15-08-2021, 01:46 PM
(15-08-2021, 11:53 AM)Jhonsena Wrote: தயவுசெய்து எந்த ஒரு கதாசிரியரையும் ஒப்பிடாதீர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை ஓட்டம் இருக்கும் நீங்கள் ஒப்பிடும்போது அந்த கதையின் ஆசிரியருக்கு மனச் சங்கடம் கூட ஏற்படலாம் நீங்கள் கதை ஆசிரியர்களுக்கு பட்டம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தயவு செய்து அவர்களை காயப்படுத்தாதீர்கள்
எனது Favourite கதாசிரியர்களின் பட்டியலை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். மற்றபடி யாரையும் எவருடனும் ஒப்பிடவுமில்லை, பிற கதாசிரியர்களை காயபடுத்தவுமில்லை.
எந்த கதாசிரியரையும் விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை. பெரும்பாலும் குறிப்பிட்ட கதைகளையே அதிகளவு தேர்ந்தெடுத்து படித்து வந்த காரணத்தினால் மற்ற படைப்பாளிகளை அறிய எனக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே இத்தளத்தில் உள்ள நமது கதாசிரியர்கள் அனைவரும் சிறந்தவர்கள் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை..தங்களின் பொன்னான நேரத்தை மற்றவர்களுக்காக செலவிட்டு சேவைபுரியும் தன்னலமற்ற கதாசிரியர்களுக்கு நான் எப்போதும் தலை வணங்குகிறேன்.