15-12-2018, 08:43 PM
இப்படியான கணிக்கக்கூடிய காட்சி அமைப்பு இருக்கும் படங்களில் வசனங்கள்தாம் அதைக் காப்பாற்றும். ஆனால், இங்கே அதிலும் சறுக்கல். ஒரு 10 வருடத்துக்கு முன்பு வரவேண்டிய ரகங்களில் இருக்கின்றன மெலொடிரெமெட்டிக் காட்சிகள். ஒரு பக்கம் மெலோடிரெமெட்டிக் காட்சிகளும் த்ராபையான வசனங்களும் வெறுப்பேற்றுகிறது என்றால், இன்னொருபுறம் மார்வெல் படங்கள் போல நாங்களும் காமெடி செய்கிறோம் என நாயகன் ஜேசன் மொமொவை வைத்து ஏதோ செய்திருக்கிறார்கள். `இந்த இடம் மிகவும் வறண்டு இருக்கிறது, நீர் தேவை' என்றால் நாயகன் `சூ சூ' போயிருப்பேனே என்கிறார். கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க டிசி.
பின்னணி இசை, பிரமாண்ட விஷுவல் எஃபக்ட்ஸ் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. அக்வாமேனாக ஜேசன் மொமொவா நல்ல சாய்ஸ். அவரைத் தவிர இந்தக் கதாபாத்திரத்துகு வேறு யாரையும் நினைத்துவிட முடியாது. டாட்டூ உடம்போடு கேம் ஆஃப் த்ரோன்ஸின் கால் த்ரோகோ அப்படியே அக்வாமேனாக இருக்கிறார். மெராவாக ஆம்பர் ஹெர்ட் மற்றும் அட்லானாவாக நிக்கோல் கிட்மேன். ஆம்பர் ஹெர்ட் தான் படத்தின் கதையையே நகரச் செய்கிறார். அதேபோல் ஸ்டன்ட் காட்சிகளிலும் ஒதுங்கி நிற்காமல் புகுந்து விளையாடி இருக்கிறார். வாவ் ஆம்பர்!