22-04-2019, 05:37 PM
தன் சினிமா கரியரை உதவி இயக்குநராக ஆரம்பித்து, இப்போது ஹீரோவாக ஜொலிக்கும் பிரபலங்களைப் பற்றிய தொகுப்பு இது.
"நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு தற்செயல்தான்!" என்பதைப் பல பிரபலங்களின் பேட்டிகளில் பார்த்திருப்போம். நடிகனாக வேண்டும், இயக்குநராக வேண்டும் என்று சினிமா துறைக்குள் நுழைந்து தங்களின் எண்ணத்தைச் சாத்தியப்படுத்தியவர்கள் மத்தியில், "நினைத்த துறை வேறு; இருக்கும் துறை வேறு. ஆனால், சினிமாவுக்குள் இருந்தால் போதும்" என்ற எண்ணமுடைய பலரும் இருக்கின்றனர். அப்படி தன் சினிமா கரியரை உதவி இயக்குநர்களாக ஆரம்பித்து, இப்போது ஹீரோக்களாக ஜொலிக்கும் பிரபலங்களைப் பற்றிய தொகுப்பு இது.
கார்த்தி :
வெளிநாட்டில் மாஸ்டர் டிகிரி படித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிய கார்த்திக்கு, சினிமா இயக்குவதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால், இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக 'ஆயுத எழுத்து' படத்தில் பணியாற்றினார். அந்தப் படத்தில் கல்லூரி நண்பர்களில் ஒருவராக சில காட்சிகளில் தோன்றுவார். பிறகு, நடிக்க வாய்ப்பு வர 'பருத்திவீரன்' கதையில் நடிகராக அறிமுகமான கார்த்தி, இன்று கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். தன் இயக்குநரான மணிரத்னம் இயக்கிய படத்திலேயே (காற்று வெளியிடை) ஹீரோவாக நடித்துவிட்டார். தற்போது, 'கைதி', பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படம், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார், நடிகர் கார்த்தி.
சித்தார்த் :
கல்லூரிப் படிப்பை முடித்த சித்தார்த்தை இயக்குநர் மணிரத்னத்திடம் அறிமுகப்படுத்தியது ஜெயேந்திரா என்ற விளம்பரப் பட இயக்குநர். இவர் சித்தார்த்தின் அப்பாவுக்கு நண்பர் மற்றும் பின்னாளில் சித்தார்த்தை வைத்தே '180' படத்தை இயக்கியவர். மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். எழுத்தாளர் சுஜாதா மூலமாக ஷங்கருக்கு அறிமுகமான சித்தார்த், 'பாய்ஸ்' படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து, தனது குருவான மணிரத்னம் இயக்கத்தில் 'ஆயுத எழுத்து' படத்தில் நடித்தார். 2017-ஆம் ஆண்டு வெளியான 'அவள்' படத்திற்கு மிலிந்த் ராவுடன் இணைந்து கதை எழுதியுள்ளார். இப்போது இவர் வசம் 'சிவப்பு மஞ்சள் பச்சை', 'அருவம்' என இரு படங்கள் உள்ளன.
விஷால் :
அப்பா தயாரிப்பாளராக இருந்தாலும், முறைப்படி சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்த விஷால், அர்ஜுனிடம் 'வேதம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பின்னரே, 'செல்லமே' படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படி ஆரம்பித்த இவரது பயணம் இன்று 25 படங்களைக் கடந்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த விஷாலுக்கு வில்லனாக 'இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் நடித்திருந்தார். நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார். 'அயோக்யா' ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது இதை முடித்துவிட்டு, 'இரும்புத்திரை 2' படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், நாய்களை மையமாக வைத்து ஒரு படத்தை விஷால் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
நானி :
ஆர்ஜே-வாக இருந்த நானி, லக்ஷ்மி நாராயணா இயக்கிய 'ராதா கோபாலம்' படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். பிறகு, 'அல்லரி புல்லோடு', 'தீ', 'அஸ்த்ரம்' உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார். தன் தோழி இயக்குநர் நந்தினி ரெட்டி ஒரு விளம்பரப் படத்தை இயக்க, அதில் நடித்துள்ளார். பிறகு இயக்குநர் மோகன் கிருஷ்ணா 'அஸ்ட சம்மா' என்ற காமெடிப் படத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படம் ஹிட்டாக அடுத்தடுத்து நானிக்கு அடித்தது ஜாக்பாட். இப்போது 'நேச்சுரல் ஸ்டார்' என்ற அடைமொழியுடன் தெலுங்கு சினிமாவில் ஜொலித்து வருகிறார். 'பிக் பாஸ்' இரண்டாவது சீஸனைத் தொகுத்து வழங்கினார். 'டி ஃபார் டொப்பிடி', 'ஆவ்' என இரு படங்களை தயாரித்துள்ளார். இவரது நடிப்பில் இந்த வாரம் 'ஜெர்ஸி' வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்ததாக, விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
