Non-erotic வாசகருக்கும் எழுத்தாளருக்குமான உரையாடல்
#16
(13-06-2020, 06:56 PM)manaividhasan Wrote: நீங்கள் ஒரு கதையை முழுமையாக படித்து, அதன் எழுத்தாளரின் சிறப்பான பதிவுகளில் பாராட்டும் பிழைகள் இருக்கும் பதிவுகளில் ஆரோக்கியமான விமர்சங்களையும் அளிப்பவர்களாக நீங்கள் இருந்தால், இந்த தளத்தில் கதைகளை பதிப்பிடும் அனைத்து எழுத்தாளர்களின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்து தொடர்கிறேன்.

இந்த தளத்திற்கு வரும் அனைவருக்கும் தேவைகள் பல இருக்கிறது.. வாசகர்களுக்கு நல்ல கதைகள் பல தேவை, ஒரு படைப்பாளருக்கு தன் எழுத்துக்கான அங்கீகாரம் தேவை வாசகர்களிடமிருந்து.. இந்த இரண்டு தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் பொழுது அந்த தளமானது சிறந்து விளங்கும்.. Xossip தளம் மூடப்படுவதற்கு முன்பு அது சிறந்து விளங்கியதற்கு காரணம் அது தான் என்று நினைக்கிறன். இந்த Xossipy தளமும் அதைப்போல மாற வேண்டுமென்றால், வாசகர்களுக்கும் கதை படைப்பாளர்களுக்கும் இடையில் நல்ல ஆரோக்கியமான உறவு இருத்தல் அவசியம்.

முதலில் கதைகளின் படைப்பாளர்களை புரிந்து கொள்ள வேண்டும்..
  • உங்களிடம் இருக்கும் மொபைலிலோ, கணினியிலோ நூறு வரிகளுக்கு குறையாமல் ஒரு கதை எழுதுங்கள், அதுவும் தமிழில் எழுத்துப்பிழை இல்லாமல் முயற்சி செய்து பாருங்கள்.. 
  • அந்த கதைக்கு உயிரோட்டத்தை அளித்து வாசிப்பவர்களின் கற்பனை குதிரையை தட்டிவிட்டு உங்கள் கதாபாத்திரங்களுக்கு வாசகர்களை உருவம் கொடுக்க வையுங்கள்..
  • உங்கள் கதையில் இருக்கும் சுவற்றுக்கு கூட வாசகர்கள் கற்பனையில் வண்ணம் தீட்ட வைக்க வேண்டும்..
  • இந்த ஒரு பக்கத்தை ஐம்பது பக்கங்களாக தொடருங்கள், நூறு வரிகளை சில ஆயிரம் வரிகளாக மாற்றுங்கள்.

இதை செய்தால் ஒரு படைப்பாளரை புரிந்து கொள்ளலாம்.. 

சரி புரிந்து கொண்டாயிற்று இப்பொழுது என்ன?

இரண்டு கோடுகளை போட்டு விட்டு இதுதான் தென்னை மரம் என்று காட்டும் குழந்தையில் இருந்து மொக்கை காமெடி சொல்லும் முதியவர் வரை எதிர்பார்ப்பது சின்ன பாராட்டு. அதை தான் அநேக எழுத்தாளர்களும் விரும்புகிறோம் நான் உள்பட..

எப்படி பாராட்ட?

பதிவுகளுக்கு Like போடுங்கள், கதையில் ஏதேனும் இரண்டு வரிகளை குறிப்பிட்டு அதில் நீங்கள் விரும்பியது என்னவென்று சொல்லலாம், குறை ஏதேனும் இருந்தால் மென்மையான சொற்களால் கருத்து தெரிவிக்கலாம்.. அதிகப்படியாக ஒரு படி மேலே சென்று, கதை எழுதும் நபருக்கோ (அ) கருத்து சொல்லும் நபருக்கோ Reputation கொடுக்கலாம்..

ஏன் பாராட்ட வேண்டும்?

நேரத்தை செலவழித்து மூளைக்கு வேலை கொடுத்து கதை எழுவது நீங்கள் ரசிப்பதற்கு தானே.. சின்ன பாராட்டு கொடுத்தால் தவறில்லையே.. 
  • Super update
  • nice update
  • semma
  • super
  • nice bro
  • Interesting
  • Waiting for next update


போன்றவைகளை முடிந்த வரை தவிர்த்து விட்டு இரண்டு வரிகளில் கருத்து சொல்லுங்கள்..

