24-08-2021, 11:17 AM
(24-08-2021, 10:22 AM)Ramcuckoo Wrote: நண்பர்களே இப்போது எனக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.. கதை இன்னும் 5 அத்தியாயங்களில் முடிந்துவிடும்.. நான் ஏற்கனவே சொன்னது தான்.. இது சிறு கதை தான்.. ' என்னால் முடியுமா, வரவேற்பு இருக்குமா' என சந்தேகத்துடனே கதையை ஆரம்பித்தேன்.. இது ஒரு சோதனை முயற்சி போல.. இப்பொழுது நல்ல ஆதரவு இருக்கிறது..
கதையை இன்னும் இழுத்து தொடர்கதையாக தொடரலாமா அல்லது 'புது கதை' ஒன்று ஆரம்பிக்கலாமா என குழப்பமாக உள்ளது..
இதே கதையை இன்னும் இழுத்து தொடரலாம் என்றாள் நான் யோசித்த முடிவு கதையில் வராது.. நான் நினைத்த க்ளைமாக்ஸை மாற்ற வேண்டும்.. அதற்கு இப்பொழுதே கதையின் இனிவரும் அத்தியாயங்களை மாற்றி எழுத வேண்டும்.. அதற்காகத் தான் இப்பொழுது கேட்கிறேன்..
நண்பர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லவும்..
கதை இப்போதே நல்ல வரவேற்புடன் செல்கிறது. இதை பாராட்டும் பல ரசிகர்களில் நானும் ஒருவன் என்று பெருமிததுடன் கூறிக் கொள்கிறேன்.
எனது கருத்து: நீங்க ஏற்கனவே தயார் செய்த கதையின் கருத்து, கதா பாத்திரங்கள், பின்னணி காட்சிகள், சீரான நடை, தெளிவான உரையாடல்கள், சில திடீர் திருப்பங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. அதை ஏன் மாற்ற வேண்டும் ? அதை அப்படியே இங்கே பிரசுரித்து விட்டு, இந்த கதை முடிந்த பிறகு புது கதை ஆரம்பிக்கலாமே.