நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#94
ன்று மாலை கல்லூரிவிட்டு வந்த போது சாருலதாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவன் யோசனையோடு வந்தவர்களை வரவேற்றவன் அவர்கள் வந்த காரணத்தை அறிந்துகொள்ளும் பொருட்டு அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்துவிட்டான்.
கிருஷ்ணவேணியும் மரியாதை நிமித்தம் வரவேற்றுவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

அவளைக் கண்ட அவர்களின் முகத்தில் தெரிந்த மாற்றமே அவளை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லாமல் சொன்னது. வேண்டாவெறுப்பாய் மற்றவர்களுக்காக சிரித்துவைத்தனர். அதனால்தான் அவள் அங்கேயே இராமல் தனது அறைக்குச் சென்றது. அவர்கள் யுகேந்திரனின் உறவினர்கள். அவர்களுடன் தனக்கு என்ன பேச்சு? என்று சென்றுவிட்டாள். இதுவே சாருமதி வந்திருந்தால் அவளையும் தனது அறைக்கு அழைத்து வந்திருப்பாள். ஏனோ அவள் வரவில்லை.
இரவு உணவிற்கு யுகேந்திரன் அழைக்க வரும் வரையில் அவள் தனது அறையை விட்டு நகரவில்லை. அவர்கள் இருந்தால் என்ன செய்வது என்று பேசாமல் இருந்துவிட்டாள்.
என்ன கிருஷ்? இவ்வளவு நேரம் தனியாவே உட்கார்ந்துட்டே? நீ உடை மாற்றிவிட்டு வருவேன்னு நினைத்தேன்.”

“கொஞ்சம் களைப்பா இருந்தது. அதுதான் படுத்துட்டேன்.”

அவனது முகத்தைப் பாராமல் சொன்னாள்.

அவள் எதற்காக அப்படி சொல்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது.

அவர்கள் இன்னும் இருப்பார்களோ? என்ற தயக்கத்துடன்தான் சென்றாள். ஆனால் அவர்கள் யாரும் இல்லை. அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவர்கள் எதற்காக வந்தார்கள்? என்று சாப்பிடும்போது பேச்சு வந்தது.

சாருமதிக்குத் திருமணமாம். திடீரென்று நல்ல சம்மந்தம் வந்ததால் பேசி முடித்துவிட்டார்களாம். பெரியவளுக்கு திருமணம் முடிந்தால்தானே இளையவள் சாருலதாவிற்கும் கூடிய விரைவில் திருமணம் நடத்த முடியும் என்று நீட்டி முழக்கிப் பேசியிருந்தாள் சாருலதாவின் தாயார்.

சாருமதிக்குத் திருமணம் என்றதும் உண்மையிலேயே அவளுக்கு மகிழ்ச்சிதான்.

நல்ல பெண். அவள் மேல் பிரியம் உள்ளவள்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தோட்டத்தில் உலாவினர்.

“மதிக்காகிட்ட பேசலாமா?”
“சரி.” என்ற யுகேந்திரன் உடனே தனது அலைபேசியில் இருந்து அவளது எண்ணிற்கு அழைத்தான்
மறுமுனையில் பேசிய சாருமதியிடம் தங்களது சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

அவள் வெட்கத்தால் சரிவர பேசவில்லை. உம் கொட்டியதோடு சரி.

பேசி முடித்துவிட்டு இணைப்பைத் துண்டித்தனர்.

“நாம மதிக்காவுக்காக என்னென்ன யோசித்தோம்?”

கிருஷ்ணவேணி யுகேந்திரனிடம் கேட்டாள்.

“யோசித்தோம் என்று சொல்லாதே. யோசித்தேன் என்று சொல்லு. நீதான் மதிக்காவுக்கு அண்ணா மேல் விருப்பம் இருக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னே. இப்பப்பாரு சந்தோசமா கல்யாணப் பொண்ணா வெட்கப்பட்டுக்கிட்டு இருக்கிறா.”

“ஆமா. எனக்கு ஆச்சர்யமா இருக்கு.”

சிறிதுநேரம் பேசாமல் இருந்த கிருஷ்ணவேணி மீண்டும் யுகேந்திரனைப் பார்த்தாள்.

“ஆனா ஒன்னு. மதிக்கா மட்டும் உங்க அண்ணாவை காதலித்து அவர்கள் திருமணமும் நடந்திருந்தா ரொம்ப போரடிச்சிருக்கும்.”

“ஏன்?”

“ரெண்டு பேரும் பேசாமடந்தை. அப்புறம் வாழ்க்கை எப்படியிருக்கும்?”

இருவரும் சிரித்தனர்.

“நீ சொல்றது சரிதான் கிருஷ். அண்ணாவுக்கு கலகலப்பா இருக்கிற பொண்ணுதான் சரிவரும். அப்பதான் காம்பன்சேட் ஆகும்.”

“கிட்டத்தட்ட என்னை மாதிரி ஒருத்திதான் மகேனுக்கு பொருத்தம்னு சொல்றே?”

வாய்விட்டு கேட்டுவிட்ட கிருஷ்ணவேணி நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

கீழே குனிந்திருந்த யுகேந்திரன் அதைக் கேட்டானோ? இல்லையோ? அவனுக்குப் பின்னே நின்றிருந்த மகேந்திரன் கேட்டுவிட்டான். அவன் பார்வையில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.

‘திட்டுவானோ?’ பயந்தவள் அவள் யுகேந்திரனுக்குப் பின்னே பதுங்கினாள்.

“எதுக்கு கண்டபடி பேசி இப்படி முழிக்கனும்?”

யுகேந்திரன் கிசுகிசுத்த குரலில் கடிந்தான்.

அவளுக்கும் தான் பேசியது அதிகம் என்று புரிந்தது. அமைதியானாள்.

“வா. போகலாம். அண்ணா உள்ளே போயிட்டான்.”

அமைதியான குரலில் பேசினான்.

அவனும் தவறாக எண்ணிவிட்டானா?

“யுகா.”

“இப்ப எதுவும் பேச வேண்டாம்.”



இருவரும் உள்ளே சென்றுவிட வேறுபக்கமாய் ஒதுங்கியிருந்த மகேந்திரனுக்கு அவர்கள் பேசியது எல்லாம் காதில் விழுந்திருந்தது.
அவள் பேசியது தன் தம்பிக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் பேச்சைத் தவிர்த்து உள்ளே செல்கிறான் என்று எண்ணிக்கொண்டான்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 20-04-2019, 11:54 AM



Users browsing this thread: 22 Guest(s)