Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு!

[Image: IMG-20190420-WA0052_08034.jpg]

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்பட்டது. மின் உற்பத்திக்காகப் பயன்படும் அணைகளிலும் . ஊட்டி நகராட்சிக்குக் குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி அணை உட்பட அனைத்து அணைகளிலும் தண்ணீர் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. அதேபோல் நீலகிரி வனப்பகுதிகளிலும் கடுமையான வறட்சி நிலவி வந்தது. வறட்சி காரணமாக தண்ணீர் தேடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து வந்தன. கூடலூர் ,முதுமலை ,குன்னூர் ஊட்டி உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுப் பல ஏக்கர் பரப்பளவில் வனங்கள் எரிந்து நாசமாயின. குன்னூர் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்தும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர்.


[Image: IMG-20190420-WA0054_08214.jpg]
இந்த நிலையில்  மாவட்டத்தில்  பல பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது நல்ல  மழை பெய்து வருகிறது. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 12 மணிக்குத் துவங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் கொட்டித்  தீர்த்தது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது
.[Image: _20190421_074538_08319.JPG]
மழையால் ஊட்டி நகரில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. ஊட்டி மலை ரயில் நிலைய காவல் நிலையம் தண்ணீரில் மூழ்கியது. நீலகிரி  மாவட்டத்தில் பெய்து வரும் காட்டுத் தீ அபாயம் நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
[Image: _20190421_074615_08319.JPG]
இனி காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டர் தேவைஇல்லை மழைபோதும் என வனத்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 22-04-2019, 05:02 PM



Users browsing this thread: 52 Guest(s)