நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#93
ருவத் தேர்வுகள் தொடங்கிவிட்டன. இன்னும் ஒரேயொரு பருவம் முடிந்துவிட்டால் அவர்கள் பட்டம் பெற்றுவிடலாம்.

கிருஷ்ணவேணியும் யுகேந்திரனும் படிப்பில் கவனம் செலுத்தினர். அவன் கொஞ்சம் சோம்பியிருந்தாலும் அவள் விடவில்லை.

இருவரும் படிப்பில் மும்முரமாய் இருந்ததால் மற்றவர்களைக் கண்டு கொள்ளவில்லை.

அன்றுதான் அந்தப் பருவத்திற்கான இறுதித் தேர்வு. என்னவோ அதிசமாய் அவர்கள் இருவருக்கும் ஒரே அறையில் தேர்வு எழுத வாய்ப்புக் கிடைத்தது.
இடையிடையில் பார்க்கும்போது யுகேந்திரன் மும்முரமாய் தேர்வு எழுதினான். அவளுக்கு சந்தோசமாய் இருந்தது.
இந்த முறை அவன் நிறைய மதிப்பெண்கள் பெற்றுவிடுவான் என்று நம்பினாள். அவளும் தேர்வு எழுதுவதில் கவனமானாள்.

எதார்த்தமாக திரும்பிப்பார்க்கும்போது யுகேந்திரன் எழுதுவதை நிறுத்திவிட்டு பேசாமல் அமர்ந்திருந்தான்.

இன்னும் தேர்வு முடிவதற்கு நேரமிருந்தது. அதற்குள்ளா எழுதிவிட்டான். அவன் மிக நிதானமாக அல்லவா எழுதுவான். அப்படியிருக்க இத்தனை சீக்கிரம் எழுதி முடித்திருக்க வாய்ப்பிருக்காதே. அவன் தன்னைப் பார்த்தால் எழுத சொல்லலாம் என்று அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால் அவன் அவள் பக்கம் திரும்பினால்தானே?

அவன் செய்ய வேண்டியதை தேர்வு அறைக்கண்காணிப்பாளர் செய்துவிட அவள் பதறிப்போய் எழுதத்தொடங்கினாள்.

அந்தப் பேராசிரியை அவளை நோக்கி வந்துவிட்டார்.

“என்னம்மா? ஏதாவது வேண்டுமா? உடல்நிலை சரியில்லையா?”

அவள் நன்றாகப் படிப்பவள் என்று தெரிந்ததால் அவளை சந்தேகப்படாமல் விசாரித்தார்.

“ஒன்னுமில்லை மேம்.”

“பதட்டப்படாம எழுது. என்ன சரியா?”

அவளை வாஞ்சையுடன் தட்டிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகுதான் அவளுக்கு மூச்சே வந்தது.
‘அடப்பாவி. இப்படி என்னை மாட்டி விட்டுட்டியேடா.’
மனதிற்குள் யுகேந்திரனை திட்டியவாறே எழுதி முடிக்க வேண்டியவற்றை வேகமாக எழுதத் தொடங்கினாள்.

தேர்வு நேரம் முடிந்ததும் மணி ஒலிக்க விடைத்தாள்களை ஒப்படைத்துவிட்டு வெளியே வந்தாள்.

யுகேந்திரன் சிரிப்புடன் வந்தான்.

“என்ன கிருஷ்? நல்லா மாட்டினியா?”

“அடப்பாவி. அப்ப உனக்கு எல்லாம் தெரியுமா?”

அவன் ஆமெனத் தலையாட்டினான்.

“செய்யறது எல்லாம் செய்துட்டு சிரிக்கிறியா?”

அவள் அவன் முதுகில் தட்டினாள்.

“பரிட்சை எழுதறதை விட்டுட்டு நீ என்னை வேடிக்கைப் பார்த்துட்டு என்னைக் குறை சொன்னா நான் என்ன செய்யறது?”

“நீயும் ஒழுங்கா எழுதியிருந்தா நான் ஏன்டா உன்னைப் பார்க்கப் போறேன்?”

“நான்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல. பாஸ் ஆற அளவுக்கு நான் எழுதிடுவேன்னு. அப்புறம் என்ன கவலை உனக்கு?”

“‘எல்லாமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து படிச்சதுதானே? அப்படியிருக்கிறப்ப எழுதறதுக்குக்கூடவா நீ சோம்பேறித்தனம் படுவே?”

செல்லமாய் கடிந்துகொண்டாள்.

“நான் என்ன பண்றது? எனக்குப் பிடிக்காத பாடத்தைப் படிக்கச் சொன்னா நான் இப்படித்தான் படிப்பேன்.”

அவள் அமைதியாகிவிட்டாள்.

இதைப் பற்றி மகேந்திரனிடம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

யுகேந்திரன் ஏற்கனவே சொல்லியிருக்கிறான்.

ரவிச்சந்திரன் கூட அவனது விருப்பத்தை வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டாராம். மகேந்திரன் ஒத்துக்கொள்ளவில்லையாம். எப்போதுமே அவனது முடிவு நல்லவிதமாய்தான் இதுவரைக்கும் இருந்திருக்கிறது. அதனால் ரவிச்சந்திரன் எப்போதும் மகன் எடுக்கும் முடிவிற்கு சம்மதம் சொல்லிவிடுவாராம்.

அதனால்தான் அவள் மகேந்திரனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தாள்.


ஆனால் அவள் பேசுவதற்கு சரியான நேரமே கிடைக்கவில்லை. அதை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 20-04-2019, 11:52 AM



Users browsing this thread: 8 Guest(s)