25-09-2021, 09:08 PM
அன்று - அதிக வேலையிருந்ததால் காமினி நேரம் போவதே தெரியாமல் வேலைபார்த்துக்கொண்டிருந்தாள். அத்தை பத்மாவிடமிருந்து போன் வந்தபோதுதான் மணி 7.30 ஆகியிருப்பது தெரிந்தது.
ஓ மை காட்! என்றபடியே சேரை விட்டு எழுந்தாள். வெளியே எட்டிப்பார்த்தாள். அங்கே அகல்யா உட்கார்ந்து வேலை பார்த்துக்கொண்டிருக்க, அகல்யா கிளம்பிக்கொண்டிருந்த நேரம் பார்த்து, இவள் அவசரமாக ஒரு ரிப்போர்ட் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது.
காமினிக்கு, சில வருடங்களுக்கு முன்பு இருந்த தன்னையே பார்ப்பதுபோல் இருந்தது.
இந்தப் பொண்ணு வேலைல செம ஷார்ப். Very fast. அவளைப்போய் ஓவர் டைம் பண்ணவச்சிட்டேனே
காமினி, அவளருகே போய் அவள் தோளில் கைவைக்க, நிமிர்ந்து பார்த்த அகல்யா, திடுக்கிட்டு வேகமாக எழுந்து நின்றாள்.
மேம்...
காமினி அவளது மானிட்டரை பார்க்க, அதில் அவள் அர்ஜெண்டாக கேட்ட எக்ஸெல் ரிப்போர்ட் இருந்தது.
என்ன அகல்யா இன்னும் வீட்டுக்குப் போகலையா?
இல்ல மேம், இதை முடிச்சிட்டே போய்க்கலாம்னு... நீங்க அவசரமா வேணும்னு கேட்டீங்க
பரவாயில்ல நாளைக்கு காலைல கொடு
முடியப்போகுது மேம்
ம். சரி. முடிச்சிட்டு என் ஆபிஸ் வா
சரி மேம்
காமினி போய் அன்றைய progress ரிப்போர்ட்களை பார்த்துக்கொண்டிருந்தாள். அரை மணி நேரம் கழித்து, அகல்யா உள்ளே வந்தாள்.
வா அகல்யா. உட்காரு
அகல்யா தயங்கித் தயங்கி உட்கார்ந்தாள். காமினி இவ்வளவு அன்பாக, ப்ரன்டலியாக, யாரிடமும் பேசுவதில்லை. ஆனால் தன்னிடம் மட்டும் அவள் தனி அன்புடன் இருப்பது அவளுக்கு பெருமையாக இருந்தது.
செக்யூரிட்டி வந்து நின்றான்.
என்ன மேடம் வேணும்?
அகல்யா நீ ஜூஸ் குடிப்பியா? இல்ல டீ காபி எதுவும்?
எதுன்னாலும் ஓகே மேம்
ரெண்டு ஜூஸ். உங்களுக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே
ஐயோ இல்லம்மா
செக்யூரிட்டி போய்விட, காமினி தொடர்ந்தாள்.
அன்னைக்கு உன்னைப்பற்றி சொல்லிட்டிருந்தே. அப்புறம் பேச முடியாம போச்சு. வீட்ல யார் யார் எல்லாம் இருக்கீங்க. husband என்ன பன்றார். எங்கே படிச்ச. என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க... பதில் சொல்லிக்கொண்டே வந்த அகல்யா, தன் கணவனை பற்றி பேச்சு வந்ததும், கலக்கத்தில், தலையை குனிந்துகொண்டு பேச முடியாமல் தவித்தாள்.
ஏய்... சொல்ல விருப்பம் இல்லைன்னா விட்டுடு
செக்யூரிட்டி ஜூஸ் கொண்டுவந்து வைக்க, காமினி தன் கையிலெடுத்து அகல்யாவுக்கு கொடுத்தாள்.
தேங்க்ஸ் மேம்
உன்னோட work எனக்கு பிடிச்சிருக்கு அகல்யா. கீப் இட் அப்.
தேங்க்ஸ் மேம்
ஆனா இப்படி லேட் work வேணாமே. உனக்கு பேமிலி இருக்கு. Go and take care. Take some rest!
அகல்யா, ஆபிஸில்தான் தான் சந்தோஷமாக, நிம்மதியாக இருப்பதை சொல்ல முடியாமல் தவித்தாள். சரி மேம் என்றாள்.
நானே உன்னை ட்ராப் பண்ணிடுறேன். வா
அகல்யா, பென்ஸ் காருக்குள் தயங்கி தயங்கி உட்கார்ந்தாள். காமினியை நன்றியுடனும் மரியாதையுடனும் பார்த்தாள். இவ்வளவு சொகுசான காரில் உட்கார வாய்ப்பு கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட்டாள். கெத்தாக காரை ட்ரைவ் செய்யும் காமினி மேமை ரசித்துப் பார்த்தாள்.
கம்பெனியில் எல்லாரும் பயந்து நடுங்குவார்கள். இவள் எனக்கு லிப்ட் கொடுக்கிறாள்!