22-04-2019, 05:10 PM
``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன்? - தோனி சொன்ன லாஜிக்
பெங்களூரு - சென்னை அணிகள் மோதிய நடப்பு ஐபிஎல் தொடரின் 39 -வது போட்டியில், பெங்களூரு அணி 1 ரன்னில் வெற்றிபெற்றது. கடைசிவரை போராடிய தோனி தலைமையிலான சென்னை அணி, தோல்வியைத் தழுவியது. தற்போது வரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி, 3 வெற்றி 7 தோல்விகளுடன் கடைசி இடத்திலும், சென்னை அணி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் முதலாவது இடத்திலும் தொடர்கின்றன
நேற்றைய போட்டியில், 28/4 என்ற மோசமான தொடக்கத்தில் இருந்து அணியை மீட்டுக்கொண்டுவந்தார், தல தோனி. ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டி என்றாலே, தோனி தனி மாஸ் காட்டுவார். ஆர்.சி.பி அணிக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்த வீரர், தோனிதான். நேற்றைய போட்டியில், 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்த அவர், டி20 போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவுசெய்தார்.
இந்தப் போட்டியில், சென்னை இன்னிங்ஸில் மொத்தம் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் 8. அதில் 7, தோனி அடித்தது. இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸர்களை அவர் கடந்தார். தற்போது வரை 203 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்கள் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையும், முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். முதல் இடத்தில் 323 சிக்ஸர்களுடன் கெயிலும், 204 சிக்ஸர்களுடன் டிவில்லியர்ஸும் உள்ளனர்.
நேற்றைய போட்டிக்குப் பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ``இது ஒரு ஆரோக்கியமான போட்டி. நாங்கள் பெங்களூரு அணியை சிறப்பாகக் கட்டுப்படுத்தினோம். இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோருக்குள் அவர்களைக் கட்டுப்படுத்தினோம். எங்களின் டாப் ஆர்டரில்தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிரணியின் பலம் என்ன என்பதை அறிந்த நாம், ஒரு திட்டமுடன் போட்டியை எதிர்கொள்கிறோம். ஆனால், தொடக்கத்தில் இழக்கும் விக்கெட்டுகளால், மிடில் ஓவர்களில் ரன்கள் எடுக்க முடியாமல் போகிறது.

கடந்த ஆண்டு சென்னை அணி, ஐபிஎல் தொடருக்கு கம்பேக் கொடுத்ததில் இருந்து தற்போதுதான் முதன்முறையாக 2 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்துள்ளது. மேலும், சென்னை அணிக்கு எதிராகக் கடந்த 7 போட்டிகளில் வெற்றியைச் சந்திக்காத பெங்களூரு, தனது சோகமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
நேற்றைய போட்டிக்குப் பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ``இது ஒரு ஆரோக்கியமான போட்டி. நாங்கள் பெங்களூரு அணியை சிறப்பாகக் கட்டுப்படுத்தினோம். இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோருக்குள் அவர்களைக் கட்டுப்படுத்தினோம். எங்களின் டாப் ஆர்டரில்தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிரணியின் பலம் என்ன என்பதை அறிந்த நாம், ஒரு திட்டமுடன் போட்டியை எதிர்கொள்கிறோம். ஆனால், தொடக்கத்தில் இழக்கும் விக்கெட்டுகளால், மிடில் ஓவர்களில் ரன்கள் எடுக்க முடியாமல் போகிறது.
ஆடுகளம் கொஞ்சம் கணிக்கமுடியாதபடிதான் இருந்தது. புதிதாகக் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு நிறையவே சிரமமாக இருந்தது. பார்ட்னர்ஷிப் அமைப்பது மிக முக்கியமானது. பெரிய ஷாட் அடிப்பதில் தவறில்லை; நான் ஆட்டமிழந்தாலும் அடுத்தவர்கள் வந்து ஆட்டத்தை முடித்துவைப்பார்கள். ஆனால், விக்கெட்டை இழக்காமல் பெரிய ஷாட் ஆட வேண்டும் என்பதுதான் பிரச்னை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் எண்ணத்தில் ஆட முடியும். 5,6 மற்றும்7-வது நிலைகளில் களமிறங்கும் வீரர்கள், மனதில் என்ன கணக்கு வைத்திருந்தாலும், அதைச் செயல்படுத்தும் முன்பு பலமுறை யோசிக்கவேண்டியிருக்கிறது. காரணம், அந்த நேரத்தில் ஒரு விக்கெட் ஆட்டத்தையே முடித்துவிடும்” என்றார்