22-08-2021, 08:03 AM
கேரளத்தில் நான்
விடியல் காலையில் கேரளா வந்தடைந்தேன் இரவு முழுவதும் தூக்கம் இல்லை தமிழகம் தாண்டிய எனது முதல் பயணம். கேரள மண்ணில் கால் வைத்ததும் ஒரு இனம் புரியாத சுகம் உடல் முழுவதும். நேற்றைய பஸ் பயணத்தில் நான் வாந்தி எடுக்கவில்லை எப்படி என ஆராய்ந்தேன் நேற்றைய பயணத்தில் நான் என்னை மறந்திருந்தேன் ஓ அப்ப டாக்டர் சொன்னது சரிதான். நான் ஒரு மனநோயாளி தான். என் நோய் தீர்க்கும் மருந்து வீனா இங்கு எங்கோ இருக்கிறாள் என்பதே என் உடலில் ஏற்படும் சுகத்திற்க்கு காரணம்.
அருகில் இருந்த ஸ்டீடி பூத்தில் இருந்து கம்பெனிக்கு போன் செய்தேன். ரமேஷ் எடுத்து இன்று பாய்லர்கள் வரும் என்றும் ஒரு வாரத்தில் எரக்ஷன் வேலை தீர்ந்து பாய்லர்கள் வேலை செய்யும் என்றான்.
நான் எங்கு உள்ளேன் என்பதை சொல்லாமல் நான் இல்லாவிட்டாலும் பணியைத் தீர்த்து பாய்லர்களை ஸ்டார்ட் செய்ய சொன்னேன்.
திருச்சூர் நல்ல ஊர் நான் நல்ல தரமான ஒரு லாட்ஜில் ரூம் எடுத்தேன். ஒரு கார் ஏற்பாடு செய்து அன்று முழுவதும் இலக்கில்லாமல் சுற்றினேன்.
இரவு ரூம்மிற்க்கு வந்து இன்றைக்கு செய்வதெல்லாம் நினைத்துப் பார்க்க பல கேள்விகள் வந்தது. எப்படி நான் அவளை கண்டுபிடிக்க போகிறேன்?
அடுத்த நாள் காலையில் எழுந்ததும் இனி தேவை இல்லாமல் சுற்றாமல். எப்படி இலக்கை அடைவது என ஆலோசித்தேன்.
புரியாத பாஷை, தெரியாத மனிதர்கள், முகவரி தெரியாத பெண். எப்படி கண்டுபிடிக்க.
இலக்கில்லாத வாழ்கையையே இன்று இலக்கை நோக்கி மற்றியவன் நான். ஆனால் இது மிகவும் கஷ்டமான சவால்.
எனக்கு தெரிந்ததெல்லாம்
பெயர் : வினா
வயது : 18
ஊர் : பி யில் துவங்கும்
மாவட்டம் : திருச்சூர்
இவ்வளவு தான் எனக்கு தெரியும். இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு போலிஸ் படையே இயங்கினாலும் கண்டுபிடிக்க முடியாது. பிறகு நான் எப்படி கண்டு பிடிக்க போகின்றேன்?
கேரளா டூரிசம் அலுவலகம் சென்றேன்.. அவர்களிடம் திருச்சூர் மாவட்டத்தின் போஸ்டல் புக் வாங்கினேன்.
அறைக்கு வந்தேன் பி யில் துவங்கும் கிராமங்களின் பெயர்களை தனியாக குறித்து வைத்தேன். சிறியதும் பெரியதுமாக சுமார் 300 க்கும் மேல் இருந்தது.
எனக்கு தலை சுற்ற துவங்கியது. ஒரு நாளைக்கு 3 ஊர்கள் என்றாலும் மூன்று மாதங்கள் எடுக்குமே எப்படி கண்டுபிடிக்க முடியும்?