத்திற்குப் பிறகு தம்பியைப் பிரித்துவிடுவாள் என்று நினைக்கவே மனம் தாளவில்லை. ஆனால் அவள் அப்படிப்பட்டவள் இல்லை என்றும் மனதின் ஒருபக்கம் அவனிடம் அறிவுறுத்தியது.
அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“நீ சொல்றதைப் பத்தி நான் அப்பவிடம் பேசுகிறேன். இப்போதைக்கு அவன் விருப்பப்படியே செய்யட்டும். அதன் பிறகு அவன் தொழிலைப் பொறுப்பேத்துக்கனும். பாட்டே தொழிலா வச்சுக்க முடியாது.”
அவன் தெளிவாகச் சொல்லிவிட அவள் நன்றி கூறிவிட்டு சந்தோசத்தோடு தனது அறைக்குச் செல்லத் திரும்பினாள்.
“ஆனால் ஒரு விசயம்.”
அவனது குரல் அவளை நிறுத்தியது.
நின்று திரும்பிப் பார்த்தாள்.
“அவனது தேர்வு முடிவைப் பார்த்தேன். எனக்குத் திருப்திகரமா இல்லை. இந்தக் கடைசி பருவத்தில் அவன் நல்ல மதிப்பெண்கள் எடுக்கனும். அப்படி எடுத்தாதான் அவனோட விருப்பத்துக்கு நான் சம்மதிக்க முடியும்.”
“கண்டிப்பா அவன் நல்ல மதிப்பெண்கள் எடுப்பான்.
அவள் நிச்சயமாகச் சொன்னாள்.
அவளுக்குத்தான் நன்றாகத் தெரியுமே. யுகேந்திரன் வேண்டுமென்றேதான் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கிறான் என்று.
அவள் சந்தோசத்துடன் செல்ல, அவனுக்கு உறக்கமே தொலைந்தது.
அவ்வளவு நிச்சயமா? அவள் சொன்னால் நிறைய மதிப்பெண்கள் எடுப்பானா?
தன் தம்பிக்காக இன்னொருவள் சிபாரிசு செய்ய வந்தது அவனுக்கு வருத்தத்தை தந்தது.
தனக்கும் தன் தம்பிக்கும் நடுவில் அவள் வருமளவிற்கு தங்கள் உறவு இருக்கிறதா? அந்த நினைவே அவன் மனதை உறுத்தியது.
அப்போது தங்களை விட அவளைப் பெரிதாக நினைக்கிறானா?
நேரம் போவதே தெரியாமல் நின்றவன் பிறகு தனது அறைக்குச் சென்றான்.