ரவி தேஜா :
'அபிமன்யு', 'சைதன்யா', 'ஆஜ் கா கூண்டா ராஜ்' உள்ளிட்ட படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய ரவி தேஜா, பின் கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் வெளியான 'நின்னே பெல்லாடுதா' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அந்தப் படத்தில் ஒரு சின்ன ரோலிலும் நடித்திருந்தார். அவரின் அடுத்தடுத்த படங்களில் உதவி இயக்குநராகவே இருந்த ரவி தேஜாவை 'சிந்தூரம்' என்ற படத்தில் லீடு ரோலில் நடிக்க வைத்தார். அந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க, முழுநேர நடிகராக மாறி 60 படங்களுக்குமேல் நடித்துவிட்டார். 'அமர் அக்பர் ஆன்டனி' படத்தைத் தொடர்ந்து, 'டிஸ்கோ ராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சந்தீப் கிஷன் :
சென்னையில் பிறந்து வளர்ந்த சந்தீப் கிஷன், லயோலாவில் படித்துக்கொண்டிருக்கும்போதே சினிமா வாய்ப்புகள் தேடி அலைந்திருக்கிறார். அப்படி ஒருநாள் கெளதம் மேனனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, தன்னிடம் உதவி இயக்குநராகச் சேரச் சொல்லியிருக்கிறார், கெளதம். 'வாரணம் ஆயிரம்' படத்தில் பணியாற்றிய பன்னிரண்டு உதவி இயக்குநர்களுள் சந்தீப்பும் ஒருவர். அதன் பிறகு, 'சிநேக கீதம்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழில் 'யாருடா மகேஷ்' இவருக்கு முதல் படம். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துவரும் இவரின் கைவசம், 'நரகாசூரன்', 'கண்ணாடி', 'தெனாலிராமா பி.ஏ., பி.எல்.,' உள்ளிட்ட படங்கள் உள்ளன.
டொவினோ தாமஸ் :
மாடலாக இருந்து பல விளம்பரப் படங்களில் நடித்த டொவினோ தாமஸ், 2012-ஆம் ஆண்டு வெளியான 'பிரபுவின்டே மக்கள்' என்ற படத்தில் சின்ன ரோலில் நடித்து அறிமுகமானார். அதற்கு முன்னர், ரோஷன் பீதாம்பரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'தீவ்ரம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். மோகன்லால், ப்ரித்விராஜ், உன்னி முகுந்தன் போன்ற மற்ற ஹீரோக்களின் படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதில் இவரது நடிப்பு பரவலாகப் பேசப்படவே, இவரை லீடு ரோலில் வைத்தே படமெடுக்கத் தொடங்கிவிட்டனர். 'மாரி 2' படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருந்தார். தான் ஒரு ஹீரோவாக இருந்தாலும், மற்ற நடிகர்களின் படங்களில் நல்ல கேரக்டர்கள் அமைந்தால் அதிலும் நடித்து வருகிறார், டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் 'வைரஸ்', 'கல்கி' எனப் பல படங்களில் வெளியாகக் காத்திருக்கின்றன.
பிரணவ் மோகன்லால் :
மோகன்லாலின் மகனான பிரணவ், குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தார். பின், படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிய பிரணவ், படிப்பு முடிந்தவுடன் இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் 'பாபநாசம்', 'லைஃப் ஆஃப் ஜோஸுட்டி' படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நடிக்க வாய்ப்புகள் வர, 'இருபத்தியொன்னாம் நூட்டாண்டு' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது, ப்ரியதர்ஷன் இயக்கிவரும் 'மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தில் மோகன்லாலின் இளம் வயது கேரக்டரில் நடித்து வருகிறார்.
தவிர, பாலிவுட் நடிகர்கள் ஹ்ருத்திக் ரோஷன் அவரது அப்பா ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியான நான்கு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ரன்பீர் கபூரும் தனது தந்தை ரிஷி கபூர் இயக்கத்தில் 'அப் அப் லெளத் சலேன்' என்ற படத்திலும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த 'ப்ளாக்' படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளா