நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#95
அவன் மனக்கண்ணில் “கிட்டத்தட்ட என்னை மாதிரி ஒருத்திதான் மகேனுக்கு பொருத்தம்னு சொல்றே?” என்று சிரித்தவாறே கேட்ட கிருஷ்ணவேணிதான் வந்து நின்றாள்.

சாருமதி கிருஷ்ணவேணிக்குத் தனியே அழைப்பு விடுத்திருந்தாள். தங்கள் வீட்டார் அவளை ஒரு பொருட்டாக மதித்து அழைப்பு விட்டிருக்க மாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும். அவர்கள் பார்வையில் பணக்காரர்கள்தான் உறவினர்கள். மற்றவர்களை எக்காரணம் கொண்டும் சீந்த மாட்டார்கள்.
அவளுக்கு கிருஷ்ணவேணி போன்று தனது சகோதரியும் பிரியமானவளாய் இருந்திருக்கக்கூடாதா என்று ஏக்கமாய் இருந்தது.
அன்று அவளும் யுகேந்திரனும் பேசியபோது அவளால் முழு மனதோடு பேச இயலவில்லை. என்றாவது நடக்கப் போவதுதான். இதை அவள் எதிர்பார்த்திருந்தாள்தான். ஆனால் அவள் இடைஞ்சலாக இருக்கிறாள் என்று இத்தனை சீக்கிரம் தன்னை புகுந்த வீட்டிற்கு அனுப்பும் வேலையைச் செய்வார்கள் என்று அவள் நினைக்கவேயில்லை. அதனால் அவள் தன் மனதைத் தேற்றிக்கொள்ள சிறிது காலம் பிடித்தது.

“அவளை வீட்டில் வைத்திருக்கிறது பிரச்சினையை மடியிலேயே வைச்சிருக்கிற மாதிரி. நீ பிறந்த போது முடியலைன்னு கொஞ்ச நாள் என் மாமியார்க் கிழவிக்கிட்ட அவளை விட்டேன். அந்தக் கிழவி சாகுறதுக்குள். அவளை கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டுதான் போச்சு. நானும் எவ்வளவோ அவளை திருத்த முயற்சி எடுத்தேன். அவ மட்டும் சரியா இருந்திருந்தா நீங்க ரெண்டு பேருமே இந்நேரம் அந்த வீட்டில் வாக்கப்பட்டு இருக்கலாம். அதான் இவளை வீட்டை விட்டு அனுப்பிவிடலாம்னு இந்த கல்யாண ஏற்பாட்டை அவசர அவசரமா ஏற்பாடு செய்யறோம்.”

சாருலதாவிடம் அவளது அன்னை பேசியது கேட்ட சாருமதி வறண்ட புன்னகையை சிந்தினாள்.

அவளுக்கு மகேந்திரன் மீது ஈடுபாடு உண்டுதான். ஆனால் தனது குடும்பத்தாரின் குணம் பற்றி அறிய நேர்ந்தபோது தனது ஆசையை அவளே குழிதோண்டி புதைத்துவிட்டாள்.

தன்னுடைய காதல் கட்டாயம் மகேந்திரன் வீட்டில் நிம்மதியின்மையைதான் விளைவிக்கும் என்று புரிந்துகொண்டாள்.

அதன் பிறகு அவனைக் காணும்போது அவளுக்கு ஏக்கமாய் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாய் தனது மனதைத் தேற்றிக்கொண்டு வேறு வாழ்க்கைக்கு தயாராகிவிட்டாள்.

சாருமதியின் திருமணத்திற்கு கிருஷ்ணவேணியும் தயாராகிவிட்டாள். சாருமதியின் அழைப்பு வந்திருக்காவிட்டாலும் கண்டிப்பாக அவளுக்காக சென்றிருப்பாள்.

அத்துடன் யாரோ ஒரு நண்பர் வீட்டு விசேசத்திற்கே அவளை விட்டுவிடாமல் அழைத்துச்சென்றார் வனிதாமணி. இப்போது உறவினர் வீட்டு திருமணத்திற்கு விட்டுவிடுவாரா?

சாருமதிக்காக மோதிரம் ஒன்றை வாங்கியிருந்தாள். பரிசு வாங்க யுகேந்திரனும் கூட வந்திருந்தான்.

அவள் ஆசையுடன் வாங்குவதை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளுக்குத் தேவையானது பாசம் மட்டுமே. அந்தப் பாசத்தை அவளிடம் காட்டிவிட்டால் அவர்களுக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள். இதை ஏன் அவள் மனதை காயப்படுத்துகிறவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
திருமண மண்டபத்தில் நுழைந்தவர்களை வீட்டினர் வரவேற்றனர். அவளைக் கண்ட சாருலதா முகத்தைச் சுளித்தாள். அதை கிருஷ்ணவேணி கண்டுகொள்ளவில்லை.
யுகேந்திரனும் கிருஷ்ணவேணியும் மணமகள் அறையை நோக்கிச் செல்ல வனிதாமணி தானும் வருவதாகச் சொல்லி அவர்களுடன் சென்றார்.

அவர்களைக் கண்டதும் சாருமதி மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.

“என்னம்மா கல்யாணப் பொண்ணு? எப்படியிருக்கே?”

வனிதாமணி கேட்டவாறே அவளை பிரியத்துடன் அணைத்துக்கொண்டார்.

“நல்லாருக்கேன் அத்தை.”

கிருஷ்ணவேணி அவள் அருகே வந்தாள்.

“வாழ்த்துக்கள் அக்கா.”

என்றவள் அவள் கையைப் பற்றி மோதிர விரலில் தான் வாங்கி வந்த மோதிரத்தை மாட்டியவள் அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“இதெல்லாம் எதற்கு கிருஷ்?” நெகிழ்ந்துபோனவளாய் கேட்டாள் சாருமதி.

“இந்த தங்கச்சி நினைவா ஏதாவது தரனுமே?”

“அதை மேடையில் தந்திருக்கலாமே?”

“அங்கே இப்படி கட்டிப்பிடிச்சு கன்னத்தில் முத்தமிட்டு தந்து ஒருவரோட கோபத்தை ஏன் வாங்கிக்கனும்? அதுவும் நான் உங்களுக்காக தான் தர்றேன். மத்தவங்களுக்காக இல்லை.”

அவளைப் பற்றி தெரிந்திருந்த சாருமதி அதற்குமேல் பேசவில்லை.

மற்ற இருவரும் கிளம்ப கிருஷ்ணவேணியை தன்னுடனே இருத்திக்கொண்டாள் சாருமதி.



அப்போது மட்டுமல்ல. திருமண சடங்குகள் நடந்த போதும் தன்னுடனே இருத்திக்கொண்டாள்.
அந்த வீட்டாருக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை. மகேந்திரனுக்கு முன்பு அவர்கள் நல்லவர்களாய் தெரிவது மிகவும் முக்கியம்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 20-04-2019, 11:55 AM



Users browsing this thread: 37 Guest(s)