15-12-2018, 08:42 PM
இதுவரை எடுக்கப்பட்ட மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களும் சரி, மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட சோனி, ஃபாக்ஸ் படங்களும் சரி, மூலக்கதையை மட்டுமே... அவ்வளவு ஏன், சில சமயம் கதாபாத்திரங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு திரைக்கதையில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்து சினிமாவாகக் கொடுப்பார்கள். இந்த DCEU மட்டும் இதற்கு நேர் எதிர். காமிக்ஸுக்கு நியாயம் செய்வதாக அதன் படங்கள் அமைந்திருக்கும் (`ஜஸ்டிஸ் லீக்' தவிர). இந்த காமிக்ஸ் அல்லது நாவலுக்கு நியாயம் சேர்க்கும் படங்கள் பாராட்டப்பட வேண்டியவைதாம். ஆனால் பிரச்னை என்னவென்றால், அது இன்று படம் பார்க்கும் அனைவருக்கும், முக்கியமாக காமிக்ஸ் விரும்பிகளுக்கு அது பார்த்துப் பழகிய கதையாகவே இருக்கும். எனவே, அதில் வேறு ஒரு கோணம் அல்லது புதிய அணுகுமுறை இருந்தால் மட்டுமே அது அனைவருக்குமான ஜனரஞ்சகப் படமாக அமையும். அக்வாமேன் காமிக்ஸுக்கு நியாயம் சேர்க்கும் வகை என்பதால் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் சுலபமாகக் கணித்து விடலாம். அதுவும் எந்தவித சுவாரஸ்யமுமின்றி படம், பல்வேறு நாடுகளுக்குப் பயணித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் Somewhere in, Somewhere in என டேக்லைன் வேறு. கதையைத் தவிர எல்லாமே வேகமாக நகர்கிறது.