24-08-2021, 02:53 PM
(24-08-2021, 12:46 AM)Dubai Seenu Wrote: ப்ளைட்டுக்குள்-
நிஷா, தன் பேகிலிருந்து, அவன் வரைந்து வைத்திருந்த drawing-ஐ எடுத்து விரித்துப் பார்த்தாள். நாணத்தோடு பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
அவன், அவள் தொப்புளில், ஒரு நகையை மாட்டி, தொங்கவிட்டிருந்தான். அவள் அடிவயிறில் ஒரு செயின் போட்டு விட்டிருந்தான்.
நிஷாவுக்கு அதைப் பார்க்கப் பார்க்க முகம் சிவந்தது. நாணமாக இருந்தது. உடம்பில் அலை அலையாக சுகம் பரவியது.
சீனு... என்று உதட்டுக்குள் சொல்லிக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள்.
நீ நல்லாயிருக்கனும்டா. இப்படி என்ன நெனச்சி ஏங்காம இருக்கணும். இன்னும் பக்குவமா நடந்துக்கணும்.
அவள், அந்த drawing-ஐயும், டிராயிங்க் நோட்டையும்... நிதானமாக கிழித்து, போய் டஸ்ட் பின்னுக்குள் போட்டாள். திரும்ப வந்து உட்கார்ந்தாள். தன் மகள்களுக்கு முத்தம் கொடுத்தாள்.
இன்னும் ஒருநாள் அங்கே தங்கியிருந்தால் சீனு, நான் இருவருமே கட்டுப்பாடை இழந்திருக்கக்கூடும். ஆனால் கதிர்... உனக்கு எப்படிடா நான் துரோகம் செய்ய முடியும்?
நீ என் கணவன் மட்டுமல்ல. என் காதலன் மட்டுமல்ல. அதற்கும் மேல. உன்னைப்போல் ஒரு கணவன் மட்டும் எனக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் இப்போது என் நிலமை??.
கதிர்... வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் நான் உனக்கு துரோகம் செய்ய மாட்டேன்டா. நீ என்னை சிறுவயது முதல் லவ் பண்ணியவன். நான் கெட்டுப்போய் வந்தபின்னும் என்னை ஆராதித்தவன். என்னை தாங்கு தாங்கு என்று தாங்கியவன். என்னை முழுமையான ஒரு பெண்ணாக மாற்றியவன். என்னை தாயாக்கியவன்.
அவள், சீனுவோடு படுக்க முழு வாய்ப்பு இருந்தும், கட்டுப்பாடோடு படுக்காமல் இருந்து, கதிரிடம் திரும்பிப்போவதை நினைத்து... தன்னைத்தானே நினைத்து... பெருமிதப்பட்டுக்கொண்டாள்.
சீனு மற்றும் காயத்ரியின் வாழ்க்கையில் விழுந்திருந்த ஒரு வெற்றிடத்தை... தான் சரி செய்து அவர்கள் மீண்டும் சந்தோஷமாக வாழ தான் ஒரு காரணியாக இருந்ததை நினைத்து சந்தோஷப்பட்டாள்.
ஒருவித திருப்தியோடு, மன நிம்மதியோடு ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்தாள். கதிரைப் பார்த்ததும், மகள்களோடு, சந்தோஷமாக கைகாட்டினாள்.
நிஷாவின் மு. டி. வு அருமை
வாழ்க வளமுடன் என்றும்