22-04-2019, 05:32 PM
ராஜபாளையத்தில் தொடங்கியது ஸ்ருதி ஹாசன்- விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படப்பிடிப்பு!
இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு எனும் பொதுவுடைமை' எனத் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணி மற்றும் இடத்தைப் பிடித்த இயக்குநர்களில் ஒருவரான எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் அடுத்த படம், 'லாபம்'. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று பூஜையோடு ராஜபாளையத்தில் தொடங்கியது. படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க, இவருக்கு ஜோடியாக முதல் முறையாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். விஜய் சேதுபதியின் நண்பரும் இயக்குநருமான ஆறுமுகக்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார். சமூக அரசியல் பேசும் படங்களைத் தந்துள்ள இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், தேசிய விருது பெற்றவர்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவில், டி.இமான் இசையில் உருவாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையம், தென்காசி, மதுரை எனப் பல தென் மாவட்ட ஊர்களில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது