screw driver ஸ்டோரீஸ்
பத்து நிமிஷங்கள் கழிந்தபோது அவர் திரும்ப வந்தார். விளக்குகளை அணைத்தார். எனக்கருகே வந்து படுத்துக் கொண்டார். குப்பென வந்த சிகரெட் வாசனை இவ்வளவு நேரம் என்ன செய்தார் என்று எனக்கு உணர்த்திற்று. நான் எந்த அசைவும் இல்லாமல் கிடந்தேன். இப்போது அவருடைய கை என் புஜத்தை பற்றியது.

"பவி.." என்றார் ஹஸ்கியான குரலில்.

"ம்ம்.."

"தூங்கிட்டியா..?"

"ம்ம்.."

"என்ன பவி நீ.. ஹனிமூன் வந்த எடத்துல.. இப்படிலாம்.."

கொஞ்சலாக சொன்னவர் அவருடைய கையை அப்படியே எனக்கு முன்பக்கமாக விட்டு என் மார்பைப் பிடித்து பிசைய, நான் எரிச்சலானேன்.

"ச்சீய்... எந்த நேரத்துல என்ன பண்றதுன்னு கூட உங்களுக்கு தெரியாது.. விடுங்கப்பா.." என்று அவருடைய கையை பட்டென தட்டிவிட்டேன்.

"ஏன்.. என்னாச்சு இப்போ..?"

"எனக்கு தூக்கம் வருது.. விடுங்க..!!"

கடுகடுப்பாக சொன்னவள், கம்பளியை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டேன். கண்களை இறுக்கி மூடிக் கொண்டு, தூக்கம் வருவது மாதிரி பாவ்லா செய்து கொண்டேன். அவர் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்துவிட்டு, பின்பு திரும்பி படுத்துக் கொண்டார். இருளுக்குள்.. இருவரும்.. ஒரே கம்பளிக்குள்.. ஆனால் எதிர் எதிர் திசையை வெறித்துக்கொண்டு..!!

[Image: 05HEt.jpg]

தூங்கிப் போனேன். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. 'கிர்ர்ர்ரர்ர்ர்ர்...!!!' என்ற சத்தம் ஸ்க்ரூட்ரைவர் நுழைந்தது போல காது கிழிக்க, பட்டென விழித்துக் கொண்டேன். கண்கள் கசக்கி பார்த்தேன். அருகில் இருந்த டைம்பீஸ்தான் அறை வாங்கிய குழந்தை மாதிரி அலறிக் கொண்டிருந்தது. அதன் தலையில் தட்டி அந்த அலறலை நிறுத்தினேன். நள்ளிரவு நேரம் என்பதை உணர்ந்தேன். மீண்டும் படுக்கையில் விழப்போனவள், எதேச்சையாக பக்கத்தில் பார்வையை வீச, பக்கென அதிர்ந்து போனேன். என் கணவரை காணோம்..!!!!

எங்கே சென்றிருப்பார்..?? பாத்ரூமா..? பாத்ரூமில் விளக்கு எரியவில்லையே..? 'என்னங்க..' என்று மெல்லிய குரலில் அழைத்துப் பார்த்தேன். எந்த பதிலும் இல்லை. இப்போது இன்னும் கொஞ்சம் சத்தமாக ஒரு 'என்னங்க..'வை உதிர்த்து பார்த்தேன். மீண்டும் நிசப்தம்..!! படுக்கையை விட்டு மெல்ல எழுந்தேன். வெளியே சென்று தம்மடிக்கிராரோ..? அறைக்கதவு திறந்திருந்தது. ஆனால் வெளியே அவர் ஆளைக் காணோம். எங்கே சென்றிருப்பார்..?? வாசலில் நின்றவாறு அந்த ரிசார்ட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லா அறைகளிலும் விளக்கு அணைக்கப்பட்டு அமைதியாக இருந்தது. ஒரே ஒரு அறையை தவிர..!! 'அதுதான் நான் தங்கியிருக்கிற எடம்..' என்று அந்த லாவண்யா கை காட்டினாளே.. அதே அறை..!!

அவ்வளவுதான்..!!! எனக்கு இப்போது இதயம் பதற ஆரம்பித்தது. பலமடங்கு வேகத்தில் படபடவென துடிக்க ஆரம்பித்தது. கண்களில் இருந்த கொஞ்சநஞ்ச தூக்கம், சுத்தமாய் செத்துப் போனது. கதவை மூடக் கூட தோன்றாமல், காலில் செருப்பு அணியாததை கூட மதியாமல், அந்த அறையை நோக்கி ஓடினேன். ஜில்லென்ற குளிர்.. ஊசியாய் என் உடலை துளைத்தது. கற்கள் காலை குத்தின. எதைப் பற்றியும் நான் கவலைப் படாமல், கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே ஓடினேன்.

என்ன செய்திருக்கிறார் இவர்..?? நான் தொட விடாததால், அவளை தொட சென்று விட்டாரா..? அவளும்தான் அவருக்காக அப்படி இழைகிறாளே..? இதற்காகத்தான் இரவு கால் செய்கிறேன் என்று நம்பர் வாங்கினாரா..? ச்சே..!!!! கடவுளே.. அப்படியெல்லாம் எதுவும் இருக்கக் கூடாது..!!

ஓட்டமும் நடையுமாக நான் அந்த அறையை அடைந்தேன். குட்டியாய் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..!! அறையில் விளக்கு எரிந்தாலும், வெளிப்புறமாக தாழ் போடப்பட்டிருந்தது. பூட்டு தொங்கியது..!! அப்படியானால் அவர்கள் உள்ளே இல்லை..!! எங்கே சென்றார்கள் இருவரும்..?? கடவுளே..!! என்ன நடக்கிறது இங்கே..????

எனக்கு ஒருகணம் என்ன செய்வது என்றே புரியவில்லை. குழம்பிப் போனவளாய் அழுகையுடன் நின்றிருந்தேன். அப்புறம் அறைக்கு திரும்பலாம் என்று முடிவு செய்தேன். செல்போனில் அவருக்கு கால் செய்து பார்க்கலாம். எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கலாம். முடிந்தால் கையும் களவுமாக பிடிக்கலாம்..!! மீண்டும் ஓட்டமும், நடையுமாக எங்கள் அறைக்கு திரும்பினேன். மீண்டும் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகினேன். நான் திறந்தவாறு விட்டுச் சென்ற கதவு இப்போது மூடியிருந்தது.

எனக்கு எதுவும் புரியவில்லை. ஒரு சில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தவள், பின்பு தயங்கி தயங்கி கதவின் கைப்பிடியை பற்றினேன். அதை திருகி, கதவை உள்ளே தள்ளினேன். உள்ளே கும்மிருட்டாக இருந்தது. எதுவும் புலப்படவில்லை. ஆனால் ஓரிரு வினாடிகள்தான். திடீரென.. பளீரென.. அத்தனை விளக்குகளும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தன..!! பளிச்சென கண்கள் பறிக்கும் ஒளிவெள்ளம்..!! சுருக்கென எனக்கு கண்கள் கூச, நான் இமைகளை இறுக்கமாக மூடிக்கொண்டேன்.

"ஹேப்பி பர்த் டே டூ யூ..!! ஹேப்பி பர்த் டே டூ யூ..!! ஹேப்பி பர்த் டே டியர் பவித்ரா..!! ஹேப்பி பர்த் டே டூ யூ..!!"

என்று கோரஸாக அறைக்குள் இருந்து பாடல் ஒலிக்க, நான் நம்பமுடியாமல் கண்களை திறந்து பார்த்தேன். அறையின் மையத்தில் இப்போது ஒரு டேபிள் முளைத்திருந்தது. அதன் மீது பால் நிறத்தில், பெரிய வட்ட வடிவ கேக். அதற்கு மேலே அவசர அவசரமாய் கட்டப்பட்ட ஜிகினா தோரணம்... பலூன்கள்..!! டேபிளை சுற்றி அவர்கள் நின்றிருந்தார்கள். ஸ்லோமோஷனலில் கைகள் தட்டிக்கொண்டு... உதடுகளை அசைத்து வாழ்த்து பாடிக்கொண்டு..!!

சற்றுமுன் நடந்த சண்டையின் சிறிய சுவடைக்கூட முகத்தில் காட்டாமல், முகமெல்லாம் பூரிப்பாக என் கணவர் அசோக்..!! அவருக்கு அருகிலேயே உற்சாகத்தின் இன்னொரு உருவமாய், வெண்பற்கள் காட்டி க்ளாப் செய்துகொண்டிருந்த லாவண்யா..!! வாட்ச்மேன் தாத்தா.. ரிஷப்ஷனில் இருக்கும் மேனேஜர்.. காலையில் காபி கொண்டு வந்த அந்த பொடியன்.. அறை சுத்தம் செய்ய வந்த அந்த அகல உருவ பெண்மணி.. என் கணவர் சைட் அடித்த அந்த வெயிட்ரஸ்..!! எல்லோரும்..!!!! கைகளை தட்டிக் கொண்டு.. எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பாடலாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது.. இதோ.. வந்தேவிட்டது..!! இரண்டு கண்களிலும் நீர் திரண்டு ஓடி வந்து.. என் கன்னம் நனைத்து ஓடியது..!! அழுகையும், சந்தோஷமும், நிம்மதியுமாய் நான் உறைந்து போய் நின்றிருக்க, அந்த லாவண்யாதான் முதலில் என்னை நோக்கி ஓடிவந்தாள். 
"ஹேப்பி பர்த் டே பவித்ரா..!!"

என முகமெல்லாம் உண்மையான பூரிப்புடன் சொன்னவள், என்னை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் கன்னத்தில் ஈரமாக முத்தமிட்டாள். என் கணவர் அங்கிருந்தபடியே என்னைப் பார்த்து புன்னகைக்க, நானும் கண்களில் கண்ணீர் மல்க புன்னகைத்தேன். என் கண்களில் இருந்து வழிந்த நீர், லாவண்யாவின் தோளில் பட்டு தெறிக்க, இப்போது நானும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன். 'ஓ...' வென பெருங்குரலில் அழவேண்டும் போலிருந்த உணர்வை, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ச்சே..!! இந்த மனம்தான் எவ்வளவு அவசரக் குடுக்கையாக இருக்கிறது..? ஒருவருடன் பழகாமலேயே.. அவரைப்பற்றி அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளாமலேயே..!!!
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 20-04-2019, 11:28 AM



Users browsing this thread: 3 Guest(s)