20-04-2019, 06:07 PM
காஞ்சனா 3 : விமர்சனம் ஒன்று, வசூல் வேறொன்று ?
ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் நேற்று வெளியான படம் 'காஞ்சனா 3'. முந்தைய இரண்டு பாகங்களம் நன்றாக வசூலித்ததால், இந்தப் படத்தைக் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு நேற்று வெளியிட்டார்கள்.
படத்தைப் பார்த்த பலரும் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் அதே மாதிரியான கதையில் இருப்பதாகச் சொன்னார்கள். மூன்று பாகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. சில நடிகர்கள் மட்டும்தான் மாறியிருக்கிறார்கள். மற்றபடி, பேய் பயமுறுத்தல், பழி வாங்குதல் எல்லாமே ஒன்றுதான் என்று பரவலான விமர்சனம் எழுந்தது. அரைத்த பேயையை மீண்டும் ராகவா லாரன்ஸ் அரைத்திருக்கிறார் என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்தது.
அதே சமயத்தில் நேற்றைய முதல் நாள் வசூலில் இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 10 கோடியை வசூலித்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ள இந்தப் படத்திற்கு நேரடித் தெலுங்குப் படங்கள் அளவிற்கு வசூல் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் அடுத்த சில நாட்களிலேயே இந்தப் படம் போட்ட முதலீட்டை வசூலித்துவிடும் என்கிறார்கள். முந்தைய பாகங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்
![[Image: NTLRG_20190420164138667529.jpg]](https://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20190420164138667529.jpg)