17-08-2021, 09:11 PM
சில மாதங்கள் கழித்து -
நிஷாவுக்கு உயர் பதவிக்கான எக்ஸாம் ஒன்று எழுதவேண்டி வந்தது. சென்னையில் சென்டர். கொஞ்சம் preparation-ம் செய்யவேண்டி இருந்ததால் ஒருவாரத்துக்கு முன்பாகவே சென்னை போனால் நல்லாயிருக்கும் என்றாள் கதிரிடம்.
இவள் அங்கே போயாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று... டபுள் ஓகே என்றுவிட்டான் அவன்
கதிர், அவளையும் குழந்தைகளையும் சென்னையில் ட்ராப் செய்துவிட்டுப் போனான். அம்மாவின் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் நிஷா தலைகால் புரியாமல் ஓடிப்போய் அம்மாவை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
குழந்தைகளை பார்த்துக்கொள்ள அம்மா இருக்கிறாள். அப்பாடா.... என்று போய் கட்டிலில் விழுந்தாள்.
அபர்ணா சித்தி எப்படியிருக்காங்க?
நல்லாயிருக்காங்கடி
நீங்க ரெண்டு பேரும் செட் ஆகிட்டீங்களா
வேற வழி?
அவள் ஹேண்ட் பேகிலிருந்த மருந்துகள், ointment- களை பார்த்த பத்மா, என்னடீ இதெல்லாம்? என்க, நிஷா தனக்கிருக்கும் இடுப்பு வலி, கழுத்து வலி, காலில் ஏற்படும் பிரச்சினை என்று எல்லாவற்றையும் சொன்னாள்.
பத்மாவுக்கு வேதனையாக இருந்தது. இதெல்லாம் வயசான பிறகுதானே வரும், நீ இப்பவே சொல்றியேடி
தெரியலம்மா. இந்த சிசேரியனாலதான்னு நினைக்குறேன்... ரெண்டாவது டெலிவரிக்கு அப்புறம்தான் இவ்ளோ பிரச்சினையும்
பத்மா அவளிடம் டாக்டரை பாத்தீங்களா... என்ன சொன்னார்கள்.. என்று கேட்டுக்கொண்டிருக்க, நெற்றியை பிடித்தபடி, டயர்டா இருக்கும்மா என்று தூங்கிப்போனாள் நிஷா.
பத்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆடி, ஓடி, துள்ளித்திரிந்த பெண்... இப்போது வாழ்ந்து முடித்த பெண் போல... சோர்ந்து, துவண்டு முகத்தில் சிரிப்புக்கான களையே இல்லாமல் இப்படி வந்து கிடக்கிறாளே என்று கவலையாக இருந்தது.
ராஜ் இருந்தாலாவது கொஞ்சம் கலகலன்னு இருக்கும். மலர், ஆல்ரெடி ஆபிஸ் டென்ஷனோட வருவா.
ராஜ்ஜும் காமினியும் மும்பை போயிருந்தார்கள். மலர்தான் சென்னை அலுவலகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள், மோகனை கூப்பிட்டு மருந்துகளைக் காட்டினாள். பாருங்க நிஷாவோட நிலைமையை? என்றாள்.
கதிர் என்ன செய்வான் பத்மா. pregnancy முடிஞ்சதும் இவதான் ஒழுங்கா ரெஸ்ட் எடுக்காம ஸ்கூல், ட்யூசன், அது இதுன்னு அலைஞ்சிருக்கா. அங்க யார் ப்ளஸ் ஒன், ப்ளஸ் 2, காலேஜ்-னு வெளியூர்ல போய் சேர்ந்தாலும் இவதான் அலைஞ்சிருக்கா. இவளை யாரு அடுத்தடுத்து ரெண்டு பிள்ளைங்களை பெத்துக்க சொன்னது? குழந்தை வேணும் குழந்தை வேணும்னு ஒரே அலப்பறை. கடவுளா பார்த்து கொடுப்பாருன்னு இருக்கிறது கிடையாது
உங்ககிட்ட போய் கேட்டேன் பாருங்க, பொண்ணுங்க வேதனைகள் உங்களுக்கு எப்படி புரியும்?
பத்மா கடுப்போடு போய் சமைக்க ஆரம்பித்தாள். வாடிய பூவாய் கட்டிலில் கிடக்கும் நிஷாவைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது.