Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஜெட் ஏர்வேஸ் மீண்டும் பறக்கும்- எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை

டெல்லி: பங்கு ஒதுக்கீட்டிற்கு வந்த அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து பங்குகளை ஒதுக்கீடு செய்த உடன் ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை மீண்டும் தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏற்று நடத்துவதற்கு தேவையான நிதி உதவி அளிப்பதற்கு வங்கிகளும் தயங்கி காலம் தாழ்த்தி வரும் நிலையில் விமான சேவையை தொடர்வதற்கு மத்திய அரசும் எந்தவிதமான முயற்சியையும் எடுக்காததால், எங்கே கிங்க ஃபிஷர் விமான நிறுவனம் போல் ஆகிவிடுமோ என்று ஊழியர்கள் அனைவரும் அதிருப்தியில் இருந்தனர்.
ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை தொடங்குவதற்கு மத்திய அரசும், வங்கிகள் கூட்டமைப்பு உதவ முன்வரவில்லை என்றால் தொழிலாளர் ஆணையரை சந்தித்து முறையிடப்போவதாக ஜெட் ஏர்வேஸ் ஊழியர் சங்கம் அறிவித்தவுடன் வங்கிகள் கூட்டமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்
துங்கிய நரேஷ் கோயல்
கடன் சுமையை குறைப்பதற்காக வங்கிகள் கூட்டமைப்பு உதவ முன்வந்தாலும் நிறவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் பதவி விலகினால் மட்டுமே உதவ முடியும் என்று நெருக்கடி கொடுத்ததைத் தொடர்ந்து அவரும் பதவி விலகினார். அதோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தான் வைத்திருந்த 51 சதவிகித பெரும்பான்மை பங்குகளில 26 சதவிகிதத்தை வங்கிகள் கூட்டமைப்பிற்கு கொடுத்துவிட்டு பாக்கி 25 சதவிகித பங்குகளை வைத்துகொண்டு ஒதுங்கிக் கொண்டார்.
[Image: sbi3-1555655859.jpg]
  

கைமாறிய பங்குகள்
நரேஷ் கோயல் பதவி விலகியதைத் தொடர்ந்து அவர் ஒப்படைத்த 26 சதவிகித பங்குகளையும் வங்கிகள் கூட்டமைப்பு எடுத்துக்கொண்டது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 51 சதவிகித பெரும்பான்மை பங்குகள் எஸ்பிஐ தலைமையிலான 26 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பின் வசம் வந்தது. இதைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் மாற்றம் செய்யப்பட்டது.
[Image: state-bank-of-india-8-1555656174.jpg]
  

வாங்க ஆளில்லையே
இயக்குநர் குழுவில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தன் வசம் உள்ள 75 சதவிகித பங்குகளை உடனடியாக விற்கும் நடவடிக்கையில் வங்கிகள் கூட்டமைப்பு இறங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. கடன் சுமையில் சிக்கி மீளமுடியாமல் உள்ள நிறுவனத்தில் 1500 கோடி ரூபாயை முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பால் உறுதி அளித்தபடி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ரூ.1500 கோடியை முதலீடு செய்ய முடியவில்லை.
[Image: jet-airways2-1555655881.jpg]
  

123இல் இருந்து 5ஆக குறைந்தது
வங்கிகள் கூட்டமைப்பு எப்படியும் கடன் உதவியளித்து விடும், இதனால் தங்களின் குத்தகை பாக்கி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த குத்தகை நிறுவனங்கள், வங்கிகள் கூட்டமைப்பு கைவிரித்துவிட்டதால், வேறு வழியில்லாமல் விமானங்களை குத்தகைக்கு விட்ட நிறுவனங்கள், பெரும்பாலான விமானங்களை திரும்பப் பெற்றுக் கொண்டன. அதனால் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரில் 123ஆக இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் எண்ணிக்கை வெறும் 5 ஆகக் குறைந்தது.
[Image: jet-airways334-1555656586.jpg]
  

தற்காலிக நிறுத்தம்
குத்தகை நிறுவனங்கள் விமானங்களை திரும்பப் பெற்றக்கொண்டதால் விமான சேவையை நிறுத்தவேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ரூ.400 கோடி நிதி உதவி அளித்தால் விமான சேவையை தொடர முடியும் என ஜெட் ஏர்வேஸ் தெரிவித்தது. ஆனால், மேற்கொண்டு நிதியுதவி அளிக்க வங்கிகள் கூட்டமைப்பு மறுத்து விட்டன. இதனால், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை 17ஆம் தேதி நள்ளிரவுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
[Image: jet-airways34-1555656592.jpg]
  

ஊழியர்கள் பாதிப்பு
ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக முடிவுக்கு வந்ததை அடுத்து அதன் ஊழியர் சங்கம் பிரதமர் மோடி நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுத்தப்பட்டதால், 16000 நிரந்தர ஊழியர்கள் நேரடியாகவும் 22000 பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இப்பிரச்னையில், உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Image: jet-airways3234-1555656676.jpg]
  

தீர்வுதான் என்ன
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் அதோடு நில்லாமல், எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பும் நிதி உதவி அளிக்க மறுத்துவிட்டதாலும் மத்திய அரசு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு முன்வராமல் பாராமுகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி தங்களின் வேலை மற்றும் சம்பள பாக்கிக்கு தீர்வு கேட்டு தொழிலாளர் ஆணையரை நாடப்போவதாக அறிவித்தனர்.
[Image: jet-airways32234-1555656669.jpg]
  

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களின் தடாலடி அறிவிப்பால் வேறு வழியில்லாத வங்கிகள் கூட்டமைப்பு கடந்த 18ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனை தொடர்பாக 16ஆம் தேதி நிலவரப்படி, தகுதியுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

[Image: jet-airways322341-1555656698.jpg]
  


மீண்டும் பறக்கும்
பங்கு ஒதுக்கீடு கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களின் தகுதி அடிப்படையில் பங்கின் விலை, நியாயமாகவும் வெளிப்படையான முறையிலும் நிர்ணயிக்கப்படும். இப்பணி வெற்றிகரமாக முடியும் என, எதிர்பார்க்கிறோம். இதைத் தொடர்ந்து போதுமான நிதி உதவி பெற்று விரைவில் ஜெட் ஏர்வேஸ் மீண்டும் வழக்கம் போல விமான சேவையை தொடரும் என, நம்புகிறோம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. டுள்ளது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 19-04-2019, 05:46 PM



Users browsing this thread: 56 Guest(s)