அப்போ நீங்க என்ன எழுதுனாலும் நாங்க பாராட்டணுமா?

கண்டிப்பா இல்லை, இங்கு எந்த எழுத்தாளரும் 'கல்கி' அல்ல இங்கு எந்த கதையும் 'பொன்னியின் செல்வன்' கதை அல்ல.. எல்லாம் சிறு சிறு முயற்சிகள், இங்கு குறிப்பிடத்தக்க சில எழுத்தாளர்கள் தவிர மற்ற எல்லாரும் வளர்ந்து வரும் பிள்ளைகள், நாங்கள் நல்ல முறையில் வளர உங்கள் அன்பு வார்த்தைகள் தேவை. கதையில் தவறு வரும் இடங்களை குறிப்பிட்டு மனது புண்படாத வகையில் கருத்து தெரிவியுங்கள்.. இதற்கு முன் அதை செய்திருந்தால் அப்படியே விட்டுவிடலாம், நான்கூட அந்த தவறு செய்திருக்கிறேன்..

இந்த மயிரெல்லாம் எனக்கு தெரியும், என்கிட்டே எதுக்கு சொல்ற?

இந்த மயிரெல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால் இது உங்களுக்கான திரி இல்லை.. நீங்கள் தாராளமாக செல்லலாம்.

அப்போ இது யாருக்கு?

நான் சொல்ல வருவதை மதிக்கும் அன்பு வாசகர்களுக்கு மட்டும் தான் இது. மேலும் சில வாசகர்களுக்கும் தான்.

Tamil Stories என்ற Sub Forum இல் தான் நாம் அதிகம் உலாவுகிறோம், 

காலை மற்றும் மத்திய நேரத்தில் - 40 லிருந்து 60 நபர்கள்
சாயந்திர நேரத்தில் - 60 லிருந்து 70 நபர்கள் 
இரவு நேரத்தில் - 80 லிருந்து 120 நபர்கள் 

இந்த Sub Forum இல் சுற்றுகிறோம். அதிக கதைகள் பார்க்கப்படுகிறது, படிக்கப்படுகிறது.. ஆனால் சிலர் மட்டுமே கருத்துக்களை தெரிவிக்க மற்றவர்கள் படித்து விட்டு ரசித்து விட்டு செல்கிறார்கள்.. கண்டிப்பாக உங்கள் மனதுக்குள் நீங்கள் படித்த கதையை பாராட்டி இருப்பீர்கள், இந்த திரியின் மூலமாக உங்களிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் உங்கள் மனதில் தோன்றியவைகளை நான் மேலே சொன்னவாறு கருத்து கூறுங்கள்..

இல்ல நீ சொல்றதுலாம் கண்டுக்க மாட்டேன். இப்படித்தான் இருப்பேன்.. இப்போ என்ன?

போதிய வரவேற்பு வராமலே இங்கு பல கதைகள் கைவிடப்பட்டிருக்கிறது.. கதை ஸ்டார்ட் பண்றீங்க, பாதியில் விட்டுட்டு போயிடுறீங்க என்று இறுதியில் சொல்லிப் பலனில்லை..


மிக மிக முக்கியமான பின் குறிப்பு:

கருத்து கூறுகிறேன் என்ற பெயரில் கதையை உங்கள் போக்குக்கு மாற்றாதீர்கள்.. 


கதையில் வரும் கதாபாத்திரங்களை அசிங்க படுத்தாதீர்கள்.. (ஆம் இதில் வரும் கதைகள் சில Adultery, கள்ள உறவு, Incest, Cuckold போன்று அசிங்கமான கதைகள் தான், ஆனால் கதை எழுதுபவர் அசிங்கமானவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, கதைகள் எழுதப்படுவது கற்பனைகளின் அடிப்படையில் தான். நீங்கள் கதாபாத்திரங்களை அசிங்க படுத்த எண்ணினால் அது கதை எழுத்தாளரை அசிங்க படுத்துவதாக தான் எடுத்துக் கொள்ளப்படும்).

உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன் நண்பா.

Like Reply


Messages In This Thread
RE: வாசகருக்கும் எழுத்தாளருக்குமான உரையாடல் - by pavipurusan - 03-09-2021, 04:39 PM



Users browsing this thread: 1 Guest(s)